123
 123

வெள்ளி 03 செப்டம்பர், 2010

Click here to bookmark this link.10:32 லைலத்துல் கத்ரின் சிறப்புகள்» www.thiruvai.com
மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)
1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி, அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
தமிழில்: அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ’83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். 
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக!
இஸ்லாம்கல்வி.காம்

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.09:10 உமாசங்கருக்கு மீண்டும் அரசுப் பணி» BBCTamil.com | முகப்பு | Tamil News index
ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீதான பணி இடைநீக்க நடவடிக்கையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.08:31 நோயுற்றவர்களுக்கு உதவுங்கள்.....» www.thiruvai.com
இன்ஸானிய அறக்கட்டளையால் நடத்தி வரும் Ash- Shifa சாதி மத பாகுபாடின்றி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கி வருகின்றது. இதுவரை 107-பேர் மருத்துவ உதவிக்காக பதிவு செய்துள்ளனர். அதில் 48- பேருக்கு இனியும் மருத்துவ உதவி வழங்க வேண்டியுள்ளது. இதற்கு முன் இந்த அறக்கட்டளையால் கேன்சர் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு மருத்துவ உதவி பெற்றவர்கள் தொடர்ந்து வாழ மேலும் உதவ கேட்டுள்ளனர். பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை மனதில் வைத்து இந்த அறக்கட்டளைக்கு உதவவும் பிறரிடம் உதவி செய்ய கேட்டுக்கொள்ளவும்  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"(திருக்குர்ஆன் 5:32)
"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு"(திருக்குர்ஆன் 4:85)

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.08:31 மேம்பாலம் திறப்பு விழா» CRESCENT WELFARE ORGANISATION (CWO)



பரங்கிப்பேட்டை To கிளை மேம்பாலம் திறப்பு விழா வருகின்ற 14-9-2010 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற இருக்கிறது.

தலைமை மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள்
அரசு நல திட்டங்களை வழங்குபவர்
தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர்

மேம்பாலம் திறப்பாளர் மாண்புமிகு வெள்ளைக்கோயில் சுவாமிநாதன் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் அவர்கள்

மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் பேருராட்சி
மன்ற தலைவர் மற்றும் பலர் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த மேம்பாலம் 21 கோடி ருபாயில் கட்டப்பட்டுள்து


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.08:19 'மீள்குடியேறியும் வாழ்வாதாரம் இல்லை'» BBCTamil.com | முகப்பு | Tamil News index
இலங்கையில் வவுனியா புனர்வாழ்வு தடுப்பு முகாமிலிருந்து விடுதலையான ஊனமுற்ற விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒரு சாரார் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.08:14 பந்தய ஊழல்: ஐ.சி.சி. கவலை» BBCTamil.com | முகப்பு | Tamil News index
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது தற்போது தெரிவிக்கப்படும் பந்தய ஊழல் குற்றச்சாட்டுகள் கிரிக்கெட் மீது பத்து ஆண்டுகளில் இல்லாத களங்கம் என்று ஐ.சி.சி. கூறியுள்ளது
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.08:00 ரமலான் நோன்பு - குரான் ஷரீஃபின் வசனம் - இணைப்புகள்» அமைதி இல்லம்
குரான் ஷரீஃப்

2வது அத்தியாயம் - ஸூரத்துல் பகறா (பசு மாடு)

62வது வசனம்

ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

*******************************************************
மேலே உள்ள வசனம் இஸ்லாம் எப்படி இஸ்லாம் அல்லாத மற்ற நம்பிக்கையாளர்களை அணுகுகிறது என்பதற்கு ஒரு சான்றாகும்.

அத்தோடு அந்த வசனத்தில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்ற பெரும்பான்மையானவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையோடு ஸாபியீன்கள் என்ற நம்பிக்கையாளர்களையும் சேர்த்துக் கொள்கிறது. - ஸாபியீன்களை பற்றிய ஒரு கட்டுரை இதோ:
http://maviboncuk.blogspot.com/2006/12/sabians-yazdnism-and-alevism.html

இந்த சாபியீன்கள் என்ற குறைவான எண்ணிக்கையில் இருந்த (ஸாபியீன்கள் என்பது யூத, கிறிஸ்தவ நம்பிக்கை அல்லாத மற்ற அனைத்து நம்பிக்கையாளர்களையும் உள்ளடக்கியது என்பது ஒரு சாராரின் கருத்தாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது) போதிலும் குரான் ஷரீஃபின் இந்த குறிப்பிட்ட வசனத்தில் அவர்களையும் சேர்த்து கொண்டதிலிருந்து  இஸ்லாத்தின் உலகலாவிய அரவணைப்பும் மிகுந்த கருணையுடைய இறைவனின் பேரன்புமே பிரதிபலிக்கின்றது.
மேலும், இந்த வசனம் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் முஸ்லீம் தீவிரவாதிகள் என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் சகோதரர்களிடத்திலே தோலில் கை போட்டு இஸ்லாம் தனது Religious Toleranceஐ பற்றி சொல்லிக் கொள்கிறது.

*******************************************************

ஒரு முஸ்லீம் அல்லாதவரின் ரமலான் மாத அனுபவங்கள்:

http://www.facebook.com/group.php?gid=148359471843894&v=app_2373072738#!/group.php?gid=148359471843894&v=wall

ஆரன் என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சகோதரரின் நோன்பு:

http://pthree.org/2010/08/09/looking-forward-to-ramadan/

இவர்களுக்கு இவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு என்று நம்புவோமாக..

**********************************************************
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:21 'சூரியனையோ சந்திரனையோ கேட்கவில்லை'» BBCTamil.com | முகப்பு | Tamil News index
தமிழ் மக்கள் நடைமுறைச் சாத்தியமான விடயங்களையே கோருகின்றனர் என்று படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் அமைச்சர் தேவானந்தா கூறியுள்ளார்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:10 'கிளிநொச்சி மாவட்டம் முக்கியம்'-பசில்» BBCTamil.com | முகப்பு | Tamil News index
இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிக முக்கியமானது என ஐனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:07 "வரையறைக்கு உட்பட்டே இந்தியா செயற்படும்"» BBCTamil.com | முகப்பு | Tamil News index
தனது வெளியுறவுக் கொள்கைக்கு பாதகமற்ற வகையில் தான் இலங்கை பிரச்சினையில் இந்தியா செயற்படமுடியும் என்பதை இலங்கை தமிழ்க் கட்சிகள் உணரவேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் கூறினார்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:02 ஜகாத் கடமை பற்றிய குத்பா பயான்» OPJ.அமீன் லால்பேட்டை
ஜகாத் பற்றிய விளக்கம் லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஜாமிஆ மன்பவுல் அன்வார் முஃப்தி காரி அல்ஹாபிஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் ஆற்றிய உரை ஆடியோ ஆடியோ கேட்க இங்கே சொடுக்கவும் நன்றி :-லால்பேட்டை.காம்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:11 “குற்றம் பார்க்கின் குடும்பம் இல்லை!” சகோ.மன்சூர் அலி அவர்களின் உரை» நீடூர்ஆன்லைன்.காம்
Click here to bookmark this link.06:02 உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட்டின் பாப்புலர் பிரண்டின் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது : பாப்புலர் பிரண்டின் மாநில தலைவர் அறிக்கை» ADIRAI VOICE
அண்மையில் முதல்வர் அவர்கள் நடத்திய கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் உளவுத்துறை ஐ. ஜி. ஜாபர் சேட் கூறியதாக 5.9.2010 ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியானது
தடை செய்யப்பட சிமி என்ற இயக்கத்தின் மறுபதிப்புதான் பாப்புலர் பிரண்ட் என்றும் கோவை, மதுரை, நாகை, திண்டுக்கல் ஆகிய ஏரியாக்களில் இவர்களால் மதப்பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது .

பாப்புலர் பிரண்டிற்கும் சிமி என்ற இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை,

மேலும் மதப்பிரச்சினை ஏற்ப்பட வாய்ப்பு என்கின்றார் .
மதப்பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நச்சு எண்ணம் பாப்புலர் பிரண்டின் சித்தாந்தந்திலோ, செயல்பாட்டிலோ இல்லாத ஒன்று என்பதற்கு தமிழகத்தில் மனித நீதி பாசறை யாகவும் தற்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவாகவும் செயல்பட்டு வரும் கடந்த 11 வருட கால செயல்பாடுகளே சாட்சியாக இருக்கின்றது .
மேலும் ஒரு கண் வைக்க வேண்டும் என்றிருக்கிறார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுமார் 11 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது . தமிழக உளவுத்துறை ஒரு கண்ணை கொண்டு மட்டுமில்லாமல் மொத்த கண்களை கொண்டும் பாப்புலர் பிரண்டை பார்த்தாகி விட்டது . இதற்கு மேலும் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை . பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முஸ்லிம் சமூகத்தை அனைத்து துறைகளிலும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து செயல்படும் ஒரு சமூக இயக்கம் என்பதை தவிர வேறொன்றுமில்லை


எனவே மக்கள் பேரியக்கமான பாப்புலர் பிரண்டின் கண்ணியத்தை சீரழிக்கும் வகையில் உளவுத்துறை ஐ ஜி ஜாபர் சேட் அவர்கள் கூறியிருப்பது உண்மைக்கு மாற்றமானது , அடிப்படை ஆதாரமில்லாதது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .


நீதிக்காக பாப்புலர் பிரண்டின் போராட்டம் தொடரும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

இப்படிக்கு
மு முஹம்மது அலி ஜின்னா
மாநில தலைவர்

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:02 விபச்சாரம் செய்தபோதும் விரும்பி வந்து தண்டனை ஏற்ற இறையடியார்!» ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஜாபிர்(ரலி) அறிவித்தார்;


பனூஅஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(ஸல) அவர்கள் அவரை விட்டு  தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது அவரிடம் நபி(ஸல) அவர்கள், 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை' என்றார். எனவே நபி(ஸல்) அவர்கள், அவருக்கத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.
நூல்;புஹாரி எண் 6820
 
மற்றொரு அறிவிப்பில்,
 
மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், '(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!' என்றார்கள். அவர், '(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் 'அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?' என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
ஆதாரம்; புஹாரி எண் 6824
 
அன்பானவர்களே! சஹாபாக்கள் சாமான்யர்கள்; அவர்கள் பல்வேறு குற்றங்களை செய்தவர்கள் என்று சஹாபாக்களை விட தம்மையும், தமது கருத்தையும் முன்னிலைப்  படுத்துபவர்கள் இடும் பட்டியலில் மாயிஸ்[ரலி] அவர்களின் மேற்கண்ட சம்பவமும் இடம்பெற்றிருக்கும். ஆனால், உண்மை நிலை  என்ன..?
 
சஹாபாக்கள் இயன்றவரை பாவம் செய்வதை தவிர்ந்து வாழ்ந்தவர்கள். இருப்பினும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடத்தில் தப்பித்தவறி தவறு ஏற்படுமேயானால், அந்த தவறுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனையைக் குறித்து அஞ்சியிருக்கிறார்கள். மறுமைத் தண்டனையை விட  இம்மையில் கிடைக்கும் தண்டனை இலகுவானது என்று எண்ணி, தாமாக விரும்பி வந்து தண்டனையை  ஏற்றுள்ளார்கள் என்பதற்கு மேற்கண்ட மாயிஸ்[ரலி] அவர்களின் சம்பவமே சான்று. மாயிஸ்[ரலி] அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர் அல்ல. மாறாக,
 
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் இறையச்சம்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்களை நோக்கி இழுத்து வந்தது. அங்கே மாயிஸ்[ரலி] குற்றத்தை சொல்லி தண்டனை கேட்டபோது, மாயிஸ்[ரலி] அவர்களின் நற்குணத்தை அறிந்த  நபியவர்கள்,
 
'உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ்[ரலி] அவர்களை திருப்பி அனுப்ப முயற்ச்சிக்கிறார்கள். இறுதியாக மாயிஸ்[ரலி] அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால்தான் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
 
தான் செய்த பாவத்தை யாரும் பார்க்காத நிலையிலும், இறைவன் பார்க்கிறான் என்ற அச்சத்தில் ஒரு வேதனை மிகுந்த தண்டனையை  ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அனால் இன்றைக்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர் அதை ஏற்க மனமின்றி 'சப்பைக்கட்டு'  கட்டுவதைக் காண்கிறோம்.  காரணம் நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டால் இந்த உலகில் நம்முடைய 'இமேஜ்' அடிபட்டுப் போகுமே என்று கருதுகிறர்கள்.
 
ஆனால் சஹாபாக்கள் இந்த உலகில் தமது 'இமேஜ்' பாதிக்கப்படுவதையோ, அல்லது தண்டனையின் வேதனை குறித்தோ அஞ்சவில்லை. மாறாக மறுமையின் விசாரணையும், அவமானத்தையும், வேதனையையும் குறித்தே அஞ்சினார்கள். அன்று அவர்கள் விரும்பி ஏற்ற தணடனை இன்று அவர்களை சரித்திர புருஷர்களாக பலநூறு ஆண்டுகள் கடந்த பின்னும் நினைவு கூற செய்கிறது. எனவேதான் அந்த நல்லறத்  தோழர்களின் இடத்தை ஒருபோதும் நாம் எட்டிட முடியாது எனபது திண்ணம்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக!
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:01 காரைக்காலில் நடந்த கொடுமை!» அதிரை எக்ஸ்பிரஸ்
பள்ளிவாசல் கட்ட பூஜைஒரு சகோதரர் காரைக்காலில் பள்ளிவாசல் கட்டுவதற்காக பூஜை நடத்தப்பட்டதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது குறித்து காரைக்கால் மக்களுக்கு மிகப்பெரும் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:05 உணவு விலையேற்றம்: ஐ.நா. கூட்டம்» BBCTamil.com | முகப்பு | Tamil News index
உலகில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவரும் நிலையில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் விவசாயக் கழகம் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:01 இறைத்தூதர் [ஸல்] வெறுத்த உணவு எனக்கும் வெறுப்பானதே!» ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் [மதீனா வந்த போது] எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி[ஸல்] அவர்கள் கீழ் தளத்திலும், நாங்கள் மேல் தளத்திலும் தங்கியிருந்தோம்.  ஓர் இரவில் நான்  உணர்வு பெற்று, நாம் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் தலைக்கு  மேலாக நடமாடுவதா..? என்று சொல்லிக்கொண்டு [தலைக்கு  நேரான பகுதியை தவிர்த்து] மற்றொரு பகுதியில் [நானும் எனது வீட்டாரும்] இரவைக் கழித்தோம்.

பின்னர் நபி[ஸல்] அவர்களிடம் சொன்னபோது அவர்கள், 'கீழ் தளமே மிகவும் வசதியானது' என்று கூறினார்கள். நான் 'நீங்கள் கீழே இருக்க நான் மேலே இருக்கமாட்டேன்' என்று கூறினேன். எனவே நபி[ஸல்] அவர்கள்  மேல்தலத்துக்கும், நான் கீழ்தளத்திற்கும் இடம் மாறிக்கொண்டோம்.

நான் நபி[ஸல்] அவர்களுக்காக உணவு தயாரித்தேன். அது [நபி[ஸல்] அவர்களிடம் சென்றுவிட்டு] என்னிடம் கொண்டுவரப்பட்டபோது, [உணவுப் பாத்திரத்தில்] நபி[ஸல்] அவர்கள் விரல் பட்ட இடத்தைப் பற்றிக்கேட்பேன். அவர்கள் விரல்பட்ட இடத்தைக் கண்டறிந்து  அந்த இடத்தில்  நான்  சாப்பிடுவேன்.

இவ்வாறாக  [ஒருநாள்] வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவைத் தயாரித்தேன். [நபி[ஸல்] அவர்களிடம்  சென்றுவிட்டு] அது திருப்பிக் கொண்டுவரப் பட்டபோது, நபி[ஸல்] அவர்களின் விரல்பட்ட இடத்தைக் கேட்டேன். அப்போது நபி[ஸல்] அவர்கள் உண்ணவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. அதைக் கேட்டு  நான்  பதறினேன்.

மேல்தளத்திற்கு சென்று அது[வெள்ளைப்  பூண்டு உணவு] தடை செய்யப்பட்டதா..? என்று நபி[ஸல்] அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. ஆயினும் நான் அதை விரும்பவில்லை என்று கூறினார்கள்.

'அவ்வாறாயின் தாங்கள் வெறுப்பதை அல்லது வெறுத்ததை நானும் வெறுக்கிறேன் என்று கூறினேன்'. அப்போது நபி[ஸல்] அவர்களிடம் [வேத அறிவிப்பு] வந்துகொண்டிருந்தன.

ஆதாரம்; முஸ்லிம்.

அன்பானவர்களே! இந்த பொன்மொழி, இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது அருமை சஹாபாக்கள் கொண்டிருந்த நேசத்திற்கு மற்றொரு சான்றாகும். இதில் சம்மந்தப்பட்ட அபூ அய்யூப்[ரலி] அவர்கள் நபியவர்கள் மீது கொண்ட அபரீதமான மதிப்பும், நேசமும் வெளிப்படுவதைக் காணலாம். இறைத்தூதர் [ஸல்] அவர்களுக்கு மேலாக நாம் தங்குவதா; அவர்களின் தலைக்கு  மேலாக நாம் நடமாடுவதா என்று அஞ்சியதாகட்டும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் பூண்டு சம்மந்தப்பட்ட உணவை சாப்பிடாதது கண்டு பதறியதாகட்டும், மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு, இறைத்தூதர்[ஸல்]  அவர்கள் மனம் விரும்பாத ஒரு உணவு தனக்கு தடையில்லை என்றாலும், அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமில்லாத உணவு எனக்கும் வெறுப்பானதே  என்று முடிவெடுத்ததாக்கட்டும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கரம்பட்ட இடத்தில் உண்ணும் அந்த பாங்காகட்டும்; இவையெல்லாம் அபூ அய்யூப்[ரலி] அவர்களின் பண்பையும், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது கொண்ட நேசத்தையும் பதிவு செய்யும் வரலாற்று சுவடுகள்.

ஆம்! அந்த இனிய தோழர்களுக்கு இன்பம் என்றால் இறைத்தூதரின் சிரிப்பும்; துன்பம் என்றால், இறைத்தூதரின் வாட்டமும் தானே!
அல்லாஹ் அந்த தோழர்களை பொருந்திக் கொள்வானாக!
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.03:37 அல்அய்ன் வாழ் லால்பேட்டை நண்பர்கள் கவனத்திற்க்கு...!» லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
வழக்கம்போல் இவ்வருடம் ஸதகத்துல் ஃபித்ர் தொகையை நமதூர் ஏழை மக்களுக்காக அனுப்ப இருப்பதால்,தங்களின் தொகையை கீழ்கண்டவர்களிடம் வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

J. நூருல் அமீன். 0501393918
T.முஹம்மது.      0503377197
நிர்வாகிகள்,
 
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.03:31 கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் குறவர் இன இளைஞர் அடித்துக் கொலை: போலீசாரை கைது செய்ய கோரிக்கை!» புதுவை கோ.சுகுமாரன்
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரபா. கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம். நிஜாமுதீன்,  தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் பெ. கிருஷ்ணமூர்த்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கடலூர் பொறுப்பாளர் இரா. பாபு, மக்கள் கண்காணிப்பகம் பொறுப்பாளர் ஆ. ஜெயராமன் ஆகியோர் 03.09.2010 அன்று கட்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் குறவர் வகுப்பைச் சேர்ந்த ரவி என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பவத்தோடு தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து, உடனடியாக அனைவரையும் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

நடந்த சம்பவத்தின் சுருக்கம்:

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், தாண்டவன்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த குறவர் வகுப்பைச் சேர்ந்த ரவி (வயது: 38), த/பெ. கலியன் என்பவரை, கடந்த 16.08.2010 அன்று இரவு 1.00 மணியளவில், கடலூர் மாவட்ட போலீசார் சுமார் 7 பேர், அவரை அடித்து உதைத்து, ஒரு டாடா சுமோ காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த அவருடைய மனைவி கஸ்தூரி (வயது: 30) எதற்காக என் கணவரை இழுத்துச் செல்கிறீர்கள் எனக் போலீசாரிடம் கேட்டதற்கு அவரை தகாத வார்த்தைகள் கூறி மிரட்டியதோடு, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கலியையும், மேலும் பீரோவில் இருந்த நகைகள், பன்றி விற்று வைத்திருந்த ரூ. 40 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனர். போலீசார் அனைவரும் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்துள்ளனர். மேலும், மேற்சொன்ன ரவியை எங்குக் கொண்டு செல்கிறோம் என்பதைப் பற்றிய தகவல் எதையும் போலீசார் தெரிவிக்கவில்லை.     

 இந்நிலையில், 17.08.2010 அன்று இரவு சுமார் 1.00 மணியளவில், தாண்டவன்குப்பத்தில் உள்ள ரவியின் வீட்டிற்கு சுமார் 7 போலீசார் சென்றுள்ளனர். அதில் ஒரு போலீஸ்காரர் தவிர அனைவரும் சீருடை இல்லாமல் இருந்துள்ளனர். அங்கு இருந்த ரவியின் மனைவி கஸ்தூரியிடம் உன் வீட்டுக்காரரை ஒப்படைக்க வேண்டும், இந்த தாளில் கையெழுத்துப் போடு என்று கேட்டு மிரட்டுயுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவரை தகாத வார்த்தைகள் கூறி முதுகில் குத்தியுள்ளனர். போலீசுக்குப் பயந்துக் கொண்டு கஸ்தூரி அந்த தாளில் கையெழுத்துப் போட்டுள்ளார். மேலும், அந்த போலீசார் கஸ்தூரியிடம் மறுநாள் காலை கடலூருக்கு வந்து அவரது கணவர் பாடியைப் பெற்றுக் கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளனர். பின்னர், கஸ்தூரி 19.08.2010 அன்று சென்னை சென்று தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தினர் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட ஆலோசனை செய்துவிட்டு கடலூர் திரும்பியுள்ளார். 

 20.08.2010 அன்று கடலூர் அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது, தன் கணவரது உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்து முடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்வதற்கு முன்னர் தன் கணவரது உடலைப் பார்ப்பதற்குக்கூட போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர், அன்றைய தினம் மாலையே தனது கணவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பரிந்தல் என்ற கிராமத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

 இதனிடையே, 18.08.2010 அன்று மாலை 3.30 மணியளவில், சாத்திப்பட்டு கிராமத்தில் உள்ள முந்திரிதோப்பில் போலீஸ் காவலில் இருந்து மேற்சொன்ன ரவி தப்பி ஓடும் போது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார் என காடாம்புலியூர் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றை போலீசார் பதிவுச் செய்துள்ளனர். குற்ற எண். 351/10 குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 176 (1-A). பாதிக்கப்பட்ட ரவியின் மனைவி தன் கணவரைப் போலீசார் அடித்துக் கொலை செய்துவிட்டனர் எனப் புகார் அளித்துள்ளார். தற்போது பண்ரூட்டி நீதித்துறை நடுவர் எண். 2-ன் நீதிபதி ஈஸ்வரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

எமது விசாரணையில் தெரிய வந்த உண்மைகள் / பார்வைகள்:

விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விழுப்புரம் – கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் ஒரு போலீஸ் விசாரணைக் குழு ஒன்றை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசானமுத்து அமைத்துள்ளார். இக்குழுவில் கடலூர் மாவட்டத்தில் இருந்து பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட பல போலீசார் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் உள்ள மேற்சொன்ன போலீசார் தான் மேற்சொன்ன ரவியை அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்று நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் வைத்து கடுமையாகத் தாக்கிச் சித்த்ரவதைச் செய்துள்ளனர். சித்தரவதைத் தாங்க முடியாமல் மேற்சொன்ன ரவி காவல் நிலையத்திலேயே இறந்துப் போய் உள்ளார். மேலும், ரவியின் உடம்பில் பல் இடங்களில் காயம் இருந்துள்ளதை அவரது உறவினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் பார்த்துள்ளனர்.

மேற்சொன்ன கொள்ளை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ரவியின் தம்பி 1) கெடிலத்தைச் சேர்ந்த ரமேஷ் (32), த/பெ. கலியன், அவரது உறவினர்களான 2) சுந்தரமூர்த்தி (30), த/பெ. கலியபெருமாள், 3) வடக்கு இருப்பைச் சேர்ந்த ஜெயராமன் (35) த/பெ. முனுசாமி, 4) பாலா (25) த/பெ. முனுசாமி, 5) காட்டுக்கூடலூரைச் சேர்ந்த கொளஞ்சி (30) த/பெ. மாயவன், 6) நெய்வேலி 1-ஆம் பிளாக்கைச் சேர்ந்த விஜயக்குமார் (23), த/பெ. ராமலிங்கம், 7) ராமலிங்கம் (60) த/பெ. குப்பன், 8) புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த ஆனந்தஓளி (24) த/பெ. மாயவன் ஆகியோரையும் மேற்சொன்ன போலீசார் பிடித்துச் சென்று நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்துள்ளனர். ரவியை போலீஸ் காவல் வைத்து அடித்துச் சித்தரவதைச் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்சொன்ன அனைவருமே நேரடியாக பார்த்துள்ளனர். இந்த காவல்நிலைய மரணத்திற்கு மேற்சொன்ன இவர்கள் அனைவருமே கண்ணுற்ற சாட்சிகள் ஆவர். தற்போது இந்த 8 பேர் மீதும் போலீசார் பொய் வழக்குப் போட்டு அனைவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ரவியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய டி. கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகளில் ஒன்றைக்கூட போலீசார் பின்பற்றவில்லை. 

மேற்சொன்னவற்றின் அடிப்படையில் பார்த்தால் பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம்  உள்ளிட்ட 10 போலீசார் தான் இந்த காவல் நிலைய கொலைக்குக் காரணமானவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.

குற்றமிழைத்த போலீசார் தங்கள் மீதான சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 22.08.2010 அன்று இளவனாசூர் கோட்டையைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவி திலகவதியின் கணவர் சேனாதிபதி மூலம் போலீசார் பரிந்தலில் உள்ள கொல்லப்பட்ட ரவியின் அண்ணன் தண்டபாணியிடம் ரூ. 2 லட்சம் கொடுத்துவிடுகிறோம், இத்தோடு இந்த பிரச்சனையை விட்டுவிடுங்கள் எனக் கூறி பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து, பண்ரூட்டி நீதித்துறை நடுவர் விசாரணையின் போது தண்டபாணி புகார் கூறியுள்ளார். 

அதோடு மட்டுமல்லாது, பண்ரூட்டி நீதித்துறை நடுவர் விசாரணையை சீர்குலைக்கும் வேலையிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொல்லப்பட்ட ரவியின் மனைவி கஸ்தூரிக்கு பண்ரூட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து 25.08.2010 அன்று மதியம் 3.00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை வந்துள்ளது. இந்நிலையில், 24.08.2010 அன்று இரவு காடாம்புலியூர் போலீசார் ஒருவர் மேற்சொன்ன கஸ்தூரியை தொலைபேசியில் அழைத்து பண்ரூட்டி நீதிமன்றத்திற்கு விடுமுறை. விசாரணை வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு வர வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், 28.08.2010 அன்று மேற்சொன்ன இளவனாசூர் கோட்டையை சேர்ந்த சேனாதிபதியுடன் இரண்டு போலீசார் பரிந்தலில் உள்ள ரவியின் அண்ணன் தண்டபாணியின் வீட்டிற்குச் சென்று ரூ. 2 லட்சம் தருவதாக மீண்டும் அவரிடம் பேரம் பேசியுள்ளனர்.

மேலும், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் இந்த வழக்கின் கண்ணுற்ற சாட்சிகளில் ஒருவரான கொல்லப்பட்ட ரவியின் தம்பி ரமேஷை போலீசார் சிறையில் மனு எதுவும் போடாமல் சட்டவிரோதமாக சந்தித்து, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக் கூடாது, நீதிபதி முன்பு சாட்சியம் அளிக்கக் கூடாது என  மிரட்டியுள்ளனர்.

ரவியை காவல்நிலையத்தில் அடித்து சித்தரவதை செய்துக் கொலை செய்த போலீசார் மீது எந்த ஒரு சிறு நடவடிக்கையும் இதுநாள் வரையில் எடுக்காததுதான் குற்றமிழைத்த போலீசார் இதுபோன்று சாட்சியங்களை அழிப்பதும், சாட்சிகளை மிரட்டுவதும் என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்படுவதற்குக் காரணம்.  
      

எமது கோரிக்கைகள்:

1)    ரவியை அடித்துச் சித்தரவதை செய்து கொலை செய்த பண்ரூட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் உள்ளிட்ட 10 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவுச் செய்து கைது செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு உடனடியாக மாற்ற வேண்டும். 

2)    குற்றமிழைத்த போலீசார் தங்கள் பதவியைப் பயன்படுத்தி சாட்சியங்களை அழிப்பதும், சாட்சிகளை மிரட்டுவதும் தடுக்கப்பட உடனடியாக மேற்சொன்ன போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் மீது துறை விசாரணைக்கு உத்தரவிட்டு அனைவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

3)    பாதிக்கப்பட்ட ரவியின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது பிள்ளகளின் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும்.

4)    ரவி கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். பொய் வழக்கில் சிறையில் உள்ள ரவியின் உறவினர்களான இந்த வழக்கின் கண்ணுற்ற சாட்சிகள் 8 பேர் மீதான வழக்கைத் திரும்ப்ப் பெற்று, அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும்.

5)    குற்றவாளிகளை அடையாளம் காணும் பொருட்டு சிறையிலிருக்கும் கண்ணுற்ற சாட்சிகளைக் கொண்டு உடனடியாக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும்.

6)    திருட்டு வழக்குகளில் போலீசார் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர், குறவர் போன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகளாக பாவித்து விசாரணைக்கு அழைத்துச் செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சமூகத்தையே குற்றவாளியாக கருதுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

7)    ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய டி. கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள 11 கட்டளைகளைப் போலீசார் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பின் போது, கொலை செய்யப்பட்ட ரவியின் மனைவி கஸ்தூரி மற்றும் அவரது நான்கு பிள்ளைகளும் உடன் இருந்தனர். 
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.03:31 புர்க்கா..» முதுவை ஹிதாயத்
புர்க்கா..

அஸ்ஸலாமு அலைக்கும்,


குறைந்துவிட்ட ஆடையால்
கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு;
மறைக்க வேண்டியவையை
மறந்துவிட்டப் பரிதாபம்!

அரைகுறை ஆடையில்
எல்லாமே விலகும்;
முன்னேறிவிட்டோமென்று
முரசுக் கொட்டும் உலகம்!

போர்திக்கொண்டுப் போகும் எம்
சகோதிரியைக் கண்டு
பொறுக்கவில்லையோ
பொருக்கி உனக்கு!

ஒழுங்கான ஆடையில்
உலா வரும் ஒரேச் சமுதாயம்;
படையுடன் வந்து தடைப்போட்டாலும்
நடைப்போடமாட்டோம் வீதியிலே;
மரணம் வந்தாலும்
மானம் காப்போம் தரணியிலே!

வரமாட்டோம் ஒருநாளும்
அரைகுறைக்கு – காலமெல்லாம்
கட்டுப்படுவோம் இறைமறைக்கு!!

-யாசர் அரஃபாத்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.

வியாழன் 02 செப்டம்பர், 2010

Click here to bookmark this link.20:01 ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமமான ஒருநாள்!» இறுதி இறை வேதம்!
70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய - வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக)
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.18:52 ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-26)» இஸ்லாம்குரல்.காம்
26. பொறுமையே சிறந்த செல்வம் ஹதீஸ் 26: அபூ ஸயீத் – அல்குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்ஸாரிகளில் சிலபேர் நபி(ஸல்) அவர்களிடம் பொருளுதவி கேட்டார்கள். நபியவர்களும் வழங்கினார்கள். மீண்டும் கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் வழங்கினார்கள். இறுதியில் நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டன. இவ்வாறாக தங்கள் கைவசம் இருந்த அனைத்தையும் (இறைவழியில்) நபியவர்கள் செலவு செய்து விட்டபொழுது அந்த அன்ஸாரிகளிடம் சொன்னார்கள்: ஏதேனும் செல்வம் என்னிடம் வந்தால் நான் அதை உங்களுக்குத் தராமல் சேமித்து வைக்க மாட்டேன். ஆனால் [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.17:55 ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம்: ஒபாமா» தமிழ் இஸ்லாம் அரங்கம்
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். பேரழிவு ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், ஈராக் மீது 2003 ஆம் ஆண்டு படையெடுத்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா, போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகள் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.15:55 ஈத்-பெருநாள் கொண்டாட்டம்!» annajaath.com
அபூ அப்தில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத பெண்கள் கூட இரவல் ஆடையை வாங்கி அணிந்து கொண்டு பெருநாள் [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.15:01 மஞ்சப்பம்» சோனகன் சிந்தனைகள்




தலைப்பை பார்த்தவுடன் எங்க இருக்கு இந்த குப்பம் என குழப்பமடைய வேண்டாம், தெண்னிந்தியர்களின் விருப்ப உணவான ஆப்பத்தின் வகைகளில் ஒன்றுதான் இது, கீழக்கரையில் நோண்பு காலங்களில் வயித்து நோண்பு பிடிப்பவர்களின் வரப்பிரசாதம். துபாய் கராமாவில் இருக்கும் சிம்ரன் ஆப்பக்கடையில் கிடைக்கும் சாதா ஆப்பம், கோழி ஆப்பம், மட்டன் மசாலா ஆப்பம், முட்டை ஆப்பம் போன்று இந்த மஞ்சள் ஆப்பம் ஒரு வகை. என் சின்ன வயதில் நோன்பு கால உச்சி நேரத்தில் கொதிக்க கொதிக்க முருங்கை கீரை கலந்து மனம் வீசி பனை ஓலை பெட்டியில் வரும் இந்த மஞ்சப்பத்தை டோர் டெலிவரி செய்யும் இடியப்பக்காரா நூர்ஜான் லாத்தாவை வழி மீது விழி வைத்து காத்திருந்தது ஒரு கனா காலம்தான். 

இந்த அப்பம் பற்றி ஆராய்ச்சி செய்ய போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட 2500 வருடங்களாக தமிழர்க்ளால் சுடப்பட்டு, பெரும்பாலும் காலை உணவாகி வருவதாக அறியப்படுகிறது, சோழ மன்னரான கரிகால் சோழனுக்கு தஞ்சை சமையல்காரர்கள் ரெகுலராக பறிமாறியதாகவும், பின்பு சரபோஜி மன்னர்கள் இதை விரும்பி சாப்பிட்டதாகவும் செய்தி உண்டு.

இதனை தமிழர்கள் ஆப்பம் என்றும், கேரளாவில் அப்பம் என்றும் (கீழக்கரையிலும் அப்பம்தான் - மலபாரில் இருந்து வந்த ஏதோ ஒரு தங்களின் கைங்காரியத்தால் வழக்கு மொழிந்து போயிருக்கலாம்), இலங்கையில் ஆப்பா என்றும் அழைக்கிறார்கள். என்றாலும் கேரளாவில் இதன் மவுசு தனி, ஆப்பத்துடன் கூடிய கடலையோ, பருப்போதான் பெரும்பான்மையான் கேரள மக்களின் காலை உணவாகிறது,அது சேட்டன் நடத்தும் தட்டுக் கடையோ அல்லது இக்கா நடத்தும் ஹோட்டலோ, சிரியன் கிருஷ்டினும், மலப்புர முஸ்லீமும், நாயருக்கும் கூட இது சமரசம் உலவும் இடம்தான். தமிழகத்தில், செட்டி நாட்டு சமையலில் பாலப்பம், தேணப்பம் ,குழியாப்பம் என்ற இனிப்பு வகைகள் உன்டு செட்டி நாட்டு ஆச்சிகளின் கைப்பக்குவத்தில் இதன் சுவை வெகு அலாதியானதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

அது போல நெய்யப்பம், கல் அப்பம் , இடியப்பம் என்ற வகைகள் கேரளா முதல் மலேசியாவரை விரும்பி சுவைக்கப்படுகிறது, சென்னை நுங்கம்பாக்கம் குமாரகம் உணவகத்தில் இந்த வகை ஆப்பங்கள் வெகு நேர்த்தியாக சமைக்கப்படுகிறது, மீன் குழம்புடனான் இதன் காம்பினேசன் அருமையானது. இதே போல் அபுதாபி மெரீனா க்ளப்பில் உள்ள நல்லுக்கட்டு ரெஸ்டாரன்டில் கண்முன்னே சுடப்பட்டு வழங்கப்படும் அப்பம் இங்கு வாழும் நம்மவர்களல் பெரிதும் விரும்பப்படுகிறது.

ஆப்பம் பற்றி ஏராளமான கதைகள் உன்டு, என் பால்ய வயதில் எந்த கதையை சொல்லத் தொடங்கினாலும் ஒரு பாட்டி ஆப்பம் சுட்டுக்கொண்டு.... என்றோ அல்லது ஒரு ஆப்பக்காரி என்றோ என்றுதான் தொடங்கும், அறிஞர் அண்ணா அவர்களின் பல குட்டிக்கதைக்ளில் ஆப்பம் சுடுபவர்கள் வறியவர்களாக காணப்படுகிறார்கள் அது அந்த சூழ் நிலையில் உணரப்பட்ட விஷயமாக இருக்கலாம். 

சமீபத்திய செய்தியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பறிமாறப்பட்ட ஆழவார் ஆப்பத்துடன், போக்கிரி சிக்கனை நடிகை அசீன் விரும்பி சாப்பிட்டாராம் சரி அசீன் கேரளாவை சேர்ந்தவர், லீடிங் நடிகை தமானா ஒரு நார்த் இன்டியன் அவரும் ஒரு ஆப்பப் பிரியயை பார்க செரட்டன் தக்க்ஷின் ரெச்டாரன்டில் கிடைக்கும் தேங்காய்ப்பால் ஆப்பம் என்றால் உயிராம். இலகுவாக செறிக்கும் குணம் ஆப்பத்தில் இருப்பது இதனை வெகுவாக விரும்புவதற்கான காரனமாக இருக்கலாம். 

மஞ்சப்பம் சுடலாம் என்று ஒரு நாள் நன்பர் அமீன் முயற்சி செய்து சுட்டும் விட்டார், ஆனால் தட்டில் வந்தது நான் எதிர்பார்த்த மஞ்சப்பம் இல்லை, மஞ்சளாக இருந்து ஆனால் தோசை டைப்பாக உருவாக்கப்பட்டிருந்து, நீண்ட விவாதத்திற்கு பின் அது நாகை மாவட்டத்தில் பிரசித்திப்பட்ட பரஸாப்பமாக அறியப்பட்டது, சோதனைதான்..... சரி அப்பம் எப்படித்தான் சுடுவது, இருக்கவே இருக்கு அறுசுவை.காம், தேடியதில் கீழக்கரை மனம் கமல சகோதரி சாதிக்கா அவர்கள் வழங்கிய மஞ்சள் ஆப்பம் ரெசிப்பி இதோ..

தேவையானவை:

பச்சரிசி - 2 டம்ளர்

பழைய சாதம் - 1/2 கப்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன் 

சமையல் சோடா - 1பின்ச்

உப்பு - சுவைக்கு

தேங்காய் - 1

வெங்காயம் - 1 (சிறிது)

பச்சைமிளகாய் - 3

முருங்கை இலை - 1கைப்பிடி அளவு 

சோம்பு - 2 டீஸ்பூன் 

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

முட்டை - 1 

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை: 

•அரிசி, வெந்தயம் இரண்டையும் முதல் நாளே ஊற விடவும். 

•மறுநாள் சாதத்துடன் அரிசியையும் சேர்த்து கெட்டியாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

•தேங்காயுடன், சோம்பு சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுத்துக்கொள்ளவும். 

•இத்துடன், அடித்த முட்டை, உருக்கிய நெய், சோடா, உப்பு, முருங்கை இலை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும். 

•மாவு, தோசை மாவு பதத்திற்கும் சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

•ஆப்பசட்டியை அடுப்பில் வைத்து, சூடேறியதும், ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து ஆப்பம் வார்க்கவும்.

•இத்துடன் தேங்காய்ப்பால், மீன், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, வெஜ் குருமா அனைத்துக்கும் ஏற்றது. நெய், முட்டை சேர்ப்பதால் நன்கு மிருதுவாக, பஞ்சு போல் இருக்கும். இவை சேர்க்காமலும் ஆப்பம் செய்யலாம். சோம்பு சேர்த்து தேங்காய் அரைப்பதால் நன்கு வாசனை கிடைக்கும். 

இந்த முறையில் சுட்டு பார்த்து கொஞ்சம் சொல்லாம், சென்னை மொன்ட்ரோட்டில் உள்ள பிலால், புகாரி போன்ற கடந்த கால பிரபல லேட் நைட் ஹோட்டலில்களில் ஆப்பமும், கால் எழும்பு பாயாவும் நடு நிசியில் பரபரப்புடன் இன்றும் விற்கப்படுகிறது, ஆனால் இராயப்பேட்டை சபாரி ஹோட்டலில் சாப்பிடும் ஆப்பம் பாயாவுக்கு நிகரில்லை.  நான் பார்த்த எங்குமே முருங்கைக்கீரை மஞ்சப்பம் கிடைக்கவில்லை, அது வட்டலப்பம் கிடைக்கும் சென்னை மன்னடி ஹோட்டல்கள் ஆகட்டும், தமிழ் உணவுகள் விறகப்படும் துபாய் நைப் பஜாராகட்டும்... மலேசியாவின் மஸ்ஜித் இந்தியா ஏரியாவாக ஆகட்டும், காலத்தின் கோலத்தில் கீழக்கரையில் கூட கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை, மஞ்சப்பத்தின் மனமும், நிறமும் என் நினைவுகளில் இன்றும் நிலை பெற்றிருக்கிறது......................

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.15:01 இணைவைத்தல்!» தினம் ஒரு குர்ஆன் வசனம்
'தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்யமுடியாத, அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள், இன்னும் அவர்கள், 'இவை, எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள். அதற்கு நீர், 'வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக்கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட அவன் மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும்'. (யூனுஸ்:18).
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.

Click here to bookmark this link.
Click here to bookmark this link.14:55 புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!» தமிழ் நிருபர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் சில  எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக விமானப் படையினர்  தெரிவித்தனர். கரியமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செவ்வாய்கிழமை இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினர் இவற்றை மீட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். கொள்கலன் ஒன்றினுள் விமான உதரிரிப்பாகங்கள் இடப்பட்டு எரிக்கப்ப‌ட்டப்பட்ட நிலையிலேயே அவை மீட்கப்பட்டுள்ளன. முன்னாள் புலி உறுப்பினர்கள் வழிகாட்டியதையடுத்தே விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் உதிரிப்பாகங்களை மீட்டுள்ளனர். எரிக்கப்ப‌ட்டப்பட்ட நிலையில் 02 சிறிய இயந்திரங்கள் லைட்கள் சக்கரங்கள் உள்ளிட்ட சில விமான உதிரிப்பாகங்களும் பற்றுச்சீட்டுப் [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.14:43 தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்» தமிழ் நிருபர்
தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த நேரத்தில் எங்களது சமூக உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாக மதுரையில் அவரது சிலையை உடைத்துள்ளனர். அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தென்மாவட்டங்களில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினமான [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.14:35 டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!» தமிழ் நிருபர்
தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். சிறுசேமிப்புத்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.உமாசங்கர், போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது, விசாரணை தொடங்கப்பட்டு விட்டதால் அவர் மீதான சஸ்பெண்டு நடவடிக்கை 2.9.2010  முதல் ரத்து செய்யப்படுகிறது. விசாரணையின் முடிவைப் பொருத்து, அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்த காலம் சரிசெய்யப்படும். சஸ்பெண்டு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர் டான்சி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்’’கூறப்பட்டுள்ளது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.14:28 பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி» தமிழ் நிருபர்
சென்னை மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராஜா அண்ணாமலை புரத்தில் புதன்கிழமை நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.மூர்த்தி கூட்டத்துக்கு  தலைமை தாங்கினார்.பா.ம.க. நிறுவனர்   டாக்டர் ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக அரசு இலவசங்கள் கொடுப்பதால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது.  தொழில் செய்ய முடியாத  நிர்க்கதியாக உள்ள ஏழைகளுக்கு இலவச அரிசி போன்றவற்றை கொடுக்கலாம். குடோன்களில்  தேக்கி வைத்து  வீணாகின்ற பொருட்களை இல்லாதவர்களுக்கு வழங்கலாம். தேர்தல் வாக்குகளை மனதில் வைத்து இலவசங்களை   கொடுக்க கூடாது. ஒருவருக்கு  மீனை [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.13:43 வித்தியாசமான சுவாராஸ்யமான நேரலை நிகழ்ச்சி! Don’t miss it!!» நீடூர்ஆன்லைன்.காம்
Click here to bookmark this link.13:32 ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம்: ஒபாமா» www.thiruvai.com
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். பேரழிவு ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், ஈராக் மீது 2003 ஆம் ஆண்டு படையெடுத்தார்.இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா, போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகள் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி படிப்படியாக அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். இந்நிலையில், ஏறக்குறைய 8 ஆண்டுகள் நடந்த இந்த போர் முடிவுக்கு வந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கொள்கை அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அவர், ஈராக் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு இனி அந்நாட்டு மக்களின் பொறுப்பு என்றும், அந்நாட்டின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இது வரையிலும் மிகப் பெரிய விலையை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.13:32 வெடிப்பொருட்கள் ஏற்றிச் சென்ற 103 லாரிகள் மயம்: ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் இந்தியாவை தகர்க்க சதியா? .» சிந்திக்கவும்
ஜெய்ப்பூர்,செப். ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப்பெரிய வெடிப்பொருள் கிட்டங்கி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ராஜஸ்தான் வெடிபொருள் கிட்டங்கியில் வெடிபொருட்கள் ஏற்றிச்சென்ற லாரிகளில் 61 லாரிகளை காணவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதில் சில லாரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற லாரிகள்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.12:03 .முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு – ஆணை வெளியிட்டது புதுவை அரசு!» தமிழ் முஸ்லிம் தளம்

புதுவையில் வாழும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளித்து புதுவை அரசு ஆணையை கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியிட்டது. புதுவையில் இதுவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 13 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்த்து, இதில் 2 சதவிகிதம் இனி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் தனியான ஒதுக்கப்படும். இதே போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் மீனவச் சமூகங்களுக்கு 2 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வகைச் செய்யும் ஆணையும் வெளியிடப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் பின் வரும் சமூகங்கள் இடம் பெற்றுள்ளன

1.தக்னி முஸ்லிம் (பாண்டி, காரைக்கால் மற்றும் யானம் ஆகிய பகுதிகளில் வாழ்வோர் மட்டும்

2.மாப்பிளா

3.லெப்ப்பை (இதில் மரைக்காயர், ராவுத்தர், சாயிபு, சேக், சையித் ஆகியோரும் அடங்குவர்)



மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி இடஒதுக்கீடு பெறும் மீனவர் சமூகத்தில் பின்வருவோர் அடங்குவர்

1.       செட்டியார்

2.       சின்ன பட்டினவர்

3.       மீனவ செட்டியார்

4.       நாட்டார்

5.       பர்வர்தராஜகுலம்

6.       பட்டினவர்

7.       பட்டினவ செட்டியார்

8.       பெரிய பட்டினவர்

9.       செம்பதவர்

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.11:01 முஸ்லிம் கொண்டாடும் கிருஷ்ண ஜெயந்தி....?» முகவை எக்ஸ்பிரஸ்.
பள்ளிகள் மற்றும்  கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் வேடம்புனைந்து வருமாறு மாணவமணிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடும். அத்தகைய நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ-மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை  நிகழ்ச்சியில் பங்கெடுப்பதைக்  காண்கிறோம்.

இதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத் தான்  சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும்  அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களேயன்றி, அவற்றை மார்க்கத்தோடு  ஒப்பிட்டு பார்ப்பதில்லை. பெற்றோரின் இத்தகைய 'கண்டுகொள்ளாமை'  பின்னாளில், நாங்கள்  இருப்பதோ  இஸ்லாம் மதம்;  ஆனால் எம்மதமும் எங்களுக்கு  சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்துவிடுகின்றது. எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது.

ஒரு மண்பாண்டம் செய்பவர் தனது கையில் உள்ள மண்ணை என்ன கோணத்தில் வடிக்க நினைக்கிறாரோ அந்த கோணத்தில் வடிக்கிறார். அதுபோலவே ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட காலம் வரை பெற்றோர் கையில் இருக்கும் பச்சை மண் போன்றதுதான்; அதை பெற்றோர் நினைக்கும் வடிவில் உருவாக்கலாம். இதைத்தான் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் தெளிவாக கூறினார்கள்;

ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப், பிறகு, 'எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது' எனும் (திருக்குர்ஆன் 30:30 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

நூல்;புஹாரி எண் 4775

இறைத்தூதரின் இந்த பொன்மொழி எந்த அளவிற்கு சத்தியமானவை என்பதை நாம் நடைமுறையில் கண்டுவருகிறோம். இந்துக்களால் கடவுள் என கருதப்படும் கிருஷ்ணன் என்பவரது ஜெயந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதையொட்டி நடந்த நிகச்சிக்காக தனது பிள்ளையை கிருஷ்ணராக வேடமிட்டு, ஒரு முஸ்லிம் தாய் அழைத்து செல்வதை கீழே  உள்ள படத்தில் பார்க்கிறோம்.  இது போன்று அந்த தாய்  செய்வதற்கு அவரது மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால் தான் முழுமையான  பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதியதுதான்.

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

'யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே!

எனவே,அன்பான முஸ்லிம் சமுதாயமே! நாம் நம்முடைய ஒவ்வொரு அசைவையும்  இஸ்லாத்தோடு உரசிப்பார்ப்போம். இறைவனின் அன்பைப் பெறுவோம்.
படம் நன்றி;தினமணி

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.10:31 சென்டிரல்தெரு வாசிகளின் மனம்குமுறிய நன்றி - முந்தைய நோட்டீஸ் நீக்கம்» அதிரை எக்ஸ்பிரஸ்
மதினா பள்ளியில் ஒருவர் கனவு ஒன்றை கண்டார் அதன்படி தனது கனவு விசயத்தை எல்லோரும் தெரியும்படி ஐநூறு நோட்டிஸ் அச்சடித்து விநியோகம் செய்தால் அவருக்கு ஏற்கெனவே இருந்த கஷ்டம் நீங்கும் என்று கனவில் கா.கா. கூ.க கட்சியை சார்ந்த பெரியவர் ஒருவர் அட்வைஸ் செய்தார். அதனால் அவர் இதனை ஐநூறு நோட்டிஸ் அச்சடித்தார். அவருக்கு ரோடு காண்ட்ராக்ட் கிடைத்தது. அதேபோல் இந்த நோட்டீசை வேறொரு தெருவைச்சார்ந்த ஒருவர்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
406 பதிவுகளிலிருந்து, புதிய இடுகைகள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை திரட்டப்படுகின்றன! | உங்கள் பதிவுகளை சேர்க்க