123
 123

வியாழன் 29 ஜூலை, 2010

Click here to bookmark this link.18:08 இருக்கும் இடஒதுக்கீட்டை இழக்க வேண்டாம்! ராமதாசுக்கு கருணாநிதி பதில்» NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்
சென்னை: தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதில் இருப்பதையும் இழக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதற்கு, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அதில், அருந்ததியருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.
தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு என நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என, உச்சநீதிமன்றத்தில் 1994ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை கடக்க வேண்டும் எனில், தேவையான புள்ளி விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அதை ஆணையம் ஆராய்ந்து இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களைச் சேகரிப்பதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குத் தேவைப்படும் 400 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டுப் பெறலாம் என, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்தில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுத்தால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பிரச்சனையில் அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு, உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை இதில் அவசரம் காட்டினால், பிரச்சனை திசை திரும்பி இருப்பதையும் இழந்துவிடக் கூடாது எனவே அனைவரும், இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com/201007299636/reservation-tamilnadu-lose-ramadass-karunanithi
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.17:31 கற்காலம் - நாகூர் ரூமி (பகுதி 2/4)» அமைதி இல்லம்
கற்காலம்


நாகூர் ரூமி


முதல் பகுதி  - http://nagoreismail786.blogspot.com/2010/07/14.html

என்ன குற்றம்?

ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று adultery. இன்னொன்று fornication. 'அடல்ட்ரி' என்பது, ஒரு கல்யாணமான ஆண் அல்லது பெண், தன் மனைவி அல்லது கணவன் அல்லாத வேறொரு ஆளோடு உடலுறவு வைத்துக்கொள்வதைக் குறிக்கும். '·போர்னிகேஷன்' என்பது, கல்யாணமாகாத ஆண் பெண்ணுக்கிடையேயான உடலுறவைக் குறிக்கிறது. இதில் ஒருவர் மட்டும் கல்யாணமானவர், இன்னொருவர் ஆகாதவர் என்றால், அதில் 'அடல்ட்ரி'யும் '·போர்னிகேஷ'னும் சேர்ந்திருப்பதாக அர்த்தம்.

'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' என்ற இரண்டிற்குமிடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஏனெனில், அதன் அடிப்படையில்தான் இத் தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன.

கூடாவொழுக்கம் இஸ்லாத்தின் பார்வையில் பெரும்பாவமாகக் கருதப்படுகிறது. உடலுறவிலும் ஒழுக்கத்தையே இஸ்லாம் போதிக்கிறது. ஒழுக்கக் குறைவுக்கான தண்டனையாகத்தான் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் இந்த தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

என்ன ஆதாரம்?

இஸ்லாமிய சட்டம் என்று சொல்லும்போதே, அதற்கு இரண்டு மூலங்கள்தான். ஒன்று இறைவனால் அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன். இன்னொன்று, இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஸ¤ன்னத் எனும் வழிமுறை. இந்த வழிமுறை ஹதீதுகளின் மூலமாக அறியப்படுகிறது.          

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது?

திருக்குர்ஆனில் இந்த விஷயம் பற்றி இறைவன் மிகத்தெளிவாகக் கூறுகிறான். உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேடுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ; அதற்கான உறுதியான நான்கு சாட்சிகள் வேண்டும் ; பொய்சாட்சி சொன்னவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களை விளக்கும் விதமாக(வும்) திருமறையின் 24வது அத்தியாயமான சூரா நூர் அமைந்துள்ளது. அதில் இரண்டாவது வசனம்

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ 'ஜினா' செய்வாரேயானால், அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது இறைவனின் கட்டளை. இறைவன் மீதும் அவனுடைய இறுதித்தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த விஷயத்தில் இரக்கம் காட்டக்கூடாது. நம்பிக்கையாளர்களில் ஒரு குழுவினர் இதற்கு சாட்சியாக இருக்கட்டும்

என்று கூறுகிறது (அர்த்தத்தை மட்டும் நான் எனது மொழியில் இங்கே கொடுத்துள்ளேன்).

'ஜினா' -- ஒரு விளக்கம்

வேண்டுமென்றேதான் நான் 'ஜினா' (zina) என்ற அரபிச் சொல்லை தமிழாக்கத்தில் பயன்படுத்தினேன். காரணம், மேற்கூறிய கல்லடிக் கொல்லரசுகளால் அந்த சொல்லுக்கு fornication என்று மட்டும் அர்த்தப்படுத்தப் படுகிறது. ஆனால் 'ஜினா' என்ற சொல் 'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' இரண்டையுமே குறிப்பதாகவும், ஒழுக்கக்குறைவைப் பொறுத்தவரையில் அவர்கள் திருமணமானவர்களா, ஆகாதவர்களா என்று ஆண்டவனும் அரபி மொழியும் பார்க்கவில்லை என்பதாகவும்தான் பல பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கருதுகிறார்கள்.

உதாரணமாக, 'ஜினா' என்பது தங்களுக்குள் திருமணமாகாத இரண்டு பேருடைய உடலுறவைக் குறிக்கும் என்று யூசு·ப் அலி விளக்குகிறார். அதாவது, குறிப்பிட்ட ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்ட இருவரும் திருமணமாகாதவர்களாக இருக்கலாம். (அதாவது '·போர்னிகேஷன்' செய்தவர்களாக). அல்லது திருமணமானவர்கள் என்றால், அந்த ஆண் வேறொரு பெண்ணின் கணவனாகவும், அந்த பெண் வேறொருவரின் மனைவியாகவும் இருப்பார்கள். (அதாவது 'அடல்ட்ரி' செய்தவர்களாக).

எப்படியிருப்பினும், அவர்கள் 'தங்களுக்குள்' திருமணமாகதவர்களே. இந்த இரண்டு விதமானவர்களுடைய புணர்ச்சியையும் 'ஜினா' என்ற சொல் குறிக்கிறது என்கிறார் யூசு·ப் அலி.

இந்தியாவின் தலை சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான மௌலானா அப்துல் மஜீத் தர்யாபாதி, தனது 'த·ப்ஸீருல் குர்ஆன்' என்ற விரிவுரையின் மூன்றாவது வால்யூமில், மேற்கண்ட இறைவசனத்துக்கு, "ஜனா என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில், அவர்கள் திருமணமானவர்களோ அல்லவோ, ஏற்படும் முறைசாராக் கலவியையே குறிக்கிறது" என்று, யூசு·ப் அலி கூறும் விளக்கத்தை ஒட்டிய, தனது விளக்கத்தை அளிக்கிறார்.

"ஜினா என்பது தங்களுக்குள் திருமண உறவு ஏற்பட்டிராத ஒரு ஆணுக்கும் பெண்ணும் இடையில் ஏற்படும் தன்னார்வ உடலுறவைக் குறிக்கிறது. இதில் அவர்களில் ஒருவர் அல்லது இரண்டு பேருமே மற்றவரைத் திருமணம் செய்துகொண்டவர்களாக இருந்தாலும் சரி, இல்லாமலிருந்தாலும் சரி. எனவே ஜினா என்ற சொல், மேற்கத்திய மொழிகளில் இருப்பதுபோல, அடல்ட்ரி என்றும் ·போர்னிகேஷன் என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை" என்று முஹம்மது அசது என்ற மொழிபெயர்ப்பாளர் கூறுவதும் கவனிக்கத்தக்கது.

உண்மை இப்படி இருக்கும்போது, கல்லடி, இறக்கும்வரை அடிப்பது போன்ற எதைப்பற்றியுமே இறைவன் தன் திருமறையில் ஒன்றுமே கூறியிருக்காத நிலையில், மேற்கண்ட 'குற்றம்' இழைத்தவர்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்ற சட்டம் எங்கிருந்து வருகிறது?

ஹதீஸிலிருந்து! ஆம். 'அடல்ட்ரி' செய்தவர்களை கல்லாலடித்துக் கொல்லும்படி நபிகள் நாயகம் சொன்னதாக நாலைந்து ஹதீதுகள் ஆதாரப்பூர்வமான ஹதீது தொகுப்பான புகாரியில் வருகின்றன!

ஆகவே, '·போர்னிகேஷன்' செய்தவர்களைத்தான் 'ஜினா' குறிக்கிறது என்றும், அவர்களுக்குத்தான் நூறு கசையடிகள் என்பதாகவும், 'அடல்ட்ரி' செய்தவர்களை நபிவழிப்படி கல்லாலடித்துக் கொல்லவேண்டும் என்றும் 'சட்ட வல்லுணர்கள்' கூறுகிறார்கள்! நபிகள் நாயகம் அப்படிச் செய்தார்களா?

புகாரி ஹதீதுகள்

1. ஒரு யூதரும் ஒரு யூதப்பெண்ணும் இந்தக் குற்றம் செய்ததற்காக நபிகள் நாயகம் முன்னிலயில் கொண்டுவரப்படுகின்றனர். அவர்களுடைய வேத நூலான மோஸஸின் 'தவ்ராத்'தில் (ட்டோரா) உள்ள யூத சட்டப்படி, கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டும் என்று நாயகம் சொன்னதாகவும் அதன் படியே செய்யப்பட்டதாகவும் ஒரு ஹதீது. இதை அப்துல்லாஹ் இப்னு உமர் என்பவர் அறிவிக்கிறார் (ஹதீது எண் 4.829)

2. பனீ அஸ்லம் என்ற குலத்தைச் சேர்ந்த ஒரு திருமணமான ஆண், தான் இந்தக் குற்றம் செய்ததாகவும், அவருக்கு எதிராக அவரே நான்கு முறை சாட்சி சொன்னதால், அவரை கல்லாலடித்துக் கொல்லும்படியும் நபிகள் நாயகம் உத்தரவிட்டார்கள் என்று ஒரு ஹதீது. இதை அறிவிப்பவர் ஜபீர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்சாரி. (ஹதீது எண் 8.805)

3. "அல்லாஹ்வுடைய தூதர் ரஜம் (கல்லால் அடித்துக் கொல்லச் செய்யும் தண்டனை)  நிறைவேற்றச் சொன்னார்களா?" என்று அஷ்-ஷைபானி என்பவர் அப்துல்லாஹ் இப்னு அபீ ஔ·பா என்பவரிடம் கேட்க, அதற்கு அவர், "ஆமாம்" என்று பதில் சொல்கிறார். " (இந்தக் குற்றத்துக்கான தண்டனை 100 கசையடிகள் என்று உத்தரவிடும்) சூரா நூர் அத்தியாயம் அருளப்பட்ட பிறகா அல்லது அதற்கு முன்பா?" என்று அவர் மறுபடியும் கேட்க, "எனக்குத் தெரியாது" என்று பதில் வருகிறது. இந்த ஹதீதை அஷ்-ஷைபானி அறிவிக்கிறார். (எண் 8.804). இதே ஹதீது மறுபடியும் சொல்லப்படுகிறது (எண் 8.824)

4. கல்லால் அடிப்பது பற்றி ஒரு இறைவசனம் அருளப்பட்டது என்றும், அது பின்னாளில் இழக்கப்பட்டது என்றும், இறைத்தூதர் கல்லால் அடிக்க உத்தரவிட்டுள்ளார் என்றும், அதைப் பின்பற்றி நாங்களும் அவ்வாறே செய்துள்ளோம் என்றும் இஸ்லாத்தின் இரண்டாம் கலீ·பா உமர் அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீது உள்ளது. (கஷ்·புல் கும்மாஹ், வால்யூம் 2, பக்கம் 111).

5. முதலில் திருக்குர்ஆனில் சொல்லியபடி ஒரு குற்றவாளிக்குக் கசையடி கொடுத்ததாகவும், பின்னர் இறுத்தித் தூதர் வழிப்படி அவருக்கு கல்லடி கொடுத்ததாவும் இஸ்லாத்தின் நான்காவது கலீ·பாவானா அலீ அவர்கள் சொன்னதாக ஒரு ஹதீது உள்ளது (புகாரி).

சில விளக்கங்கள்

திருக்குர்ஆனிலே இறைவன் விதிக்கும் தண்டனை நூறு கசையடிகள். ஆனால் ஹதீதுகள் மூலம் கிடைக்கும் தண்டனை சாகும்வரை கல்லடி. இஸ்லாமிய சட்ட வல்லுணர்கள், திருக்குர்ஆன் சொல்வது '·போர்னிகேஷ'னுக்கு என்றும், ஹதீது சொல்வது 'அடல்ட்ரி'க்கு என்றும் பங்கிட்டுக் கொண்டதுதான் பிரச்சனையின் ஆரம்பம். இறைவனையும் விட்டுவிட முடியாமல், நபிகள் நாயகத்தையும் பின்பற்றாமல் இருக்க முடியாது என்றோ என்னவோ இப்படி ஒரு விளக்க ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டது போலும்.

திருக்குர்ஆனில் உள்ள 'ஜினா' என்ற சொல் 'அடல்ட்ரி', '·போர்னிகேஷன்' இரண்டையுமே குறிக்குமானால், இந்த ஹதீதுகளை என்ன செய்வது?

இந்தப் பிரச்சனையில் சில அறிஞர்கள் வேறு ஒரு விளக்கத்தைக் கூறினார்கள். அது என்ன?

கூடா ஒழுக்கம் கொண்டவர்களுக்கு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை சூரா நூர் என்ற அத்தியாயத்தின் மூலம் நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டது. அது மதீனாவில் அருளப்பட்ட சூரா. அதாவது, மக்காவிலிருந்து இறைத்தூதர் மதீனாவுக்குச் சென்ற ஆறாவது ஆண்டு, அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து என்று வரலாற்று வல்லுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

இதை வைத்துப் பார்க்கும்போது, இஸ்லாமிய சட்டம் கசையடிதான் என்பது உறுதியாகிறது. அப்படியானால், கல்லடித் தண்டனைகள் இந்த சூரா அருளப்படுவதற்கு முன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன், வேறு தண்டனையே கிடையாதா? ஏன் கல்லால் அடிக்க வேண்டும்? ஏனெனில், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அவ்வப்போது அருளப்படுவதற்கு முன்பு, நபிகள் நாயகம் அவர்கள், மோஸஸ் எனப்படும் மூஸா நபிக்கு அருளியிருந்த தவ்ராத் (ட்டோரா) என்ற வேதத்தில் சொல்லப்பட்ட சட்டதிட்டங்களின்படித்தான் நடந்து வந்தார்கள். அதில் காணப்படும் தண்டனைகளில் ஒன்றுதான் இந்த கல்லடித் தண்டனை. அதைத்தான் நபிகள் நாயகம் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது, குறிப்பிட்ட குற்றத்துக்கு இஸ்லாமிய சட்டம் இல்லாத பட்சம், யூத சட்டத்தை நபிகள் நாயகம் பின்பற்றியிருக்கிறார்கள் என்பது சிலருடைய கருத்து. (மேற்கண்ட ஹதீதுகள் ஒன்றில், இந்த தண்டனை யூதர்களுக்கே நிறைவேற்றப்பட்டிருப்பதாக இருப்பதைக் கவனிக்கவும்).

ஆகவே, இந்த சூரா அருளப்பட்டுவிட்டதால், அதற்குப் பிறகு கல்லால் அடித்தல் என்பது இஸ்லாமிய சட்டமாகாது என்பது அவர்களுடைய வாதம்.

அதாவது, இன்றைக்கு ஈரான், நைஜீரியா, சூடான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிறைவேற்றப்படும் கல்லடித் தண்டனையை கண்டிக்கும் அதே சமயம், திருக்குர்ஆனையும் ஹதீதையும் விட்டுக் கொடுக்காத விளக்கங்களைத் தருகிறார்கள்.

என்னுடைய கருத்தில்

- தொடரும்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.16:01 உலக வாழ்வில் தீயோராக இருந்தோர் நஷ்டப்படும் நாள்!» தினம் ஒரு குர்ஆன் வசனம்
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும், ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான். அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும். (அல்குர்ஆன்: 64:9)
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.15:48 இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம்» annajaath.com
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் மவ்லவி P.M.S.காசிமிய்யி, மன்யகரடிக்குளி, ஸ்ரீலங்கா     வல்ல அல்லாஹ்,  இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக் கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.     அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறுகிறான்: “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையையும் [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.13:31 துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்» உண்மை வலம்

- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில்இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.


பின்னர் அங்கிருந்து விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது ‘மிஃராஜ்’ என அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி எத்தகைய சடங்கு-சம்பிரதாயங்களையோ, வணக்க, வழிபாடுகளையோ இஸ்லாம் அறிமுகம் செய்யவில்லை. இந்நிகழ்வு பற்றிப் பேசுவோர் பல கட்டுக் கதைகளையும், பர்ன-பரம்பரைக் கதைகளையும் அவிழ்த்து விடுவர். மற்றும் சிலர் இஸ்ரா -மிஃராஜுடன் இணைத்து இல்லாத இபாதத்துக்களை உருவாக்கி பித்அத்துக்களை ஊக்குவிப்பர். எனினும், இஸ்ரா-மிஃராஜ் பற்றிப் பேசும் போது பைத்துல் முகத்தஸ் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.


‘பைத்துல் முகத்தஸ்’ என்பது முஸ்லிம் உம்மத்தின் முதல் கிப்லாவாகும். பலஸ்தீன பூமி அல்லாஹ்வின் அருள் பெற்ற பூமியாகும். ‘பைத்துல் முகத்தஸைச் சூழ உள்ள பூமியை நாம் பறக்கத் பொருந்தியதாக ஆக்கியுள்ளோம்’ என்று அல்லாஹ் கூறியுள்ளான். இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமாக பைத்துல் முகத்தஸ் திகழ்கின்றது. நபிகளாரின் இஸ்ரா-மிஃராஜின் ஒரு அங்கமான பைத்துல் முகத்தஸ், மனித இன விரோதிகளான இஸ்ரேல் வசம் சிக்கித் தவிக்கின்றது. அகழ்வாராய்ச்சியின் பெயரில் பைத்துல் முகத்தஸைச் சூழச் சுரங்கங்கள் தோண்டித் துலாவப்படுகின்றது. பலஸ்தீனத்தின் பூர்வக் குடிகள் ஆக்கிரமிப்புச் சக்திகளான இஸ்ரேலினால் திறந்த வெளிச் சிறைக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர்.


அமெரிக்காவும், பிரிட்டனும் கொண்ட கள்ளக் காதலால் கருத்தரித்த சட்ட விரோத நாடே இஸ்ரேலாகும். இதன் மொஸாட் அமைப்பும், அதன் கொலை வெறிக் கூட்டமான ஸியோனிஸ்டுகளும் உலகம் பூராகவும் போர்த் தீயை மூட்டி வருகின்றனர்.


இஸ்லாமிய உம்மத்துக்கு மட்டுமன்றி மனித இன விரோதிகளாகவே இஸ்ரேல்நடக்கின்றது. அதனது ஸியோனிஸ சிந்தனை என்பது அனைத்து இன மக்களையும் அடிமையாக்கும் சிந்தனை கொண்டதாகும்.


இஸ்ரேல் அரசும் அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் அரசியல் தலைமைகள், பிர்அவ்னியச் சிந்தனையுடன் இஸ்லாமிய உம்மத்தின் குழந்தைகளைக் கொல்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளன. ஈராக், ஆப்கான், பலஸ்தீன் என அனைத்து நாடுகளிலும் இந்த அரக்க நாடுகளின் ஈவு-இரக்கமற்ற, காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களில் அதிகம் பலியானவர்கள் ஒன்றுமறியாக் குழந்தைகள்தான்.


‘பொருளாதாரத் தடை’ என்ற போக்கிரிச் சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு உணவு, பால் மா, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் இஸ்லாமியச் சந்ததியைக் கொன்றொழிக்கச் சதி வேலையில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தைகளையும் உடல் ஊனமுற்றவர்களாக்கும் கொடூரத்தை இந்த நாடுகள் செய்து வருகின்றன.


பலஸ்தீனை ஆக்கிரமித்து ‘இஸ்ரேல்’ என்ற சட்ட விரோத நாட்டை உருவாக்கியவர்கள், அதனை ஒரு யூத நாடு என நிருவுவதற்கான அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வந்தனர். அறுபது ஆண்டுகள் தோண்டித் துலாவியும் இது ஒரு யூத நாடு என்று நிருவுவதற்கு உருப்படியான ஒரு ஆதாரம் கூட அவர்களுக்குக் கிட்டவில்லை. இந்நிலையில் யூதர்களில் சிலரே ‘இஸ்ரேல் சட்ட விரோத நாடு!’, ‘இஸ்ரேலை உருவாக்கியமை யூத மதத்திற்கும் எதிரானது!’ எனக் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.


பலஸ்தீனின் காஸாப் பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுப் பலஸ்தீனப் பாலகர்களையும் பட்டினிச் சாவுக்குள்ளாக்கி வருகின்றது. மருந்துத் தட்டுப்பாட்டினால் மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.


பட்டினி நிலை தொடர்ந்ததைக் கண்ட ஈரநெஞ்சம் கொண்ட உலக நாடுகள் உதவ முன் வந்த போதும் கூட கல்நெஞ்ச இஸ்ரேல் அதனைத் தடுத்து வந்தது. எகிப்து ஊடாக காஸா பகுதிக்கு உணவு வருவதை எகிப்து தடை செய்தது. பட்டினியின் கொடூரத்தால் சுரங்கப் பாதை அமைத்து காஸாவுக்கு உணவுகளைக் கொண்டு வரும் முயற்சியை எகிப்து கொடூரமாக நசுக்கியது. மதில்கள் அமைத்தும் சுரங்கப் பாதைகளுக்கு நச்சு வாயு அடித்தும் பிர்அவ்னிய சிந்தனையின் எச்ச-சொச்சத்தை எகிப்தின் அதிபர் நிரூபித்து வருகின்றார். முஸ்லிம் அல்லாத மனித நேயர்களின் மனிதாபிமான முயற்சிகளுக்குக் கூடத் தடை விதித்துப் பலஸ்தீனப் பட்டினிச் சாவுக்கு இஸ்ரேலுடன் இணைந்து எகிப்தும் வழிவகுத்து வருகின்றது.


காஸாப் பகுதிக்கு 2008 இல் S.S. Free gaza பயணய கப்பல் மூலம் சென்ற மனிதாபிமான உதவியின் பின்னர் எந்த உதவியும் சென்று சேருவதை இஸ்ரேலின் இதயமற்ற அரசு அனுமதிக்கவில்லை.


இந்த நிலையில்தான் பலஸ்தீன மக்களின் மரண ஓலமும், பட்டினிச் சாவும் சர்வதேச நாடுகளில் இதயமுள்ள மனிதர்களின் உள்ளத்தை உருக்கியது.


இஸ்ரேலினதும், எகிப்தினதும் முற்றுகையைத் தகர்த்து காஸா மக்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு தயாரானது.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த 6 கப்பல்கள் மே மாதம் 30 இல் சைப்பிரஸ் துறைமுகத்திலிருந்து காஸா நோக்கிச் சென்றது. இந்தக் கப்பலில் 50 நாடுகளைச் சேர்ந்த மனித நேயத் தொண்டர்கள் 700 பேர் பயணித்தனர். இதில் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்ற மக்கள் தொண்டர்கள், பலஸ்தீன ஆதரவாளர்கள் என நாடு-அரசியல்-இன-மதம் அனைத்தையும் தாண்டிய மனித நேயம் கொண்டவர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்தக் கப்பல்களில் 10,000 டொன் உதவிப் பொருட்கள் இருந்தன.


இந்தக் கப்பல் காஸா சென்றடைந்தால் பலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் தனது சதிவலை முறியடிக்கப்பட்டு விடும். ஏனைய நாடுகளும் தொடர்ந்து உதவி செய்ய ஆரம்பித்து விடும் என்பதனால் இவர்களைத் தண்டிப்பதற்காகவும், இனி யாரும் உதவி-ஒத்தாசை என்று வந்து விடக்கூடாது என எச்சரிப்பதற்காகவும் இஸ்ரேல் இவர்களைத் தாக்கியது.


சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேல் இராணுவத்தினரால் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். கப்பலில் பயணித்தவர்கள் சமாதான சமிக்ஞை காட்டியும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து 19 பேரைக் கொன்று குவித்தது. இதில் 12 பேர் படுகாயமுற்றனர். காயப்பட்டு உயிர் தப்பியவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவார்.


சர்வதேசக் கடல் பரப்பில் சர்வதேசச் சட்டங்களைத் தனது கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்து விட்டு, மனித நேய மக்கள் தொண்டர்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் இராணுவத்தினர், அவர்களை நடுக் கடலில் தூக்கி வீசியுமுள்ளனர்.


தனது ஈவிரக்கமற்ற ஈனச் செயலை நியாயப்படுத்த வழமை போன்று ‘தற்காப்புத் தாக்குதல்’ எனப் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளது இஸ்ரேல். கப்பல்களில் இருந்தவர்கள் குண்டர்கள் அல்ல; மனித நேய மக்கள் தொண்டர்கள்! தாலிபான், அல்கய்தா போன்ற ஆயுதப் போராளிகள் அல்ல; சமாதானப் விரும்பிகள். முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அதில் அதிகம் இருந்தனர்.


இஸ்ரேலின் இதயத்தில் ஈரமற்ற இந்த ஈனச் செயலுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு உலகெங்கும் எழுந்துள்ளது. துருக்கி இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அமெரிக்க சார்பு முஸ்லிம் நாடுகளுக்கு இந்நிகழ்வு அரசியல் ரீதியான சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.


இந்நிகழ்வு இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை மதிக்காத நாடு; அது எந்த அக்கிரமத்தைச் செய்து விட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனையும். இது வரை இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா பயங்கரவாத வன்முறை நிகழ்வுகளையும் ‘தற்பாதுகாப்புத் தாக்குதல்’ என்றுதான் நியாயப்படுத்தி வந்தது. இந்நிகழ்வின் மூலம் சர்வதேச சமூகத்தின் முன்னால் இஸ்ரேலின் கோர முகம் பளிச்செனத் தெரிய ஆரம்பித்துள்ளது.


எனினும், அமெரிக்காவின் அரசியல் ஒத்துழைப்புத்தான் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டிப் போக்கிற்கும், இரும்புக் குணத்திற்கும் காரணமாகும். முஸ்லிம் தலைமைகள் துணிவுடனும், ஒன்றுபட்ட மனதுடனும் செயற்பட்டால் இந்த நிலையை மாற்ற முடியும். இதற்கு இலங்கை சிறந்த உதாரணமாகும்.


புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள்இலங்கையைப் பணிய வைக்கப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன. ஆனால், ஜனாதிபதி தலை வணங்காத தலைமையாக நின்று அதனை எதிர்கொண்டார். அதன் பின் அரசியல் மாற்றத்தின் மூலம் இலங்கையை அடிபணியச் செய்ய முயற்சி நடந்தது. அதுவும் பழிக்கவில்லை. இந்தியா, சீனா எனப் பிராந்திய அரசுகளுடன் இலங்கை நெருக்கத்தை அதிகரித்தது. இப்போது அமெரிக்காவே பணிந்து வர வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது அமெரிக்காவேஇலங்கையின் சில நடவடிக்கைகள் குறித்துத் தாம் திருப்திப்படுவதாக ஒரு தலைப்பட்சமான டயலொக் பேச வேண்டியேற்பட்டது. அமெரிக்காவுக்கு அரசியல் தேவை இருந்தால் பணிய வைக்கப் பயமுறுத்தும்; பயப்படவில்லை என்றால் பணிந்து வரும். இதற்கு வட கொரியாவும் ஒரு சிறந்த உதாரணமாகும்.


முஸ்லிம் உலகு அமெரிக்காவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கும் முடிவுகளை எடுத்து, ஒன்றிணைந்து, துணிந்து குரல் கொடுத்தால் அமெரிக்காபணிந்து வரும். அமெரிக்கா பணிந்தால் இஸ்ரேலின் அராஜகமும், அக்கிரமமும் குன்றிக் குறைந்து விடும் எனத் துணிந்து சொல்லலாம்


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.13:24 விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல்!» தமிழ் நிருபர்
வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடித்த காவல் காதல் படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் நடிகர், நடிகைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலகினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேசிய அதன் தலைவர் பழனி, இலங்கை செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் என்று கூறினார். இந்த வரிசையில் நடிகர் விஜய் நடித்திருக்கும் காவல் காதல் படத்தை வெளிநாட்டில் [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.13:01 புதிய‌ தேர்தல் சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகம்: எஸ்.ஒய்.குரேஷி» தமிழ் நிருபர்
ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும்  என்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார். புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல்களில் பண பலத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கருப்பு பணம் அதிகமாக புழங்குகிறது. இதை கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். இதற்காக, அனுபவம் வாய்ந்த, சிறந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு சீர்திருத்தங்களை உருவாக்கி உள்ளோம். ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.12:40 வாய்தா ராணி ஜெயலலிதா மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!» தமிழ் நிருபர்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க அடிக்கடி வாய்தா வாங்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து, திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், சென்னை அன்பகத்தில் புதன்கிழமை (28.07.2010) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கை, 13 ஆண்டுகள் ஆகியும் வாய்தா [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.12:32 தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஒத்துழைப்பு தேவை:முதல்வர் கருணாநிதி» தமிழ் நிருபர்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். எனவே இடஒதுக்கீடு பிரச்சனையில் இருப்பதை இழக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதற்கு, முதல்வர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், அருந்ததியருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ஒதுக்கீட்டையும், சிறுபான்மை [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.12:32 ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- அஹமதி நிஜாத்.» சிந்திக்கவும்
டெஹ்ரான்,ஜுலை29:ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்ததேவை ஈரானுடைய எதிரிகளின் கூட்டாளி' என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்ச்சைக்குரிய அணுவாயுதத் திட்டத்திற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலொன்றை ஈரான் கொண்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுடன் இணைந்து ரஷ்யா, ஈரான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்தே அஹமதி நிஜாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஜூன் மாத
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.12:32 சென்னையில் கடல் நீரை சுத்திகரித்து வினயோகம்.» சிந்திக்கவும்
சென்னை,ஜுலை28:சென்னை நகரில் வரும் 31ம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட கடல் குடிநீர் வினியோகம் தொடங்கவுள்ளது. சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் செயல்படுத்தப் பட்டுள்ளது. ரூ.400 கோடி செலவில் ஐ.வி.சி.ஆர்.எஸ். நிறுவனமும் ஜெர்மன் நாட்டு பெப்சோ நிறுவனமும் இணைந்து இதற்கான ஆலையை அமைத்துள்ளன.இங்கு,கடல் நீரில் இருந்து
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.12:31 ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்» உண்மை வலம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம்ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.

ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:

عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).

நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).

ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:

قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائي, أحمد).

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).


عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ وَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا * (متفق عليه).

நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.

நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.


விடுபட்ட நோன்புகளை நோற்றல்:

عن أبي سلمة قال : سمعت عائشة – رضي الله عنها – تقول : (( كان يكون علي الصوم من رمضان ، فما استطيع أن أقضيه إلا في شعبان (متفق عليه).

‘எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

விடுபட்ட ரமழான் மாத நோன்பை ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு இந்த செய்தியிலிருந்து அனுமதி கிடைக்கிறது என்பதை அறியமுடிகிறது. மார்க்கம் கூறிய காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விடும் போது அல்லது குறிப்பாக பெண்கள் மாத விடாய், பிள்ளைப் பேறு ஆகியவைகளின் மூலம் நோன்பை விடும்போது, அதனை ஏனைய காலங்களில் நோற்க வேண்டும்.


ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم).

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).

உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.


ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடான பித்அத்தாகும்:

‘நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம், நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது.’ (அத்துகான் 44: 3,4).

இவ்வசனத்தில் அல்லாஹ் ‘அருள் நிறைந்த இரவில்’ அல்குர்ஆனை இறக்கியதாகவும், அந்த இரவில் மனிதனின் வாழ்வாதரங்களுடன் தொடர்புபட்ட விஷயங்களை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் அருள் நிறைந்த இரவு என்பது ஷஃபானின் 15 வது இரவாகும் என்று சிலர் வாதிக்கின்றனர். இது நேரடியாகவே குர்ஆனுடன் மோதக்கூடிய ஒரு வாதம் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

அல்லாஹ் புனிதமிக்க அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்: ‘ரமழான் மாதம் எத்தகையது எனில் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அல்குர்ஆனை நாம் அருளினோம்’. (2: 185).

மற்றுமோர் இடத்தில்: ‘லைலதுல் கத்ர் இரவில் நாம் இதை (அல்குர்ஆனை) அருளினோம்’ என குறிப்பிடுகிறான். எனவே அத்துகான் அத்தியாயத்தில் இடம் பெற்ற ‘அருள் நிறைந்த இரவு’ என்பது ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் இரவு தான் என்பதை அல்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் பார்க்கும் போது தெளிவாக விளங்க முடிகிறது. எனவே இவர்களில் கூறுவது போன்று ஷஃபானின் 15 வது இரவுக்கும் இதற்கும் மத்தியல் எந்த தொடர்பும் இல்லை.

ஷஃபானின் 15 வது இரவை ‘பராஅத்’ என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை.

பித்அத்துகள் அனைத்தும் தெளிவான வழீகேடு என்பது நபியவர்களின் கூற்று என்பதை உணர்ந்து இவ்வாறான பித்அத்துகளை விட்டு விழகி இருப்பதுடன், ஏனையவர்களையும் தடுப்போமாக.

ஷஃபானின் 15 வது இரவுடன் தொடர்பு படுத்தி சில புணைந்துரைக்கப்பட்ட செய்திகளும் இருக்கின்றன அவைகளையும் இங்கு குறிப்பிடுவது பொறுத்தமென நினைக்கிறேன்.


قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر

أمتي…….)).

‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


قوله صلى الله عليه وسلم:((من صلى ليلة النصف من شعبان ثنتي عشرة ركعة، يقرأ في كل ركعة((قل هو الله أحد)) ثلاثين مرة ، لم يخرج حتى يرى مقعده من الجنة..

‘ஷஃபானின் 15 வது இரவில் எவர் 12 ரக்அத்துகளை தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் இஹ்லாஸ் அத்தியாயத்தை 30 தடவை ஓதவாரோ, சுவர்க்கத்தில் அவர் தங்கும் இடத்தை பார்க்காமல் அங்கிருந்து வெளியேற மாட்டார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இச்செய்திகள் அனைத்தும் நபியின் பெயரால் புணைந்துரைக்கப்பட்ட வைகளாகும். இவைகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தனது ‘மவ்லூஆத்’ என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். இவைகளை விட்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும்


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.12:08 தமிழக முதல்வருக்கு “நல்லிணக்க நாயகர்” விருது!» தமிழ் நிருபர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதலமைச்சர் கலைஞருக்கு “நல்லிணக்க நாயகர்” விருது அக்டோபர் 4ஆம் தேதி வழங்கப்படுகிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம் காதர் மொய்தீன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம். எனவே தமிழ்நாட்டில் மாநகராட்சி உள்பட 42 மாவட்டங்களை உருவாக்கி உள்ளோம். இங்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.11:31 என் இந்திய பயணம்- புதிய புத்தக வெளியீடு» புலம் பெயர்ந்த உலகில்



கடந்த எட்டு ஆண்டுகளாக வளைகுடாவின் ஒரு மூலையில் பிழைப்பிற்காக வாழ்ந்து வரும் நான் மனித வாழ்வின் முக்கிய கட்டமான திருமண நிகழ்விற்காக இந்தியா செல்ல நேர்ந்தது. முன்கூட்டிய திட்டமிட்ட பயணம். ஒரு வழியாக நான் புறப்பட்ட விமானம் மார்ச் 23 ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்திற்கு அதிகாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தது. பிறந்த மண்ணை தொட்ட பூரிப்பில் மனம் மற்றும் உடல் இரண்டுமே நெகிழ்ந்தது. இது இயல்பான ஒன்றே. விமானநிலைய வழக்கமான சடங்குகளுக்கு பின்னர் காரி புறப்பட்டு என் சொந்த மாவட்டமான கன்னியாகுமரியை வந்தடைந்தேன். வளைகுடாவில் இருந்து எழுதியவற்றை அருகாமையிலிருந்து வாசித்த உணர்வு நிலையை அடைந்தேன். அது தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரில் இருந்து உணர்ந்த அனுவத்திற்கு இணையாது. தமிழின் இலக்கிய ஆளுமைகள் மற்றும் நண்பர்கள் பலருக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன். அதில் பெரும்பாலானோர் வந்திருந்தனர். இருந்தும் நான் எதிர்பார்த்தவர்கள் வராதது ஏமாற்றமளித்தது. தமிழில் இப்படி முன் தகவல் இல்லாமல் வராமல் இருப்பது ஒரு புதிய முறையியலாக உருவெடுத்திருக்கிறது. ஒரு சூழலில் அரசியல்வாதிகளை அதிகம் நம்பலாம் போலிருக்கிறது. இது எவ்விதமான நிகழ்விற்கும் பொருந்தும்.திருமணத்திற்கு பிந்தைய கட்டத்தில் இது நாள் வரையிலும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பா.வெங்கடேசன், லீனா மணிமேகலை, தாராகணேசன்,கௌதமசித்தார்த்தன், நடிகர் நாசர், நக்கீரன் தலைமை துணை ஆசிரியர் கோ.வி.லெனின் முக்கியமானவர்கள். தழிழவன், பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், இன்பா சுப்ரமணியன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், அடையாளம் மு.சாதிக் ஆகியோரிடத்தில் தொலைபேச மட்டுமே முடிந்தது. விடுமுறை நாட்கள் சுருங்கி கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் எல்லோரையும் சந்திப்பது இயலாத காரியம். திசைகள் பலவாக இருப்பது இதன் காரணமே. வளைகுடா வாழ்க்கையின் கடந்த எட்டாண்டுகளாக நான் எழுதியவற்றை அடையாளம் பதிப்பகம் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" என்ற பெயரில் புத்தகமாக கொண்டு வருகிறது. அடையாளத்திற்கே உரிய பதிப்பு மற்றும் தர நேர்த்தியோடு இது வெளிவருகிறது. இந்நூல் அறிமுகப்படுத்தும் கீழைச்சிந்தனையாளர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழுக்கு புதியவர்கள். இவர்களைப் பற்றிய அறிமுகங்கள், அவர்களின் கோட்பாடுகள் மற்றும் நேர்காணல்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. என்னளவில் என் தொடர்ந்த உழைப்பு மற்றும் செயலூக்கத்திற்கான விளைவாக இதனை கருதுகிறேன்.தமிழின் சில காலகட்டங்களில் தேய்மானம் அடைந்து வரும் தத்துவ, கோட்பாடு, மற்றும் விமர்சன உலகிற்கு இந்நூல் புதிய பாய்ச்சல் எனலாம். இது என் முதல் புத்தகம் கூட. வாழ்க்கை சார்ந்த கடமைகள் காரணமாக என்னால் கடந்த ஆறுமாதமாக என் வலைப்பதிவில் புதிய பதிவுகள் எதையும் இட முடியவில்லை. அதன் பிறகான பதிவு இது. புத்தகத்திற்காக நான் எழுதிய அறிமுக குறிப்பை இதில் இணைத்திருக்கிறேன். வலைப்பதிவு உலகில் என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் வாசக நண்பர்கள் இதிலிருந்து அதனை மீளாக்கம் செய்ய வேண்டுகிறேன்.

நடப்பு உலகில் மனித வாழ்க்கை நிலையற்று தப்பியலையும் விலங்காக நகர்ந்து வருகிறது. இரையை தேடும் பறவையும் இந்த புள்ளியில் தான் இணைகிறது. பறவைகள் இப்பிரபஞ்சத்தின் எல்லா வெளிகளையும் தொடுபவை. அவற்றுக்கு நிரந்தர இருப்பிடம் என்பது அபூர்வமே. நாளை பற்றிய கனவுகளற்று உணவு தேட்டமே அவற்றின் பிரதான செயல்பாடு. இந்த இடத்தில் நாளை என்பதில் தான் மனிதன் பறவையிடமிருந்து வித்தியாசப்படுகிறான். இன்று என்பதில் அவன் இருப்பு தொடங்கி காலம் முன்னோக்கி நகர்தல்- பின்னோக்கி நகர்தல் என்ற இருத்தல் செயல்பாட்டில் அவனின் இயக்கம் இருக்கிறது. நடப்பு உலகில் பல்வேறு காரணங்களுக்காக மனிதனின் இடப்பெயர்வு அவசியமான ஒன்றாக மாறி விட்டது. இருப்பிடம் தாண்டிய, பிரதேசம் தாண்டிய, மொழி தாண்டிய, கலாசாரம் தாண்டிய, மனித உறவுகளை தாண்டிய ஒரு கடந்து போதலாக இடப்பெயர்வு இன்று மாறி விட்டது. உலக வரலாற்றில் அதிகமாக இந்த தாண்டலுக்கு உள்ளானவர்கள் மூன்றாம் உலக நாடுகள் அல்லது வளரும் நாடுகளை சார்ந்த நிர்கதியான மனிதர்களே. இருபதாம் நூற்றாண்டை இந்த புலப்பெயர்வின் அதிகாரபூர்வ காலகட்டம் எனலாம். உலக நாகரீகங்களின் காலகட்டத்திலிருந்து இது தொடங்கினாலும் வெகுவான, மிக அவலமான , துயரமான இடப்பெயர்வு (Displacement) என்பதில் இருந்து தான் இருபதாம் நூற்றாண்டு இடப்பெயர்வின் அர்த்தத்தை அடைகிறது.

வரலாற்று அடிப்படையில் புவிக்கூறுபாடு என்பதற்கும், மனித இடப்பெயர்வுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. தேசியம், நாகரீகம் (Nation, civilization)போன்ற கருத்தாக்கங்கள் தொன்று தொட்ட மனித இடப்பெயர்வின் விளைவுகளே என்கிறார் இத்தாலிய தத்துவவாதியான விக்கோ. இதில் தேசியம் நடப்பு உலகில் மிகுந்த குவியமடைந்து வருகிறது. கொசாவோ தொடங்கி இலங்கை வரை இதன் பிரக்ஞை விரிந்து பரவுகிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் இசங்களை விட தங்கள் தேசத்திற்கான போராட்டத்திற்காகவே அதிகமும் உயிரிழந்திருக்கிறார்கள். மனித வரலாற்று வளர்ச்சி போக்கை கூர்ந்து அவதானித்தவர்கள் இதை புரிந்து கொள்ள முடியும். இதனை இன்னொரு அர்த்தத்தில் நாம் விவரித்தால் இப்பிரபஞ்சம் புவிஅரசியல்- கலாசார ரீதியாக மேற்கு- கிழக்கு என்ற இரு பெரும் பிரிவினைக்கு உட்பட்டிருக்கிறது. மேற்கு என்பதில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற கண்டங்கள் உள்ளடங்குகின்றன. கிழக்கில் ஆசியா, ஆப்ரிக்கா போன்ற பெரும் கண்டங்கள் வருகின்றன. இதில் மேற்கு என்பதற்கு ஐரோப்பா என்பதாகவே அதிகமும் இன்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. அது புவியியல்,கலாசார,அரசியல்,மத மற்றும் அற ரீதியாக கூறுகளின் தொகுப்பாகும்.
மேற்கின் அரசியல் வரலாற்று கூறு என்பது நீண்ட கால ஆதிக்கம், அதிகாரம், வன்முறை, கலாசார பறிப்பு இவற்றோடு இயைந்திருக்கிறது. இன்றைய கட்டத்தில் மேற்காக பிரிட்டனும், அமெரிக்காவும் தான் உலக அரங்கில் முன்னிலை பெறுகின்றது. இதை குறித்து பிரிட்டன் எழுத்தாளர் ஆஸ்கர் ஒயில்ட் பின்வருமாறு குறிப்பிட்டார்." இரு தேசங்கள் ஒரு பொதுவான மொழியால் பிரிக்கப்பட்டுள்ளன. கீழை நாடுகளை பொறுத்தவரை மத்திய கிழக்கு, மற்றும் தெற்கு, கிழக்காசிய நாடுகளே குவியம் பெறுகின்றன. ஓரியண்ட் என்ற சொல்லாடல் மேற்கின் அகராதிப்படி கீழை நாடுகளை குறிப்பதாகும். அமெரிக்க மற்றும் பிரிட்டன் வழக்கில் அது இன்றும் நகைப்புக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. லத்தீன் மொழியில் ஓரியண்ஸ் என்பதற்கு சூரியன் உதிக்கும் பிரதேசமாகும். மரபார்ந்த முறையில் மேற்கு ஐரோப்பிய வழக்கில் ஓரியண்ட் என்பதற்கு தற்போது மத்தியகிழக்கு என்றழைக்கப்படும் பிராந்தியம் என்பதே அர்த்தமாகும். அதாவது அண்டை கிழக்கு நாடுகளை குறிப்பது. இதன் தொடர்ச்சியில் ஓரியண்ட் என்பது அந்நாடுகளின் மக்கள் மற்றும் கலாசாரங்களை குறிப்பதாகும். பிரெஞ்சு வழக்கில் ஓரியண்ட் என்பது கிழக்கத்திய விவகாரம் சார்ந்த , உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிந்தைய அந்நாடுகளின் அரசியல் மற்றும் இராஜ்ஜிய ரீதியான விவகாரங்களின் தொகுப்பாகும். ஓரியண்ட் சொல்லாடலை பொறுத்தவரை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகட்டத்தில் ஐரோப்பாவில் பரவலாக வழக்கில் இருந்தது. மேலும் இது பிரிட்டனின் காலனியம் மற்றும் யூத எதிர்ப்பு மனோபாவம் ஆகியவற்றின் பின்தொடரலாகவும் இருந்தது. இதனிடையில் ஓரியண்ட் என்பது கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய செமிடிக் மதங்களின் கலாசார, பிராந்திய, கருத்தியல் நிலைபாடுகளின் பிரிவினை சார்ந்த கூறாகவும் இருக்கிறது. நாம் இன்று மேற்கு என்று புரிந்து கொள்கிற பிராந்தியமானது வரலாற்று ரீதியாக 600 ஆண்டுகள் பழமையானது. இது அன்று கிறிஸ்தவ பிரதேசமாகவே அறியப்பட்டது. இது கத்தோலிக்க மற்றும் புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் ஆகியவற்றின் கூட்டிணைவே. இதில் வைதீக மற்றும் பைசாண்டிய கிறிஸ்தவங்கள் உள்ளடங்காது. காரணம் அவை மத்தியகிழக்கு பிராந்தியத்திற்கு உட்பட்டவை. மேற்கத்திய கிறிஸ்தவத்திற்கும் இதற்கும் பொதுவான மரபு இருந்தாலும் அவை அடிப்படையில் வித்தியாசப்பட்டவை. மேற்கத்திய கிறிஸ்தவம் என்பது ரோமாபுரியை குவியப்படுத்தும் ஒன்றே. எட்டாம் நூற்றாண்டு பிராங்க் மன்னரான சார்லிமாக்னே அன்றைய போப் மூன்றாம் லியோவால் கி.பி 800 ல் ரோமின் பேரரசனாக முடிசூடப்பட்டார். இதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கு இஸ்லாமிய உலகம் மற்றும் மேற்கத்திய கிறிஸ்தவம் இவற்றிற்கிடையேயான அரசியல், மற்றும் கலாசார மோதல் தொடக்கம் பெற்றது. 18 மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் அந்தலூசிய பகுதிகளை ஆண்ட துருக்கிய உதுமானிய பேரரசு அன்றைய ரோம கிறிஸ்தவ அரசுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் தோன்றியது.கிறிஸ்தவத்தை பொறுத்தவரை அதன் அரசியல் பலம் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் படிப்படியாக குறையத்தொடங்கியது. 1648 ல் மேற்கின் ஒவ்வொரு அரசுகளும் அவரவருக்குரிய சொந்த மதங்களை பிரகடனப்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் மேற்கத்திய கிறிஸ்தவத்தின் உயிர் நாடியான ரோம பேரரசு சரிவடைந்து புதிய இறையாண்மை மிக்க அரசுகள் ஏற்பட்டன. இந்த காலகட்டம் தான் ஐரோப்பிய வரலாற்றில் மறுமலர்ச்சி யுகம். இப்போது மதசார்பின்மை கருத்தியல் அதற்குள்ளிருந்து எழுந்து ஐரோப்பா முழுவதும் பரவுகிறது. ஜனநாயகம் பற்றிய கருத்தாக்கம் விரிவடைந்து அதனை உள்வாங்கிய அரசுகள் பிறக்கின்றன. இதன் தொடர்ச்சியில் லௌகீகத்தின் ஒரு பகுதியாக நவீன ஐரோப்பா உருவானது. இது ஐரோப்பாவின் அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சி.கீழை நாடுகளின் வரலாற்றில் பயண வரலாற்றாளர்கள் முக்கிய இடத்தை அடைகின்றனர். மார்க்கோபோலொ, மார்சல் பிரஸ்ட், மாக்கியவெல்லி, பாஹியான் போன்றோர் குறிப்பிடதகுந்தவர்கள். பல ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுக்கு கடல்வழி பாதை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அது ஒரு வகையில் அவர்களின் திசை அரசியலாகவும் இருந்தது. மார்சல் பிரஸ்ட் உண்மையான கடல் வழி கண்டுபிடிப்பு என்பது நிலத்தை தேடுவதல்ல. மாறாக புதிய கண்கள் வழியாக அவற்றை பார்ப்பதுமாகும்.

ஓரியண்டலிசத்தை பொறுத்தவரை கிழக்கத்திய கலாசாரத்தின் கூறுகள் பற்றிய வரைபடமாகவும், கண்ணோட்டமாகவும் இருக்கிறது. வரலாற்று அடிப்படையில் ஓரியண்டலிசம் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு சிந்தனையாளர்கள் மற்றும் பயணக்குறிப்பாளர்கள் ஆகியோரின் ஆக்கங்களால் நிரம்பியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஓரியண்ட் என்பது மத்தியகிழக்கில் இருந்து நகர்ந்து தூர கிழக்கு நாடுகளை குறிப்பதாக மாறியது. குறிப்பாக ஜப்பான் மற்றும் சீனா போன்றவற்றை குறிப்பதானது. அதாவது கிழக்காசியா, மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்காசியா ஆகிய புவி அரசியல் பிரதேசங்களை குறித்தது. தற்போதைய ஆங்கில அகராதிப்படி ஓரியண்ட் என்ற சொல்லுக்கு கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சார்ந்த புவி அரசியல், மற்றும் கலாசார வகைப்பாடுகள் என்று அர்த்தம். மேலும் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த ஓரியண்ட் என்ற சொல்லாடல் தவிர்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக கீழைநாடுகள் ஆசியா என்றே குறிக்கப்படுகின்றன. கிழக்கின் கலாசாரத்தை, அதன் தொன்ம நுட்பங்களை , வரலாற்று பாரம்பரியத்தை பல ஐரோப்பிய சிந்தனையாளர்கள் அவதானித்திருக்கிறார்கள். மான்டெஸ்க், வில்லியம் பெக்ஃபோர்ட், தாமஸ் மூர், ஜான் வாப்ஃபங், ரால்ப் எமர்சன், தாமஸ் டி குன்ஸி, விக்டர் குகோ, ரிச்சர்ட் பிரான்ஸிஸ் பர்டன் போன்றோர்கள் இந்த வகைப்பாட்டிற்குள் வருகிறார்கள். இவர்களில் மாண்டெஸ்கின் ஓரியண்ட் சமூகம் குறித்த The persian letters முக்கியமான படைப்பாகும். அதில் மாண்டெஸ்க் பாரசீகம் மற்றும் மத்திய ஆசியா குறித்து விரிவாக ஆராய்கிறார். இது அரசுகளுக்கிடையேயான உரையாடலாக கடித வடிவில் இடம்பெறுகிறது. மேலும் மார்க்ஸ் தன் கடைசி கட்டத்தில் கீழை சமூகங்களை குறித்து தான் படிக்க இருப்பதாக குறிப்பிட்டார். அதாவது கீழை மதங்களான இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் குறித்து தான் அதிகம் படிக்க ஆர்வமாக இருப்பதாக கடிதம் ஒன்றில் ஏங்கல்ஸிடம் குறிப்பிட்டார். இதன் மூலம் வரலாற்றில் மேற்கு மற்றும் கிழக்கு அதன் மறு பிரதியாக்கத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவற்றின் மோதலாகவே இருந்திருக்கிறது.

ஓரியண்டலிச சிந்தனையாளர்கள் குறித்த இத்தொகுப்பின் ஆக்கம் என்பது என் பொருளாதார புலப்பெயர் வாழ்க்கையின் ஆறு ஆண்டுகள் உழைப்பின் வெளிப்பாடு. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இஸ்லாமிய சமூகத்தின் இயல்பான சமூக பொருளாதார நிர்பந்தங்களுக்கு ஆளானவனாக வளைகுடா நாடு ஒன்றில் வேலைக்காக சென்றேன். அப்போது வெறுமையும், தவிப்பும், அந்நியத்தன்மையான மனமும் நிரம்பியவனாக மாறினேன். வாசிப்பு அனுபவமும், தேடலும், எழுத்தும் எனக்குள் ஏற்கனவே ஆழமாக பதிந்திருந்தது. வளைகுடா வாழ்க்கை இதை தொடர்ந்து தக்கவைப்பதற்கான தளமாக தொடக்கத்தில் இருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் குடிபெயர்ந்து தமிழில் எழுதி கொண்டிருப்பவர்கள் போல் வளைகுடாவில் இருந்து கொண்டு எழுதுபவர்கள் மிகக்குறைவு. காரணம் அந்த வாழ்க்கை ஏற்படுத்தும் வெறுமையும், எழுத்திற்கான உளவியல் சுதந்திரமும், சிந்தனை சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலை தான்.நான் இதனோடு அதிகமும் போராடவேண்டியதிருந்தது. இந்தியாவின் பல மாநிலங்களை சார்ந்த வளைகுடா வாழ் மனிதர்கள் எல்லோருக்குமே இதே நிலை தான்.இந்நிலையில் ஏற்கனவே நான் திண்ணை.காமில் தொடர்ந்து எழுதி கொண்டிருந்த கட்டத்தில் யமுனா ராஜேந்திரன் அறிமுகமானார். நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து இணையம் வழியாக உரையாடிக்கொண்டதுண்டு.அதற்கு முன்பே பாவண்ணனின் தொடர்பு இருந்தது. பாவண்ணன் புலம்பெயர்ந்தாலும் இழப்புகளை எதிர்கொண்டு அதனை தாண்ட வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இயந்திரமயமான வாழ்க்கை மற்றும் அதனுடனான என் உறவாடல் இவற்றுக்கிடையேயான தூரத்தை தாண்டுவது மிகவும் கடினமாக இருந்தது. இப்படியான சூழலில் வளைகுடா புலப்பெயர்வுக்கு பின் என் முதற் கட்டுரை பாலைவன மூளைகளும், பேரீத்த மரங்களும் என்ற தலைப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் புதிய காற்று மாத இதழில் வெளிவந்தது. அரபு இனத்தவரை பற்றிய ஐரோப்பிய மதிப்பீடு மற்றும் அரபுகளின் தினசரி வாழ்க்கை முறையியல் ஆகியவற்றை பற்றியதாக அது இருந்தது. அதற்கான எதிர்வினைகளும் அந்த கட்டத்தில் வெளிவந்தன. அப்போதிருந்த தகவல் தொடர்பின் இடைவெளி காரணமாக என்னால் அதை எதிர்கொள்ள முடியாமல் போனது. இதனை தொடர்ந்த காலத்தில் பிரான்சை சேர்ந்த நண்பர் ஒருவர் அறிமுகமானார். தேர்ந்த தத்துவவாசிப்பும், ஆழமான தேடலும் அனுபவமும் கொண்டவர். அவருடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல விஷயங்கள் குறித்து விரிவான உரையாடல் நடத்தினேன். அதில் ஒன்று "பாரசீக வளைகுடாவுக்கு அப்பால்" என்ற தலைப்பில் புதிய கோடங்கி இதழில் தொடராக வெளிவந்தது. மத்திய கிழக்கு, மேற்குலகம், பின் நவீனத்துவம் மற்றும் இலக்கிய வெளி குறித்ததாக அது அமைந்தது. இவருடனான உரையாடல்களுக்கு பின் என் புலம்பெயர் எழுத்தின் திசை உறுதியானதாக, துண்டிக்கப்படமுடியாததாக மாறியது. மத்தியகிழக்கு பற்றிய இம்மாதிரியான எழுத்தின் தேவை தமிழ்ச்சூழலில் நிறையவே இருக்கிறது என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். மலையாளத்தில் ஏற்கனவே இது நடந்து முடிந்திருக்கிறது. அங்கு ஏன் நடந்தது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். இந்த கவனப்படலோடு தேர்ந்தெடுத்த வாசிப்பும், சிந்தனையும் என்னை இன்னொரு திசைக்கு நகர்த்தியது. என் எழுத்தியல் பயணத்தில் பெரும் திருப்பமாக நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள அரபு பல்கலைகழக ஆங்கில பேராசிரியரான முனீர் ஹசன் மஹ்மூத் என்பவரின் தொடர்பு கிடைத்தது. முனீர் ஹசன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர். சிரியாவை சேர்ந்தவர். தேர்ந்த படிப்பாளி. நிறைய மொழிபெயர்ப்பு வேலைகளை செய்து வருபவர். சர்வதேச அளவில் அறிவுஜீவிகளுடன் தொடர்பு கொண்டவர். அனங்கக சிந்தனையாளர். மத்திய கிழக்கு குறித்து அவரிடம் விரிவான படிப்பு இருக்கிறது. என் தேவைகளை நிறைவேற்றுவதன் தொடக்க புள்ளியாக இவர் மாறினார். இவர் வழியாக உலகளாவிய மார்க்சிய சிந்தனையாளர்களான தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. என் வாசிப்பிலும், சிந்தனை வெளியிலும், எழுத்திலும் இந்நிகழ்வு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அறிவு ஜீவிகளை புத்தகத்திலிருந்து நேரடியாக ஆகர்சிக்கும் தன்மை உணர்வு பூர்வமான அனுபவ வெளியை ஏற்படுத்தக்கூடியது. வளைகுடா வாழ்க்கை என் ஆங்கில அறிவை வலுவாக்கியதால் இது சாத்தியமானது. இவர்களை நேர்காணல் செய்தேன். விரிவானதொரு உரையாடலாக அது இருந்தது. இவை புதிய காற்று மற்றும் உயிர்மை இதழ்களில் வெளிவந்தன. தமிழ் உலகில் அது புதிய அனுபவமாகவும் உரையாடலை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. இன்னும் பல அறிவுஜீவிகளோடு உரையாடும் சந்தர்ப்பத்தை அது வழங்கியது. சமீபத்தில் அரபு பல்கலையில் வைத்து நோம் சாம்ஸ்கியுடன் உரையாடியது மிகப்பெரும் அறிவார்ந்த அனுபவத்தை கொடுத்தது. முனீர் ஹசன் மஹ்மூதிடமிருந்து மற்றொன்று மார்க்சிய, பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளின் கருத்தியல் பிறழ்வு பற்றியது. ஐரோப்பிய மற்றும் பிற காலனிய செயல்பாடுகளில் மார்க்சிய நிலைபாட்டை எடுத்தவர்கள் இஸ்ரேல் விவகாரத்தில் மாறுபட்டு நின்றார்கள். எரிக்ஹாப்ஸ்வம், ஐஸையா பெர்லின், சிலொவோய் ஸிசக், சார்த்தர் போன்றோர் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். பூக்கோவும் இதில் மாறுபட்டு நின்றார் என்பதை தெரிந்து கொண்ட போது முன்னர் என் ஆதர்சனமாக இருந்த அவர் மீதான என் நம்பிக்கை குறைய தொடங்கியது. இது தொடர்பான நிறைய தரவுகளை தேடி படிக்க ஆரம்பித்தேன். விமர்சன கோட்பாடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவன் என்ற முறையில் பாலஸ்தீன் விவகாரம் என்னை வெகுவாக கலைத்துப் போட்டது. அந்த சூழலில் இருந்து நேரடியாக அந்த மக்களை காணவும், அவர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் விடுதலை போராட்டம் அடிப்படைவாத குழுக்களின் கையில் வந்தது மிகவும் துரதிஷ்டமான, ஏமாற்றமான நிகழ்வு. இது குறித்த பதிவுகள் இந்நூலின் கட்டுரைகளில் இருக்கின்றன. எட்வர்ட் செய்த் இதை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் ஒன்றை மொழிபெயர்த்து இதில் இணைத்திருக்கிறேன். அதாவது சார்த்தரும் அரபுலகமும் பற்றி எட்வர்ட் செய்த் எழுதியது. சார்த்தருடனான தன் அனுபவங்களை அதில் எட்வர்ட் செய்த் பதிவு செய்திருக்கிறார்.தமிழில் இதை வெளிக்கொணர வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை மொழிபெயர்த்து வெளியிட்டேன். மேலும் ஓரியண்டலிச அறிவுஜீவிகளை அறிமுகப்படுத்தும் இத்தொகுப்பில் மொத்தம் பத்து அறிவு ஜீவிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. எட்வர்ட் செய்த், தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர், மாக்சிம் ரோடின்சன், இஹாப் ஹசன், ஹிசாம் சரபி, இக்பால் அஹ்மத், மன்சூர் ஹிக்மத், தாஹா உசேன் ஆகியோரை பற்றிய விரிவான அறிமுகமும், அவர்களின் கோட்பாடுகள் குறித்த பார்வையும், நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. இதில் தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் ஆகியோருடனான நேர்காணல்கள் நான் நேரடியாக நடத்தியவை. இத்தொகுப்பிற்கு அடிக்கோடு வரைபவை. குறிப்பாக தாரிக் அலியுடன் நான் நடத்திய நேர்காணல் இத்தொகுப்பை அதிகமும் குவியப்படுத்துகிறது. நுட்பமான கேள்விகள் , ஆழமும், விரிவும் இயைந்த அதற்கான பதில்கள் ஆகியவற்றை இந்நேர்காணல் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் சில அறிவுஜீவிகளின் முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்து இதில் இணைத்திருக்கிறேன். அதில் தாரிக் அலி இஸ்லாத்தின் தோற்றம் குறித்து எழுதிய முக்கியமான கட்டுரை ஒன்று இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. இது இத்தொகுப்பிற்கு இன்னும் வலுவூட்டும் முயற்சியாகும். கலாசாரம் குறிப்பிட்ட இடைவெளியில் அரசியல், சமூகத்தோடு இணைந்திருக்கிறது என்பார் எட்வர்ட் செய்த். இதனை உள்வாங்கி முன்னதின் அறிதல் முறையோடு ஓரியண்டலிச அறிவுஜீவிகளின் அறிமுகம் குறித்த இத்தொகுப்பை கொண்டு வந்திருக்கிறேன்.







என் ஆரம்ப கால இலக்கிய மற்றும் தத்துவ தேடல் இடதுசாரி இலக்கிய அமைப்பு ஒன்றின் மூலமாக தான் இருந்தது. இளமை காலத்திற்குரிய அசட்டுத்தனம் மற்றும் இலட்சிய கனவுகளை பெரும் பாரமாக வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகள் அதில் கழித்தேன். அந்த காலங்கள் எனக்கு போதாமையும், வெறுமையும் கொண்டதாக அதே நேரத்தில் மின்னலில் இருந்து கிழிக்கப்படும் கோடாகவும் இருந்தன. அதன் தொடக்க கட்டங்களில் தான் நண்பர்கள் ஹாமீம் முஸ்தபா மற்றும் ஹெச்.ஜி. ரசூல் ஆகியோர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். தமிழில் மார்க்சிய பின்னணியோடு எழுத வந்தவர்களில் பெரும்பாலானோரின் தொடக்க காலம் என்பது இயக்கங்கள் வழி தான் இருந்தது. அவை அனுபவங்களின் கூட்டிணைவாக இருக்கும். செடியொன்றின் உதிர்ந்த கருகாத இலையாக பின்னர் அதிலிருந்து வெளியேறி சுதந்திரமாக இயங்க ஆரம்பித்தேன். ஒரு வேளை நான் புறப்பட்ட புள்ளியும் அதுவாக இருக்கலாம். இயக்க ரீதியான செயல்பாட்டு கால கட்டத்தில் தமிழவன், பேராசிரியர் முத்துமோகன் ஆகியோர் அறிமுகமாயினர். இவர்களில் தமிழவன் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்தார். அவர் என் கிராமத்துக்காரர் என்பதை பின்னர் தான் அறிந்து கொண்டேன். முத்துமோகனுடன் சில தருணங்களில் தத்துவார்த்த உரையாடல் நடத்தியதுண்டு. என் ஆரம்ப கால கட்டுரைகள் திண்ணை இணைய இதழில் வெளிவந்தன. அதன் வழியாக பி.கே சிவக்குமார், அ.முத்துலிங்கம், யமுனா ராஜேந்திரன், பாவண்ணன், சுகுமாரன், ஜமாலன், நாகர்ஜுனன் போன்றோர் அறிமுகமாயினர். இவர்களுடனான என் நட்பு தொடர்ந்த வேளையில் வளைகுடா நகர்வின் சிறிதுகால தொய்வு என்னை மேற்கொண்டு உறவை தொடர முடியாதவனாக மாற்றியது. இணைய எழுத்துகளுக்குள்ள தொடர்ச்சியின்மையும் இதற்கு ஒரு காரணம்.அவர்கள் எல்லோருமே இத்தொகுப்பு வெளிவரும் வேளையில் தவிர்க்க முடியாதவர்கள். குறிப்பாக பாவண்ணன், சுகுமாரன், யமுனா ராஜேந்திரன், ஜமாலன் ஆகியோருக்கு நான் மிக்க நன்றிக்குரியவன். காரணம் என் புலம்பெயர் வாழ்க்கையில் நான் எழுதிய விஷயங்களை அடிக்கடி மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்டவர்கள். ஆரம்ப காலம் முதல் என்னுடன் உரையாடி வரும் நண்பர் என்.டி ராஜ்குமார் முக்கியமானவர். எழுதிய விஷயங்கள் தொகுப்பாக வெளிவர வேண்டும் என்று என்னை வேகப்படுத்தியவர் அவர். மேலும் நண்பர்கள் கியூபர்ட் சதீஷ்(பஹ்ரைன்) இலங்கை கவிஞர் ரிஷான் ஷெரிப் (கத்தார்) , ஹபீப் (ஷார்ஜா), லஷ்மி (உயிர்நிழல், பிரான்சு), கலையரசன் (நெதர்லாந்து) என் செயல்பாட்டை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் என் பால்யகால நண்பர்கள் பிரேம் தாஸ், பிரேம்குமார் (நியூயார்க்), கவிஞர் ஸ்டாலின் பெலிக்ஸ் (டி.சி.எஸ் சென்னை)எபனேசர் (சி.டி.எஸ் குழுமம் சென்னை)சுபாஷ் (டெல்லி பல்கலைகழகம்) ஆகியோர் இந்த ஆக்கத்தோடு அதிகமும் தொடர்புடையவர்கள். இவர்களில் எபனேசர் மற்றும் ஸ்டாலின் பெலிக்ஸ் என் புத்தக புரவலர்கள். மிகுந்த நன்றி வெளிப்பாட்டோடு அவர்களை இங்கு குறிப்பிடுகிறேன். மேலும் கவிஞர்கள் லீனா மணிமேகலை, குட்டிரேவதி, இன்பா சுப்ரமணியன் ஆகியோரும் நன்றிக்குரியவர்கள். மேலும் கல்ப் மாத்யமம் இதழின் நிருபர் மோகன், மலையாள நாவலாசிரியர் றி.டி. ராமகிருஷ்ணன் ,மலையாள நண்பர் பாபு இதிலுள்ள அறிவுஜீவிகள் குறித்த சில அறிமுக கட்டுரைகளை தன் உயிரோசை இணையதளம் மற்றும் உயிர்மை இதழில் வெளியிட்ட அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன், நேர்காணல் மற்றும் மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட புதியகாற்று ஆசிரியர் ஹாமீம் முஸ்தபா, உன்னதம் கௌதமசித்தார்த்தன், கனவு இதழின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன், என் வலைப்பதிவை பின்தொடர்பவர்கள், அதன் உலகளாவிய வாசகர்கள் ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள். இணையதளங்களான திண்ணை, கீற்று, இனியொரு, புகலி ஆகியவையும் மிகுந்த நன்றிக்குரியவை. செடியொன்றின் துளிர்விடும் இலையாக, அதன் அசைவூட்டமாக என்னை உற்சாகப்படுத்தி வரும் என் பிரியமான வாழ்க்கை தோழி ஜாஸ்மின் மிக்க நன்றிக்குரியவர். இத்தொகுப்பை வெளிக்கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆக்கத்தை தொகுப்பாக கொண்டு வரும் நண்பர் அடையாளம் சாதிக் மிகுந்த நன்றிக்குரியவர். என்னை தொடர்ந்து ஆதரித்து வருபவர். இதிலுள்ள அறிவுஜீவிகளின் கோட்பாடுகள் குறித்த பல கட்டுரைகள் இத்தொகுப்பிற்காக எழுதப்பட்டவை. ஆறு ஆண்டுகள் என் புலம் பெயர் வாழ்க்கையின் நெருக்கடியான காலகட்டத்தின் நகர்வில் பல நாட்களின், பல மணி நேரங்களின் உழைப்பு இது. இதனை தொடர்வதற்கான ஊக்கமும், நம்பிக்கையும் வாசகன் இடமிருந்து தான் தொடக்கம் பெறும். அதனை எதிர்பார்த்தே நான் இயங்கி வருகிறேன். இந்த இயக்கம் தொடர்ந்து செல்லும் நிலையில் என் விமர்சன கண்ணோட்ட பரப்பளவு இதிலிருந்து விரிவடையும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன்.....


பதிப்பக முகவரி

Adaiyaalam,Publishing Group

1205/1 Karupur Salai

Puthanatham - 621 310

Trichy Dist, Tamilnadu, India

Tel: +91 4332 273444, Fax: +91 4334 27055

email: info@adaiyaalam.net


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.10:02 சொன்னதை செய்வாரா கலைஞர்..?» *நிழல்களும்-நிஜங்களும்*
'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்கு கேடு' என்று ஒருபுறம் எழுதிவைத்துக்கொண்டு அத்தகைய கேடானதை விற்பதற்கென 'டாஸ்மாக்' நிலையங்களை உருவாக்கி அதில் படித்த பட்டதாரிகளையும் பணியாளர்களாக்கி அரசு கஜானாவை நிறைத்துவருகிறது தமிழக அரசு. அரசின் பட்ஜெட் தேவையை நிறைவேற்றுவதில் மது வியாபாரம் முக்கிய இடத்தில் இருந்து வருகிறது. எனவே தான் பூரண மதுவிலக்கை பற்றி எப்போது கேள்வி எழுப்பினாலும் 'அது சாத்தியமில்லாதது' என்ற ர்ரீதியில்தான் கலைஞரின் பதில் அமைந்திருக்கும். ஆனால் ஆச்சர்யமாக பூரண மதுவிலக்கு குறித்து ஒரு சாதகமான பதிலை முதல்வர் தந்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை மட்டுமல்ல- மதுவிலக்கு கொள்கையை அமுல்படுத்தவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி வருகின்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் முதல்வர்.

முதல்வரின் இந்த செய்தி பூரண மதுவிலக்கை நோக்கி முதல்வர் பயணிப்பதை உறுதிப்படுத்துகிறது. செய்வதைத்தான் சொல்வோம்; சொல்வதைத்தான் செய்வோம் என்ற கொள்கையை கொண்ட முதல்வர், மதுவிலக்கு விசயத்திலும் அதை கடைபிடித்து பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை குடியில் இருந்து மீட்டெடுக்கும் அறிவிப்பை வெளியிட்டால், ஆண்டுகள் கடந்தும் அவர் சாதனை நிலைத்திருக்கும். ஏழைகள் மற்றும் பெண்கள் அவரை என்றென்றும் நன்றியோடு நினைவு கூர்வர்.
சொன்னதை செய்வார் கலைஞர் என்ற நம்பிக்கையோடு அந்த நல்ல செய்திக்காக மக்களோடு காத்திருக்கிறோம் நாமும்.[இறைவன் நாடினால்]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.09:58 "இந்திய பிரட்டன் வர்த்தகம் இரட்டிப்பாகும்"» BBCTamil.com | முகப்பு | Tamil News index
பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, இரு நாட்டு பிரதமர்களுக்கிடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.09:51 கோஹினூர் கோரிக்கை நிராகரிப்பு» BBCTamil.com | முகப்பு | Tamil News index
பிரிட்டிஷ் அரச குடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மறுப்பு
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.09:49 முஹம்மது நஸீம் – சித்தி ஆயிஷா திருமணம்» நீடூர்ஆன்லைன்.காம்
Click here to bookmark this link.08:30 கற்காலம் - நாகூர் ரூமி (பகுதி 1/4)» அமைதி இல்லம்
நாகூர் ரூமி அவர்களை பற்றி தமிழ் எழுத்துலகம் அறியாததல்ல. இந்த விநாடியிலேயே அடுத்த விநாடியை நம் கையில் தந்தவர்கள் இவர்கள். 'இஸ்லாம் - ஒரு எளிய அறிமுகம்' என்று இவர்கள் எழுதிய புத்தகத்தை தொடர்ந்து இவர்களுக்கு கிடைத்த நேசங்கள் நிறையவே உண்டு.

'சொற்களின் சீனப்பெருஞ்சுவர்களை' எல்லாம் இடித்த இவர்கள் 'சொல்லாத சொல்'லே இல்லை என்று 'குட்டியப்பா' மீது ஆணையிட்டு கூறிவிடலாம்.

அனைத்து களத்திலும் எழுத்தின் ஆளுமையை நிரூபித்த இவர் 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்' வாசி.

இத்தகைய ஆற்றல் மிக்க நாகூர் ரூமி அவர்களின் 'கற்காலம்' என் காலத்தில் நான் படிக்க கிடைத்ததற்கும் என் column(தள)த்தில்  வெளியிடுவதற்கும்  பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

****************************************************************
இஸ்லாத்திற்கு எந்த காலத்திலும் உள்ளிருந்தும் சரி, வெளியிலிருந்து சரி, எதிரிகள் இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். உள்ளிருந்தா என்று ஆச்சர்யப்பட வேண்டிய அவசியமில்லை.. அது சில ஆலிம்களையே கூட குறிக்கலாம்.

இன்றைக்கு இஸ்லாத்தில் பல பிரிவுகள் தோன்றியதற்கும் பல பிளவுகள் வேரூன்றியதற்கும் இத்தகைய ஆலிம்களின் சிந்தனையும் ஆய்வுகளுமே பெரும் காரணம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து ஒரு விளக்கம் தோன்றுவதில் கூட என்னை பொறுத்த வரை தவறு கிடையாது. அதை பொதுமக்களிடத்தில் வைக்கும் போது பிளவுகள் ஏற்படும் என்ற பட்சத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றிய அறிஞர்களுக்குள்ளாகவே தனிமையில் விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து அதை மக்களிடத்தில் வைத்தால் என்ன..?

எல்லாத்துக்கும் மேல ஒற்றுமை தான் முக்கியம் என்பதால் தான் இந்த கருத்தை வைக்கிறேன். சரி ஹைர்..

இங்கே விவாதத்திற்குறிய ஒரு நடைமுறையை, அதாவது இஸ்லாமிய ஆலிம்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய நாடுகளில் சில அல்லது பல தண்டனை என்ற பெயரில் செய்ய துணிந்த ஒரு கொடூரத்தை பற்றிய தன் கருத்தை தனது ஆய்வின் முடிவை நாகூர் ரூமி அவர்கள் முன்வைத்தார்கள்.

இதை அப்படியே கையெழுத்து போட்டு ஏற்று கொள்கிறேன் என்று சொன்னவர்களும் உண்டு. இதை ஏற்க முடியாது என்று வீண் வாதம் புரிபவர்களும் உண்டு.

நாகூர் ரூமி அவர்களின் அனுமதியுடன் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன். இதை அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்பது என் ஆசை.

உண்மையின் உண்மையான அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

*******************************************************************

இனி, உங்களோடு நாகூர் ரூமி பேசுகிறார்கள்..

****************************************************************
கற்காலம்


நாகூர் ரூமி

முன்னுரை

தலைவர்கள் கொல்லப்பட்ட நாட்கள், மதக்கலவரம் வெடித்த நாட்கள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நாட்கள், நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்பட்ட நாட்கள் என கறுப்பு நாட்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்ற காலமாகிவிட்டது நமது தற்காலம். இந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக இடம் பிடித்திருப்பது ஒரு கொடூரமான செயல். கல்லால் அடித்து விலை மதிப்பற்ற மனித உயிர்களை வாங்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். அதைச் செய்வது தனி மனிதர்களோ, தீவிரவாதிகளோ, சமூக விரோத சக்திகளோ அல்ல. அரசாங்கங்கள்! ஆம், அதுவும் இஸ்லாம் எனும் அமைதி மார்க்கத்தின் பெயரால்!

கறுப்பு நாட்களின் வரிசையில் ஜூலை 11ம் இப்போது சேர்ந்து விட்டது. காரணம், கடந்த 2001ம் ஆண்டு, இதே தேதியில்தான் மர்யம் அய்யூபி என்ற ஈரானியப் பெண், கூடா உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு, அதற்காக இஸ்லாமிய ஷரியத் சட்ட தண்டனை என்ற பெயரில் கற்களால் அடித்து கொல்லப்பட்டார். அந்த நாளைத்தான், கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிரான சர்வதேச எதிர்ப்பு நாளாக (International Day Against Stoning to Death) மனசாட்சி உள்ள மனிதர்கள் இன்று அனுஷ்டிக்கிறார்கள்.

ஒரு மனிதன் என்ற முறையிலும், ஒரு முஸ்லிம் என்ற முறையிலும், இந்த விஷயம் பற்றி என் கருத்த வெளிப்படையாக முன் வைப்பது எனது கடமை. அதற்கு முன் கல்லால் அடித்துக் கொல்வது என்றால் என்ன என்று கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது.

நீ போய் நேரில் பார்த்திருக்கிறாயா என்று கேட்டால், இல்லை என்பது மட்டுமல்ல, அந்த மாபாதகச் செயலைப் பார்க்கின்ற தைரியம் எனக்கில்லை என்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டதை நாம் அறிவோம். இணையத்தளங்கள் மூலமாக எல்லா விஷயங்களைப் பற்றிய உண்மைகளும் அவற்றுக்கே உரிய காட்சிகள், ஒலிகள், வண்ணங்களுடன் நமது வீட்டுக்குள் வந்து விழுந்துவிடுகின்றன. அப்படித் தெரிந்துகொண்டதுதான்.

சில நாட்களுக்கு முன் திண்ணையில் நண்பர் ஆசாரகீனன் இந்த விஷயம் பற்றி ஒரு கட்டுரை எழுதி, கல்லால் அடித்துக் கொல்வதற்கான கண்டனத்தை நைஜீரிய ஈரான் அரசுகளின் அதிபர்களுக்குத் தெரிவிக்கும்படி ஒரு வேண்டுகோள் வைத்து, அதற்கான ஈ மெயில் முகவரிகளையும் கொடுத்திருந்தார். அதோடு, ஈரானில் நிறைவேற்றப்பட்ட ஒரு தண்டனையின் வீடியோப் பதிவு கிடைக்கும் சுட்டியையும் கொடுத்திருந்தார். அது இதுதான் : www.iran-e-azad.org/stoning/video.html

நான் கடின மனம் கொண்டவன் இல்லையென்றாலும் வேண்டுமென்றே பார்த்தேன். நல்லவேளையாக வீடியோ தெளிவாக இல்லை. ஒரு அனுமானத்தின் பேரிலேயே நடந்தது என்ன என்று புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. என்றாலும் என் இதயம் வேகமாகத் துடிப்பதிலிருந்தும் என் உடல் ஜில்லிடுவதிலிருந்தும் ரொம்ப நேரம் விடுபட முடியவில்லை.

அதை நான் பார்த்ததிலிருந்தும், அதைப்பற்றி படித்ததிலிருந்தும் புரிந்துகொண்டதை உங்கள் முன் வைக்கிறேன். இது ரொம்ப அவசியம் என்றும் நான் கருதுகிறேன்.

கல்லால் அடித்துக் கொல்லுதல் எப்படி நடக்கிறது?

தரையில் ஒரு ஆழமான குழி வெட்டப்படுகிறது. ஒரு 30 வயதுப் பெண் காலிலிருந்து தோள்வரை கட்டப்பட்டவளாக, இறந்தபின் உடலில் போர்த்தப்படும் தையலில்லாத வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டு அந்த குழிக்குள் உயிருடன் இறக்கப்படுகிறாள். அவளுடைய கழுத்தும் தலையும் மட்டும்தான் வெளியில் தெரிகின்றன.

குற்றப்பத்திரிக்கை நீதிபதி(!)யால் வாசிக்கப்படுகிறது. அரபி மொழியில். உத்தரவு கொடுக்கப்பட்டவுடன், அல்லாஹ¤ அக்பர் என்ற கோஷம் கூடி நிற்கும் ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து கிளம்புகிறது. கை முஷ்டி அளவுள்ள கல்லை  நீட்டிக்கொண்டிருக்கும் அப்பெண்ணின் தலையை நோக்கி ஒருவன் வீசுகிறான். டக்கென அந்தக் கல் அவள் தலையில் அடிக்கிறது. வலி பொறுக்க முடியாமல் அவள் அலறுகிறாள். (ஈரானிய கல்லடித்துக் கொல்லும் சட்டத்தின் பிரிவு 104ன் படி, அடிக்கப் பயன்படுத்தப்படும் கற்கள் ரொம்ப பெரிதாக இருக்கக் கூடாது. ஓரிரு அடிகளில் மரணத்தை வரவழைத்துவிடக் கூடாது. ரொம்ப சின்னதாக கூழாங்கற்களைப் போலவும் இருக்கக் கூடாது! அதாவது, உயிர் போவது மட்டும் முக்கியமல்ல, வலியும் வேதனையும் சித்ரவதையும் முழுமையாக உணரப்பட வேண்டும், மெல்லச் சாகவேண்டும்!)

முகத்தின் கீழ்ப்பகுதிவரை ரத்தம் வழிந்தோடி வருகிறது. இன்னொருவன் ஒரு கல்லால் அவள் பொட்டைப் பதம் பார்க்கிறான். அங்கும் ரத்தம். மறுபடியும் அவளின் அலறல். எல்லாருக்கும் அது இலவச வாய்ப்பாகையால், ஒரு இளைஞன் ஒரு கல்லை எடுத்து அடிக்கிறான். ஆனால் அவன் குறி தப்பிவிடுகிறது. ஆனால் இன்னொருவனின் கல் தன் இலக்கை சரியாக அடைந்துவிடுகிறது. அவள் நெற்றி! கருணைக்காக அவள் கதறுகிறாள். இப்போது ரத்தம் நெற்றியிலிருந்து பொங்கி வருகின்றது. கண்கள், மூக்கு, கன்னம், வாய், தரை என.

நிமிஷங்கள் ஊர்ந்து ஒரு மணி நேரமாகிறது. இதற்கிடையில், குறி தவறுதல்கள், இலக்கை கற்கள் அடைவது, அலறல், ரத்தம் -- இந்த வரிசையில் தொடர்ந்து நடக்கிறது.

அவள் மூக்கை ஒரு கல் உடைக்கிறது. இப்போது மூக்கின் உள்ளிருந்தும் ரத்தம் ஓடிவருகிறது. ஆனால் இப்போது அவளுடைய அலறல்கள் முன்னைப்போல பெருங்குரல் கொண்டதாக இல்லை. கொஞ்சம் அடங்கிப் போயிருக்கிறது. அவளுடைய கண்ணீர் கொஞ்சம் ரத்தத்தை அவளுடைய முகத்திலிருந்து கழுவ உதவுகிறது. ரத்தம் ஆங்காங்கே கட்டிக் கட்டி, அவளுடைய பார்வை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. அடுத்த கல்லின் அடியில் கொஞ்சம் முகச்சதை பெயர்ந்து விழுகிறது. அது அவள் விழிக்கோளங்களா?! சரியாகத் தெரியவில்லை.

அவளுடைய முகம் முழுவதையும் ரத்தம் ஆக்கிரமித்துக்கொள்கிறது. இன்னும் அவளிடமிருந்து முனகல்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. கல்லால் அடித்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது அவள் முகமற்றவளாகிவிடுகிறாள். ஒரு மனித முகம் இருந்த இடத்தில் பார்க்கச் சகியாத ஒரு சதைக் கொத்து இருக்கிறது. தலைமுடியைப் போல ஆங்காங்கு முகச் சதைகளும் தலைச்சதையும் பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. கல்லடிப்பு தொடர்கிறது.

கடைசியில் மரணம் அவளை வந்தடைகிறது. ஆனால் அதன் பிறகும் ஒரு சில மணி நேரங்கள் அவள் அங்கேயே விடப்படுகிறாள். கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டால் என்னாகும் என்பதைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வதற்காக!

கடைசியில் அவளுடைய தந்தையோ, உறவினர்களோ அவளை குழியிலிருந்து விடுவித்து, உடம்பை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். (அவள் அடிபட்டுச் சாவதைப் பார்ப்பதற்காக அவர்கள் வற்புறுத்தி அழைத்துவரப்படுகின்றனர்)! தரையில் சிதறிக் கிடக்கும் அந்த மகளின் முகத்துண்டுகளை பொறுக்கிக் கொண்டு, அந்த உடம்பை எடுத்துக்கொண்டு அவர்கள் செல்கின்றனர்.

இந்தப் பெண் உங்களுடைய தாயாக, சகோதரியாக, தோழியாக இருக்கும் பட்சம் உங்களுக்கு எப்படியிருக்கும்?

ஏன் இந்த தண்டனை?

ஈரான், நைஜீரியா, ஆ·ப்கனிஸ்தான், பாகிஸ்தான், சவுதி அரேபியா, சூடான் போன்ற நாடுகளில் பாலியல் குற்றங்களுக்காக, இஸ்லாமிய சட்டம் என்று சொல்லி கல்லால் அடித்துக் கொல்லும் இந்தக் கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது.

என்ன குற்றம்?

- தொடரும்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.08:22 சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐநா» BBCTamil.com | முகப்பு | Tamil News index
சுத்தமான குடிநீரும், முறையான கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:02 ரஷ்யா ஈரானின் எதிரிகளின் கூட்டாளி- அஹமதி நிஜாத்» EAST ADIRAI

டெஹ்ரான்,ஜுலை29:ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்ததேவை ஈரானுடைய எதிரிகளின் 'கூட்டாளி' என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய அணுவாயுதத் திட்டத்திற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலொன்றை ஈரான் கொண்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றுடன் இணைந்து ரஷ்யா, ஈரான் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்தே அஹமதி நிஜாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத இறுதியில் ரஷ்ய ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து ஈரானை நோக்கிய ரஷ்யாவின் நிலைப்பாட்டில் அதிக மாற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் அதிக அழிவுமிக்க அணுகுண்டு தயாரிப்பு முயற்சியில் யுரேனிய செறிவாக்கத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மெத்ததேவ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் தெரிவித்திருந்தார்.

மேலும் ஈரான் தங்களது வர்த்தகப் பங்காளராக இருப்பினும் அணுவாயுத தயாரிப்புக்கான அதன் யுரேனிய செறிவாக்கல் திட்டம் தொடர்பாக தாம் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக மெத்ததேவ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையினால் கொண்டுவரப்பட்ட ஈரானின் அணுவாயு திட்டத்திற்கெதிரான நான்கு கட்ட தடைக்கு ரஷ்யா ஆதரவு வழங்கியதைத் தொடர்ந்து ஈரான்-ரஷ்யா உறவில் முறுகல்நிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.07:02 சங்பரிவாரின் அம்பலமாகும் சூழ்ச்சிகள்!» மெய்யெழுத்து

ஜுலை 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுடில்லியில் உள்ள "ஹெட்லைன்ஸ் டுடே" என்ற தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகத்தின் எதிரில் சங்பரிவாரைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். சில நிமிடங்களில் பல ஆயிரம் தாதாக்கள் இணைந்ததைத் தொடர்ந்து ஆவேசமாக தாக்குதல் தொடங்கியது. முரட்டுத்தனமாக அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்புக் காவலர்கள் தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தனர்.


இத்தகைய சூழ்நிலையை எதிர்பாத்திருந்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் காவல்துறைக்கும் முறையாக அறிவித்திருந்தனர். இப்படி பெருமளவில் தாக்குதல் நடத்த முயல்வார்கள் என எதிர்பார்க்காததால் காவல்துறையினரும் குறைந்தளவிலேயே வந்திருந்தனர். கலவரக்காரர்கள் அலுவலகம் அமைந்திருந்த தெருவில் ஏற்படுத்திய களேபரத்தின் காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் அரண்டு,மிரண்டு ஓடவேண்டியதாயிற்று. பாதுகாப்பு துறையினர் லிப்ட்களை இயங்கவிடாமல் செய்துவிட்டதாலும்,காவல்துறையினர் தடுத்ததாலும் நான்காவது மாடியிலிருந்த தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகத்தினுள் கலவரக்காரர்களால் நுழைய இயலவில்லை. இருப்பினும் முகப்பு அலுவலத்தின் கண்ணாடிக் கதவுகளை அடித்து நொறுக்கினர்.15 நிமிடத்திற்கு மேல் நடைப்பெற்ற இந்த அநாகரிகமான தாக்குதலுக்குப் பின் டெல்லி காவல்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு என்ன காரணம்?



காவிக்கூட்டத்திற்கும் அதன் தீவிரவாத அமைப்புகளுக்குமிடையே உள்ள கள்ள தொடர்பினை அந்தத் தொலைக்காட்சி சேனல் வெளிப்படுத்தியது. நாட்டின் உத்தமபுத்திரர்களாக, சாமியார்களாக கபட நாடகமாடிய கயவர்களின் போலி வேஷத்தைக் கலைத்து உண்மையை உலகிற்கு அறிவித்தது.


தேசப்பிதா மகாத்மா காந்தியின் படுகொலையில் துவங்கி,தென்காசியில் வெள்ளோட்டம் பார்த்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வழியாக மலேகான் சென்று அஜ்மீரை அடைந்த, இந்து தீவிரவாத அமைப்புகளின் முகத்திரையைக் கிழித்தெறிந்த நல்ல காரியத்தை செய்ததே தொலைக்காட்சி நிறுவனம் செய்த பாவம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கும் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்பினைத் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சம் போட்டுக் காட்டியது தான் அது செய்த குற்றம்.


காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிளவு படுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை எட்டிப்பிடிக்க விழையும் எத்தர்களின் இரகசியக் கூட்டம். அதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கின் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ் குமார் பங்கேற்றுள்ள விடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. நியாய உணர்வு படைத்த பெருமக்களை இச்செய்திகள் அதிரவைத்துள்ளன. ஏனென்றால் இந்தரேஷ்குமார் ஆர்.எஸ்.எஸ். ஸின் சாதாரண தொண்டரல்ல;அதன் மூத்த தலைவர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி, இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர்.கஷ்மீரின் அமர்னாத் யாத்திரைக்கு இடம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நடைப்பெற்ற வன்செயல்களில் திரைமறைவு இயக்குநராக இருந்தவர் இவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் மத்திய செயற்குழுவில் முக்கிய உறுப்பினர். 2006ம் ஆண்டு வரை "சம்பார்க் பிரச்சாரக்".


முஸ்லிம்கள் கூடக்கூடிய இடங்களில் குண்டு வைத்து குழப்பம் விளைவிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அதற்கான வெடிமருந்துப்பொருட்களைச் சேகரிக்கும் முறைகள் பற்றியும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பரப்பப்பட்டக் காட்சிகள் இந்தரேஷ் குமாருக்கும் சங்பரிவாரின் தீவிரவாத அமைப்பிற்குமுள்ள இணக்கத்தை உறுதி செய்துள்ளது.


நாட்டின் முக்கிய எதிர்கட்சியான பா.ஜ.க. வை தன் கைப்பாவையாக ஆட்டிவைக்கும் ஆற்றல் படைத்தது ஆர்.எஸ்.எஸ். என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.


திடுக்கிட வைக்கும் மற்றொரு வெளிப்பாடு என்னவென்றால், பா.ஜ.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இக்கூட்டத்தில் பங்கேற்றதும் இக்கொலைக்காரக் கும்பலைச் சேர்ந்த டெல்லி மருத்துவர் ஒருவர் 2006ம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடைப்பெற்ற, விழா ஒன்றிற்கு வருகை தந்த இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி அவர்களைக் கொலை செய்ய முயன்றதுமாகும். சரியான சந்தர்ப்பம் கிடைக்காதக் காரணத்தால், அது முடியாமல் போனதாகவும் அவர் கூறியுள்ள செய்தி ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ளது.


அதுமட்டுமல்ல, புனேயைச் சேர்ந்த இரசாயனத்துறைப் பேராசிரியர் ஒருவர் சங்பரிவார் அமைப்பினைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளித்ததும், டெல்லியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஆர்.பி.சிங் என்பவர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பயன்படுத்த ஆயுதங்கள் வாங்கியதும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைத் தலைவர்கள் தங்களுக்கு இந்திய திருநாட்டின் அரசியல்சாசனத்தில் நம்பிக்கை இல்லை என்று கூடிப்பேசி விவாதித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன
நாட்டின் பல பகுதிகளிலும் நடந்து வரும் நிகழ்வுகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிச்சயமாகத் தீவிரவாத அமைப்பு தான் என்பதையும், அது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு தேசவிரோத இயக்கமே என்பதையும் நிரூபித்து வருகின்றன. இந்நிலையில் அந்த அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என ஏன் பிரகடனப்படுத்தவில்லை?. அதைத் தடை செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?


இந்த ஒளி,ஒலிப்பதிவுகள் அடங்கிய இரகசிய ஆவணங்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தன?.

மாலேகான் குண்டு வெடிப்பில் பிரகியா தாக்கூருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயானந்த பாண்டே பயன்படுத்திய "லாப்டாப்" கருவியிலிருந்து இவை எடுக்கப்பட்டுள்ளன. தடயவியல் வல்லுநர்களால் பரிசோதிக்கப்பட்ட இப்பதிவுகள் நீதிமன்றத்தில் சாட்சிகளாக சமர்பிக்கப்பட உள்ளன. இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த செய்தியாளர் அஸ்கிஷ் கேத்தன். அவர் இச்செய்திகளை வெளியிடக் கூடாது என பல அதிகார மையங்களிலிருந்து பயமுறுத்தல்கள் வந்ததாகக் கூறுகிறார். அனைத்தையும் மீறி துணிவுடன் செயல்பட்ட அவருக்கு நம் பாராட்டுதல்களையும் நன்றியையும் உரித்தாக்க வேண்டும்.


இதேபோன்று கோலாப்பூரில் "ஜி" தொலைக்காட்சி நிலையத்தை வன்செயல் கும்பலொன்று தாக்கியுள்ளது. காரணம் கர்நாடகா ரக்ஷனா வேதிகா இயக்கத்தின் தலைவர் செய்யது மன்சூர் அவர்கள் அங்கு வந்திருந்ததே காரணம்.


சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்தே தீரும். என்பது அருள்மறையின் அறிவுரை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். போலி சாமியார்களின் வேஷம் கலைந்து வருவதைப் போல், போலி காவிகளின் வேஷமும் விரைவில் கலைந்தே தீரும்.

இந்துத்துவ பயங்கரவாதமும் அதனை மறைக்கும் இந்திய ஊடகங்களும்,அரசியல், நீதித்துறை, காவல்துறை போன்றவை இவர்களுக்கு பல்லக்கு தூக்குவதையும், இதனால் ஒரு சமூகம் குற்றவாளியென தனிமைப்பட்ட்டு நிற்க வைத்திருப்பதையும் இந்துத்துவத்தின் பயங்கரவாத நிஜ முகம் உங்களுக்கு முழுவதுமாக தெரிய... இங்கே அழுத்தி காணலாம்.
மேலும் அறிய ...

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:07 அம்மா உன்னை நேசிக்கிறேன்....» NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்

இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..
இன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..? ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு ( Father is a Faith but Mother is a Fact ) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம்.
நமது தாய் சொன்னால்தான் தந்தை யார்ரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்க்கையாகவே ஒரு பினைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது..
எத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக் கனைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்ட்டு எனக்கு விடையளிப்பாள், அப்போது அவளிம் ஸ்பரிசம் எனக்கு விளங்கவில்லை.
கடையில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம் பிடிப்பேன், தன்க்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு தொகையில் எங்கள் குடுப்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக செலவளிப்பாள் எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருல் கிடைத்த மகிழ்ச்சித்தான் என்னை சுற்றிக்கொண்டதே தவிற என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை..
தென்மேற்க்கு பருவ மழையும், தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில் என் தாயோடு பயனித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும் தருவாயில் நான் நனைத்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னை காத்து நின்று எனக்கு வரவேண்டிய ஜீரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில். தப்பித்த ஆனந்தம்தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்த கருணையின் வடிவம் தெரியவில்லை.. .
ஆண்டுகள் கழிந்தன நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது. நாடோடிப்போல ஊர் சுற்றுவது. இரவில் ஊர் சுற்றிவிட்டு இரவு நடுநிசியில் தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காக கண்னுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின் ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத்தான் வந்தததே தவிர என்னை ஒரு போர் வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை..
வந்தது என் கல்லூரி நாட்கள் ஊரைவிட்டு, என் குடும்பத்தை பிரிய நேறும் வேளை. இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் அன்னையின் கண்கள் குழமாகியது அதைக்கூட புரிந்துக் கொள்ள முடியா வண்ணம் கல்லூரிக் கனவுகள் என் கண்னை மறைத்துவிட்டது.
கல்லூரியில் படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்... " தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே.... சாப்டியா..? உடம்பு நல்லா இருக்காமா...? ரோட்ல நறையா வண்டிகள் வரும் பாத்துப் போடி ராஜா.... சிலவுக்கு பணம் இருக்கா...??? " இப்படி கணிவின் முகவரியாய் என் தாய்.. நானோ.. " இருக்கேம்மா..... எரிச்சல் பட்டுக் கொண்டு..... சரி.. சரி.. பணம் மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க... அப்புறம் பேசுறேன்..." என்று வெடுகெண்டு போனை கட் செய்யும்போது, பணத்தின் வருகைக்காகத்தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை.. .
ஆண்டுகள் கடந்தது... கல்லூரியையும் முடித்தேன்... எல்லோருக்கும் இடமலித்த வளைகுடா.. என்னையும் ஆரத்தழுவி அனைத்தது.... அப்போதுதான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை வெளிக்கொனர்ந்தது.. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை பாசத்துடன் ஊட்டிவிட்ட உணவின் சுவைத் தெரிந்தது.. .
கடும் குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போதுதான் என்னை போர்த்தி விட்டு என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவனைப்பின் ஆழம் தெரிந்தது... இப்படி பல பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவனைப்பை இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்....
என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்திய என் இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலைப்பேசி அழைப்பு.. அதே நேசிப்பின் வார்த்தைகள் அவளிடத்தில்... நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத் வெளிக்கொணற " அம்மா உன்னை நேசிக்கிறேன் " என்று சொல்ல வார்த்தை வராமல்... கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அனைக்கிறேன் தொலைப்பேசியை....
லால் தமிழன்source: தமிழ்சாரல்.காம்
http://nidur.info/

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.06:03 கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக டியூஷன் செண்டர்» கோட்டகுப்பம் செய்திகள்
கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக டியூஷன் செண்டர் கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவறை இலவசமாக டியூஷன் எடுக்கப்படுகிறது நமது ஊர் கோட்டகுப்பத்தில், இன்ஷா அல்லாஹ் இன்னும் இந்த டியூஷன் செண்டரை விரிவுபடுத்த முயற்சி செய்கிறோம், மேலே வளர தாங்களின் ஆதரவை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கிறோம் .
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:59 அல் ஜாமி அத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா» கோட்டகுப்பம் செய்திகள்
அல் ஜாமி அத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கடந்த 25.07.2010 அன்று அல் ஜாமி அத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியின் போது பட்டம் பெற்ற மாணவர் மாணவிகளுக்கு கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:33 பாபரி மஸ்ஜித் வழக்கில் செப் 15 க்குப் பிறகு தீர்ப்பு: லக்னோ நீதிமன்றம் அறிவிப்பு.» www.thiruvai.com
பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அனைத்து விசாரணைகளும் வழக்கறிஞர்களின் விவாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு செப்டம்பர் 15க்கு பிறகு எந்த தேதியிலும் வழங்கப்படலாம் என்ற அறிவிப்புடன் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவில் 1960 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.1949ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில் பாபரி மஸ்ஜிதிற்குள் சில பயங்கரவாதிகள் புகுந்து ராமர் லட்சுமணர் சீதை மற்றும் அனுமாரின் சிலைகளை வைத்து விட்டனர்.அப்போது அந்த மாவட்ட ஆட்சியர் பாபரி மஸ்ஜிதை பூட்டுவதற்கு உத்தரவிட்டார்.

இரண்டு பூஜாரிகள் மட்டும் பள்ளிவாசலுக்குள் சென்று சட்டவிரோதமாக வைக்கப்பட்டடிருக்கும் சிலைகளுக்கு பூஜை நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கு கீழ்நிலை நீதிமன்றங்களிலிருந்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் வரை சென்று நிலுவையில் இருந்தது.இச்சூழலில் 1986 பிப்ரவரி 2ம் நாள் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் உமேசு சந்திர பாண்டே என்பவர் தொடர்ந்த வழக்கில் பாபரி மஸ்ஜித் பூட்டை உடைத்து ராம பக்தர்கள் உள்ளே செல்வதற்கு மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே உத்தரவிட்டார். 
இதனைத் தொடர்ந்து பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் சங் பரிவார் அமைப்புகள் முனைந்தன. இறுதியில் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு தொடர்ந்து லக்னோ பிரிவில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வழக்கறிஞர்களை நியமித்து நடத்தி வந்தது. அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பிரிவில் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் முன்பு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் எஸ்.யூ.கான், சுதீர் அகர்வால் மற்றும் தரம்வீர் சர்மா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தார்கள்.
 சுன்னத்தி மத்திய வக்ப் வாரியம் எதிர் விசாரத் சர்மா என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் இறுதி விசாரணை ஜுலை 26 அன்று காலை தொடங்கி இரவு 7 மணி வரை நீடித்தது. நீதிபதிகள் விசாரணைக்கு சமர்பிக்கப்பட்ட சில வீடியோ காட்சிகளையும் பார்வையிட்டனர். இரு தரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இறுதியில் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் செப்டம்பர் 15க்கு பிறகு எந்த நாளிலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.இந்த வழக்கில் ஹிந்துக்கள் சார்பாக 54 சாட்சிகளும் முஸ்லிம்கள் சார்பாக 33 சாட்சிகளும் நீதிமன்றம் முன்பு முன்னிலையாகி சாட்சியம் கூறினர். முஸ்லிம்கள் தரப்பு சாட்சிகளில் பெருமாபாலனவர்கள் இந்துக்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜஃபரியாப் ஜீலானி செய்தியாளர்களிடம் பேசிய போது நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கு முடிவிற்கு வந்துள்ளது எனக்கு திருப்தி அளிக்கின்றது. எங்கள் தரப்பு வாதம் மிக வலுவாக உள்ளது. பாபரி மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதே என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.

Click here to bookmark this link.
Click here to bookmark this link.05:33 இந்திய தேர்தல் ஆணையராக முதன் முதலில் ஒரு முஸ்லிம்!» www.thiruvai.com
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நவீன் சாவ்லா, நாளை (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தேர்தல் ஆணையராக உள்ள குரேஷி, தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வெளியிட்டார்.மத்திய தலைமை தேர்தல் ஆணையராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் பதவியில் குரேஷி இரண்டு ஆண்டுகள் இருப்பார்.1971ம் ஆண்டு ஐஏஎஸ் ஹரியாணா கேடர் அதிகாரியான குரேஷி மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
மத்திய அரசில் தேசிய எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் டைரக்டர் ஜெனரல், தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர், மத்திய விளையாட்டுத்துறைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 2006ம் ஆண்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:33 `ஐ.ஆர்.சி.டி.சி.' இணைய தளம் மூலம் ரெயில் டிக்கெட் விற்பதை நிறுத்த முடிவு» www.thiruvai.com
ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் மூலம் ரெயில் டிக்கெட் விற்பது நிறுத்தப்படும். இனி ரெயில்வே இணைய தளம் மூலம் இ-டிக்கெட் விற்பனை செய்ய ரெயில்வே இலாகா திட்டமிட்டு உள்ளது. ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு வேண்டிய உணவு மற்றும் சிற்றுண்டியை வழங்கும் பொறுப்பை, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் மேற்கொண்டு இருந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 450 கோடி மதிப்புள்ள உணவு ரெயில் பயணிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது. உணவின் தரத்திலும், வினியோகத்திலும் பல குறைபாடுகள் கூறப்பட்டதால், சமீபத்தில் இந்த பொறுப்பை, ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து ரெயில்வே துறை எடுத்துக்கொண்டது.
பின்னர் இது வேறு ஒரு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணைய தளம் மூலம் ரெயில்வே டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. 30 சதவீத புக்கிங் இதன் மூலம் நடந்து நடக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 122 கோடி இந்த நிறுவனத்துக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தற்போது ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் இ-டிக்கெட் பணி நடந்து வருகிறது. அதிகாலையில் இணையதளம் திறக்கப்பட்டதும், ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணைய தளத்தில் இ-டிக்கெட் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது என்ற புகார் வந்துள்ளது.
 ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதள ஏஜெண்டுகள் தட்கல் புக்கிங் செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்பட்டது. எனவே இ-டிக்கெட் பணியை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து ரெயில்வே துறையே எடுத்துக்கொள்ளலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செப்டம்பர் மாத இறுதிக்குள் அமல் படுத்துவது பற்றி யோசித்து வருகிறோம். ரெயில்வே துறையின் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பிரிவு, இ-டிக்கெட் விற்பனையை மேற்கொள்ள தயாராக இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் போது இதன் பணி www.indianrailways.gov.inஎன்ற இணையதளத்தில் செயல்படும். 
இந்த இணைய தளத்தில் பயண டிக்கெட் நிலை, சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள், தங்கும் இடங்கள் உள்பட அனைத்து தகவல்களும் பெறலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். ரெயில் டிக்கெட் பதிவை ரெயில்வே துறை தனது இணைய தளம் மூலம் ஏற்றுக்கொண்டால், ஐ.ஆர்.சி.டி.சி.க்கு பெரிய அடியாக கருதப்படும். இதை ஈடுகட்டும் விதமாக அந்த நிறுவனம் புதிய சுற்றுலா திட்டங்களை திருவிழா காலங்களில் அறிவிக்க திட்டமிட்டு உள்ளது.

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:33 சோராபுதீன் வழக்கில் நரேந்திர மோடியையும் விசாரிக்குமா சிபிஐ?» EAST ADIRAI
அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் தற்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. இதனால் மோடியையும் சிபிஐ விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சோராபுதீன் வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கையில், நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. சோராபுதீன் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையில், அமீத் ஷாவுக்கு சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கொலை சம்பவம் தொடர்பாக உள்ள தொடர்புகள் குறித்து நரேந்திர மோடிக்குத் தெரியுமா என்பது விசாரிக்கப்பட வேண்டும். சோராபுதீன் கொலை மற்றும் அதன் பின்னர் நடந்து வந்த வழக்கு விவகாரத்தில் அமீத் ஷாவின் தலையீடுகுறித்து மோடிக்குத் தெரியுமா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமீத் ஷாவைக் காக்க நரேந்திர மோடி முயன்றாரா என்பதும் அறியப்பட வேண்டிய ஒன்றாக உள்ளதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

இதனால் நரேந்திர மோடியை விசாரிக்க சிபிஐ கோர்ட் அனுமதியைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமீத் ஷா, கடந்த வாரம் வரை குஜராத் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை இவரது கட்டு்பபாட்டில்தான் இருந்து வந்தது.

அவரை சிறையில் வைத்து 3 சுற்று விசாரணைய முடித்துள்ளது சிபிஐ. ஆனால் அவர் அளித்த பதில்கள் எதுவுமே திருப்தி தரவில்லை என்று சிபிஐ தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 37 கேள்விகள் அமீத் ஷாவிடம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மோடியின் பெயர் இதில் இடம் பெற்றிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோராபுதீன் வழக்கு தொடர்பாக அமீத் ஷா எடுத்த முடிவுகள் தெரியுமா, அல்லது தெரிந்தும் அதை மறைக்கும் வகையில் நடந்து கொண்டாரா என்பதுதான் தற்போது சிபிஐ மோடியிடமிருந்து எதிர்பார்க்கும் பதிலாக எழுந்துள்ளது.

சோராபுதீனைக் கொல்ல 3 அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஷா

இதற்கிடையே, சோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் தீர்த்துக் கட்டுமாறு 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமீத் ஷா உத்தரவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

அமித் ஷா மீது கடந்த 23-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் சோராபுதீனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சோராபுதீன் வர்த்தகர்களையும் மற்றவர்களையும் மிரட்டி வந்தார். இதனால் அவர் மீது அவர்களுக்கு பயம் இருந்தது. பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலும் கிரானைட் தொழில் அதிபர்களை மிரட்டி வந்தார்.

இதையடுத்து சோராபுதீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், அபய் சுடாஸ்மா ஆகியோரிடம் அமித் ஷா ஒப்படைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை பகிரங்கமாக வெளியிட்டதற்கு பாஜக எம்.பியும், வக்கீலுமான ராம்ஜேட்மலானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே மீடியாக்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதான் சி.பி.ஐ. யின் வழக்கம். தினமும் குற்றப்பத்திரிகை தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அமித் ஷாவுக்கு ஒரு பேப்பர் கூட வழங்கப்படவில்லை என்றார்.

குஜராத் மாஜி டிஜிபிக்கு சிபிஐ சம்மன்

இதற்கிடையே, சோராபுதீன் கொலை வழக்கில், மாஜி குஜராத் டிஜிபி பி.சி.பாண்டேவுக்கு சிபஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் ஆஜராகுமாறு பாண்டே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை மாநில சிஐடி போலீஸார் விசாரித்த சமயத்தில் டிஜிபியாக இருந்தவர் பாண்டே. சோராபுதீன் வழக்கில் குழப்பம் விளைவிக்க சில அதிகாரிகள் முயன்றது குறித்து புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக அமீன் உள்ளிட்ட அதிகாரிகளும் சிக்கியுள்ளனர். எனவே இதுகுறித்து பாண்டேவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பாண்டேவை சிபிஐ விசாரிக்கவுள்ளது இது முதல் முறையாகும்.

முன்னாள் விசாரணை அதிகாரிக்கும் சம்மன்

இதேபோல சோராபுதீன் வழக்கை முதலில் விசாரித்து வந்த குழுவின் தலைவரான கீதா ஜோஹ்ரிக்கும் சிபிஐ நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இவர்தான் சோராபுதீன் வழக்கை முதலில் விசாரித்து வந்த அதிகாரி ஆவார். ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் விசாரணைக்கு வருமாறு கீதா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

தற்போது கீதா ராஜ்கோட் நகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

ஏற்கனவே கீதாவை 2 முறை சிபிஐ விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கீதா தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார். ஆகஸ்ட்6ம் தேதிதான் அவர் திரும்பி வருகிறார்.

சோராபுதீன் வழக்கில் அமீத் ஷா, ஐபிஎஸ் அதிகாரி அபய் சுடாஸ்மா, சோராபுதீன் மனைவி கெளசர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அர்ஹாம் பண்ணையின் உரிமையாளர் ராஜேந்திர ஜிரவாலா ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:33 சொராப்தீன் போலி என்கவுண்டர் - சிஐடி பிரிவு தலைவருக்கு சிபிஐ சம்மன்!» EAST ADIRAI
சொராப்தீன் போலி என்கவுண்டர் குறித்த வழக்கை முன்னர் விசாரணை செய்த குஜராத் மாநில சிஐடி பிரிவு தலைவராக இருந்த கீதா ஜோஹ்ரி சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் மாநில காவல்துறை அதிகாரிகளான டி.ஜி. வன்ஜரா, ராஜகுமார் பாண்டியன் மற்றும் தினேஷ் ஆகியோருக்கு எதிராக முக்கிய சாட்சியங்களைத் திரட்டியவர் கீதா ஜோஹ்ரி ஆவார். ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி சிபிஐயின் விசாரணைக்காக ஆஜராகுமாறு ஜோஹ்ரிக்கு சிபிஐ வியாழக் கிழமையன்று சம்மன் அனுப்பியுள்ளது.

மாநில சிஐடி பிரிவு தலைவராக இருந் ஜோஹ்ரி தற்போது ராஜ்கோட் நகர காவல்துறை ஆணையராக உள்ளார். சொராப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருமுறை சிபிஐ முன் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

சொராப்தீன் போலி என்கவுண்டர் தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குஜராத் மாநில டிஜிபியாக இருந்த பி.சி. பாண்டே ஆகஸ்டு 11ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை மூன்று முறை சிபிஐயால் அமித்ஷா விசாரிக்கப்பட்டுள்ளார். இதுவரை எதையுமே ஒப்புக்கொள்ளாத அமித்ஷா, "எனக்கு எதுவுமே நினைவில்லை" என்று திரும்பத் திரும்ப கூறுவதாக சிபிஐ கூறுகிறது. அத்துடன், அமித்ஷா விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறுகிறது.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:31 ஹிஜாப் தரும் சுதந்திரம்!» முதுவை ஹிதாயத்
ஹிஜாப் தரும் சுதந்திரம்!


என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?



நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை



அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை

ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.05:31 நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம் - J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி» முதுவை ஹிதாயத்
நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=325

புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம். அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.

இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே ! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர் களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59) மேலும் கூறுகிறான். நபியே ! முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக ! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்தும் கொள்ள வேண்டும் மேலும் தங்கள் அலங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக்கூடியதைத் தவிர (வேரெதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும். மேலும் அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். (அந்நூர் 31) மேலும் கூறுகிறான் (நபியின் மனைவியர்களே) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப்போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (அல் அஹ்ஜாப் 33) மேலும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒரு பொருளைக் கேட்பதாகயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். (அல் அஹ்ஜாப் 53) என்று விரிவாக நம்மிடம் பேசுகிறான்.

நிச்சயமாக இஸ்லாமியப் பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமான கடமைகளில் உள்ள ஒன்றுதான் பர்தா அணிந்து கொள்வது. இஸ்லாம் மட்டுமே ஒரு குடும்பம் வீழ்ந்து சின்னாபின்னப் பட்டு சிதைந்து போகாமல் அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. இயற்கைச் சூழ்நிலையை கேடு படுத்திடாமல் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், சமுதாயம் தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குணங்கள் என்ற உறுதிவாய்ந்த சுவரை எழுப்பியுள்ளது. காரணம் இஸ்லாம், குழப்பத்தின் பால் இழுத்துச் செல்லக்கூடியவற்றை தடுப்பதற்காக பர்தா என்ற திரையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும்போது தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவுகிறது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப்படுத்து வதற்காகவும், இழிவிலிருந்து அவளின் தன்மானத்தை தற்காத்துக் கொள்ளவும், மேலும் குழப்பவாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியைவிட்டும் பெண்களை தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியம், விலைமதிப்பு, மானம் மரியாதையை அறியாதவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதே சமயம் விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்குமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்க மாக்கியுள்ளான். என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. இதை விட்டு விட்டு இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் நீங்கி அந்நிய ஆடவருடன் கலந்துரையாடுவதை தடை செய்திருக்கின்றது என்று தவறாக விளங்கி தேவையில்லாத அறிவற்ற பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி வந்தனர் வருகின்றனர். இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் தூரப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை பரித்து ஆணாதிக்கத்திற்கு கீழ்படிந்துதான் வாழவேண்டும் என்றெல்லாம் சிலர் பர்தா முறையை தவறாக விளங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யார் யாரெல்லாம் அப்பிரச்சாரங்களை செய்து வந்தார்களோ அவர்களே பர்தா முறையை வரவேற்று பெண்களுக்கு பாதுகாப்பு பர்தா என்ற திரைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அனைத்துப் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் மற்றும் கண்ணியமான நடைமுறைகளை பாதுகாப்பதற்கும், குழப்பங்களையும் தவறான எண்ணங்களையும் தடுத்து நிறுத்துவதற்கும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே சரியான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது. நம்மைச் சீர்திருத்திக் கொள்வதுடன் சமூகத்தையும் சீர்திருத்தச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அவர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. காரணம் குழப்பம் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இந்தக் காலத்தை விட குழப்பத்தின் பயம் வேறு எந்தக்காலத்தில் அதிகமாக இருக்கமுடியும் நல்லவர்கள் இறையச்சமுடையவர்களை விட பாவிகள் நிறைந்து போய் விட்டனர். கடைவீதிகளிலும் பல்வேறு இடங்களில் நின்றுகொண்டு தன் தவறான விஷப்பார்வையால் தன் கையில் வைத்திருக்கும் மொபைலின் மூலம் (செல்போன்) அன்றாட சமையல் தேவைக்காக காய்கறி மற்றும் மீன் இறைச்சி வாங்குவதற்காக பஜாருக்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை மற்றவர்களுக்கும் S.M.S.மூலமாகவும் E.மெயில், இண்டர்நெட் என அனுப்பி தான் ஒரு பகுத்தறிவு படைத்த மனிதன் என்பதையே மறந்து ஷைத்தானுக்கு வழிபட்டு மிருகத்தனமான செயல்களிலே ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்விஷயத்தில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கையை தருகின்றான். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப்பற்றி நீங்கல் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்பகரா 168 மற்றும் 169) என்று இறைவன் கூறுகிறான்.

இவ்வாறான தவறான எண்ணம் கொண்ட விஷமிகளிடமிருந்து சமுதாயப் பெண்கள் பாதுகாப்புப் பெற்று கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பர்தாவை இஸ்லாம் மார்க்க மாக்கியுள்ளது.

எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும். இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம் இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.

இறைவன் அந் நஹ்ல் 128 வது வசனத்தில் எவர்கள் இறையச்சம் கொள்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கூறுகிறான். எனவே அல்லாஹ் எனக்கும் உலக மக்கள் அனைவர்களுக்கும் ஒழுக்கமுள்ள நல்ல சிந்தனைகளை வழங்கி இறைவனுக்கும் இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் வழிபட்டு நடக்கும் பாக்கியத்தை வழங்கு வானாக ஆமீன் வஸ்ஸலாம்

மெளலவி

J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி

050 547 15 43

Sharjah




--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:32 பாக் விமான விபத்தில் 152 பேர் பலி» www.thiruvai.com
கராச்சியிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் விமானத்தில் 146 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.இஸ்லாமாபாத்துக்கு வடக்கே இருக்கும் ஒரு மலைப் பகுதியில் இந்த விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.ஏர் புளூ எனும் தனியார் நிறுவன விமானமே மரகலா மலைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. கராச்சியில் உள்ளூர் நேரப்படி காலை 07.50 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் இஸ்லாமாபாதில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் நொறுங்கி விழுந்துள்ளது.மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நொறுங்கி விழுந்து எரிந்து போன இந்த ஏ-321 ரக விமானத்திலிருந்து உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 

விபத்து ஏற்பட்ட சமயம் அந்த மலைப் பகுதியில் அடர்ந்த மூடுபனிப் படலம் நிலவியுள்ளது.விமானத்தின் பறக்கும் குறிப்புகள் மற்றும் ஒலி சமிஞ்கைகள் அடங்கிய கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதல் விபத்துக்கான காரணங்கள் குறித்து ஏதாவது ஆதாரங்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வாளர்கள் பார்த்து வருகின்றனர்.நொறுங்கி விழுந்த விமானத்தின் பகுதிகள் அந்த மலைப் பகுதியில் இருக்கும் மரங்களில் சிக்கி தொங்கிக் கொண்டிருப்பதை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன.

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:32 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26.44 தான்!!» www.thiruvai.com
ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 தான் என்று பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் கூறினார்.மாநிலங்களவையில் அவர் பேசுகையில்,ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 51.45க்கு விற்கப்படுகிறது. இதில் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 காசுகள் மட்டுமே. ஆனால், அதன் மீதான வரி ரூ.25.01 ஆகும்.அதேபோல ஒரு லிட்டர் டீசல் ரூ. 37.62க்கு விற்கப்படுகிறது. டீசலின் அடக்க விலை ரூ. 26.63 மட்டுமே. இதற்கு விதிக்கப்படும் வரி ரூ. 10.99 ஆகும்.இறக்குமதி வரி, உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவற்றை மத்திய அரசும், மாநில அரசுகள் பிற வரிகளையும் விதிக்கின்றன என்றார். 
விலை உயர்வு நியாயமானதே-தியோரா:இந் நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெயின் விலையை குறைந்த அளவே மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு நியாயமாக நடந்து கொண்டுள்ளது.மக்களின் நலனில் அரசுக்கு அக்கறையில்லாமல் இல்லை. கிரீத் பாரிக் கமிட்டி மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 100 ரூபாயும் உயர்த்த பரிந்துரைத்தது.ஆனால் மண்ணெண்ணெயின் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு 35 ரூபாய் மட்டுமே உயர்த்தியுள்ளோம்.பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
அரசு தொடர்ந்து மானியம் அளித்த போதும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சுமை குறையவில்லை.எண்ணெய் நிறுவனங்களின் இக்கட்டான நிலைமையை கருத்தில் கொண்டுதான் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலையுயர்வை அடுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நிதிசுமை ஓரளவுக்கு குறைந்துள்ளது.பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி அதிகமாக உள்ளன. சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீது 33 சதவீதம் வரை விற்பனை வரி விதிக்கப்படுகிறது. இதைக் குறைக்க வேண்டும் என்றார்

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:32 PFI அலுவலக சோதனை அராஜகத்தின் உச்ச கட்டம் !» தமிழ் முஸ்லிம் தளம்
பாம்  தேடும்  போலிஸ்  (கையில  எதுவும்  கொண்டு  வரலையோ  )
இப்பி பக்கீர்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி கேள்வி  பதில் தயாரித்த பேராசிரியர் ஒருவர் வெட்டப்பட்டார். இதற்கு காரணம் PFI (POPULAR FRONT OF INDIA)தான் என்று செய்தி பரப்பிய ஆதிக்க கும்பல் இந்த சம்பவத்தை முஸ்­லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் வேலையை செய்து வருகிறது. ஊடகங்கள் மூலமாக PFI க்கு எதிரான அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. PFI ன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், அலுவலகங்களில் சோதனை இடப்பட்டு வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக PFI மற்றும் அதன் அரசியல் கட்சியான SDPI மாணவர் அமைப்பான CAMPUS FRONT OF INDIA ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சோதனை இடப்பட்டிருக்கின்றன. இது பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்தது ஒரு அசாதாரண நிகழ்வு. நம் நாட்டில் இது போன்று பல்வேறு நிகழ்வுகள் இதற்கு முன் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன. இந்த சம்பவத்துக்கு அனைத்து   முஸ்­லிம் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் இதைக் காரணம் காட்டி முஸ்­லிம் சமுதாய அமைப்பின் தலைமையகத்தை சோதனையிட்டது கடும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். ஆயிரக்கணக்கான முஸ்­லிம்களை கொன்றொழித்து குண்டு வெடிப்புகளையும் நடத்தி வருவதாக கூறப்படும் R.S.S,V.H.P போன்ற சங்பரிவார அமைப்புகளின் கிளை அலுவலகங்களில் கூட உள்ளே நுழையாத காவல்துறை முஸ்­லிம் அமைப்புகளின் மாநில அலுவலகங்களில் நுழைந்து சோதனையிட்டது தவறான முன்னுதாரணம். சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளின் அரசு காவல்துறையை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது.

ஏற்கனவே லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக சித்தரித்து பாஜகவோடு இணைந்து பீதி கிளப்பிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டி வருகின்றனர்.

SDPI போன்ற பதிவு பெற்ற அரசியல் கட்சியின் தலைமையகத்தை சோதனையிட்டது முஸ்­லிம்களின் அரசியல் எழுச்சியை கம்யூனிஸ்டுகள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

மேலும் எரியும் நெருப்பில் என்னை ஊற்றும் விதமாக கேரள மார்க்சிஸ்ட் முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடப்பதாகவும்  இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.


அரசின் உயர்மட்ட பதவியில் இருக்கும் அச்சுதானந்தன் இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பூகுஞ்சு, "முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான கருத்துக்களை கூறி,மாநிலத்தின் மத மற்றும் கலாச்சார இணக்கத்தை தகர்க்க கேரள முதலமைச்சர் முயற்சிக்கிறார்." என்றார்.

மேலும் தனது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறினார்.மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் கருத்து சொன்னதற்காக இ.பி.கோ 153(A) பிரிவின் கீழ் அவர்மேல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் வாக்குகளை இழந்து    துடைத்தெறியப் பட்டு வரும் கம்யூனிஸ்டுகள் இது போன்ற நிகழ்வுகளால் கேரளாவிலும் துடைத்தெறியப் படுவது உறுதி.


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.04:27 பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி» BBCTamil.com | முகப்பு | Tamil News index
லண்டனில் உண்ணாவிரதம் இருந்தபோது இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.03:02 மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி லாரி மோதி மரணம்» கூத்தாநல்லூர் முஸ்லிம்கள்
கோவை,ஜுலை28:மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி முஹம்மது மீரான்(27), நேற்று இரவு 11:40 மணியளவில் லாரி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.(இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்).

இவர் கடந்த பல வருடங்களாக சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார்.

சம்பவ தினத்தன்று அடிக்கடி விபத்து ஏற்படக்கூடிய வளைவான குறுகிய சாலையில் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை விபத்துகள் ஏற்படாவண்ணம் சீராக்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் வளைவில் வேகமாக வந்த லாரி இவர் மேல் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

இறக்கும் பொழுதும் சமூகப்பணியினை மேற்கொண்டிருந்த இந்த சகோதரனின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவரது ஆத்மாவை பொருந்திக் கொள்வானாக!

அவருடன் அருகில் இருந்த மற்று மூன்று சகோதரர்களில் சுபைர் என்பவர் காலில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் இரண்டு சகோதரர்கள் லேசான காயகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வெளிவந்தனர்.
ஷஹீதான மீரான் அவர்களின் ஜனாஷா இந்திய நேரப்படி இன்று(28/7/2010) மதியம் 2:30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

Koothanallur Muslims
Popular Front Of India, Tamil Nadu

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.02:58 ஜன்னலோரத்தில் காகம்.......!» NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்
மாலை நேரம்...ஆதவன் தன் வான் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க நிலவைத் தேடிக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து தன் பேரன், பேத்தியின் வருகைக்காக கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்த பெரியவரின் முகத்தில் காலம் தன் கோடுகளை அழகாக வரைந்திருந்தது.  70 வயதின் முதிர்ச்சியை வெளிக்காட்டும் தனது வெளுத்த வெண் தாடியை வருடிக்கொண்டிருந்த அவரின் முகத்தை, ஜன்னல் அருகே வந்தமர்ந்த காகம் தன் தலையை சாய்த்துப் பார்த்தது. ஏதோ மனதில் பளிச்சென்று ஞாபகம் வர, புன்னகை பூத்தார் பெரியவர்.
வெளியில் கார் வந்து நிற்கும் "க்ரீச்" சத்தம்.  உயர்பட்டம் பெற்று அதிகாரியாக நல்ல அலுவலில் உள்ள அவர் மகன் அவரின் பேரனையும் பேத்தியையும் காரிலிருந்து இறக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
"அலுவலகத்திலிருந்து வரும் வழியிலேயே பசங்களை கூட்டிட்டு வந்துட்டேன் 'ப்பா", என்றவாறு டையை கழட்டியபடியே அருகில் வந்து அமர்ந்தான்.
பெரியவர் கேட்டார்: "ஏம்பா இந்த ஜன்னல்ல இருக்கே, இது என்ன?"
ஜன்னலின் வெளியே பார்வையை செலுத்திய மகன், நாடி தளர்ந்துவிட்ட தன் முதிர்தந்தையை கேள்விக்குறியோடு பார்த்துச் சொன்னான், "இது காகம்!"
சில நிமிடங்கள் கழிந்தவுடன் தந்தை கையைக் காட்டி மீண்டும் மகனிடம் கேட்டார், "என்ன இது?"
மகன் கூறினான், "அப்பா, நான் இப்போதுதானே கூறினேன், இது காகம் என்று!"
சிறிது நேரம் கழிந்தபிறகு மறுபடியும் தந்தை மகன் பக்கம் திரும்பி கேட்டார், "ஏம்ப்பா இது என்ன?"
ஒரு வித்தியாசமான ஜந்துவைப் பார்ப்பதுபோல் தனது தந்தையைப் பார்த்த மகன், தனது குரலை உயர்த்தினான் எரிச்சலுடன். "இது காகமப்பா, காகம், காகம்!"

மீண்டும் சற்றுநேரம் கழிந்தபின் அமைதியாக தந்தை மகனிடம் கேட்டார் நான்காம் முறையாக, "இது என்ன?".
தனது இருக்கையை விட்டு சடாரென்று எழுந்த மகன் உரத்த குரலில், "கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே? இது காகம் என்று எத்தனை முறை சொல்வது?. உங்களுக்கு மண்டையில் ஏறவில்லையா? அல்லது காது முற்றிலும் பழுதாகிவிட்டதா?" என்று கத்திவிட்டு வெடுக்கென்று எழுந்து உள்ளறைக்கு சென்றான்.


மனம் வெதும்பிப் போய் மெதுவாகத் தன் இருக்கையை விட்டு மெதுவாக எழுந்த பெரியவர், அருகில் உள்ள அவரது அறைக்குள் நடந்து சென்று தனது சிறிய இரும்புப் பெட்டியை திறந்து, பழுப்பு நிறமாகி மிகவும் பழையதாகிப் போயிருந்த அவரது டைரியை எடுத்து நடுங்கிய விரல்களால் திறந்து படிக்க ஆரம்பித்தார்.
கோபம் தணியாமல் அவர் அறைக்குள் நுழைந்த மகன், தந்தை கையில் டைரியுடன் நிற்பதை பார்த்து அருகில் சென்றான். அவர் கையில் இருந்த டைரியின் திறந்திருந்த பக்கத்தை புருவத்தை உயர்த்தியவாறு எட்டி வாசிக்கத் தொடங்கினான்.
இன்று: மூன்று வயதான என் சின்னஞ்சிறு மகன் என் மடியில் அமர்ந்து ஜன்னலோரம் வந்தமர்ந்த காகத்தை வியப்புடன் பார்த்தான். ஆச்சரியம் மேலிட்ட அந்த அழகிய கண்களை நான் ரசித்து ஆனந்தப்பட்டேன். அந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே 23 தடவை என்மகன் என்னிடம் "தன் எதிரில் உள்ளது என்ன?" என்று கேட்டான். நானும் 23 தடவை பொறுமையாக அது காகம் என்று சொன்னேன். இறுதியில் என் செல்லமகன் முகத்தில் தெரிந்த திருப்தி கலந்த சந்தோஷத்தைப் பார்த்து அவனை ஆரத்தழுவி முத்தமிட்டேன். அவன் மழலைக் குரலில் அத்தனை முறை என்னிடம் கேட்டும் எனக்கு சிறிதும் சலிப்பு ஏற்படவில்லை. மாறாக கேட்க கேட்க அன்பு அதிகரித்துக்கொண்டே போனது.
தான் சிறுவயதில் தந்தையிடம் இதே கேள்வியை 23 தடவைகள் என்ன இது என்று கேட்டும் எரிச்சலடையாமல் 23 தடவையும் பொறுமையாக பதில் கூறி தன்னை சந்தோஷப்படுத்தி அதில் ஆனந்தம் அடைந்தமும் அடைந்த தந்தையிடம், அவர் நான்கு முறை ஒரே கேள்வியை கேட்டுவிட்டார் என்ற காரணத்திற்காக எடுத்தெறிந்து பேசியதை எண்ணி வெட்கி தலைகுனிந்தான் மகன்.
"அது காக்காடா செல்லம்", மனைவி வாண்டு மகளிடம் சொல்லிக்கொண்டிருப்பது சன்னமாக அவன் காதில் கேட்டது.
---------------------------------
சிந்தனை:

பெற்றோர்கள் முதிர்ந்த வயதை அடையும்போது பாலகர்களுக்கு உரிய நிலையை அடைகிறார்கள் என்று உளவியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அறியாமையினாலும் தலைமுறை இடவெளியினாலும் அவர்கள் செய்யும் சில செயல்களை விமர்சித்து, அவமதித்து அவர்களை ஒரு சுமையாகக் கருதுவதோ அவர்களிடம் எரிச்சல் அடைந்து நடப்பதோ எவ்விதத்தில் நியாயம்?
அவர்கள் இன்று இருக்கும் நிலையை விட மிகவும் மோசமான நிலையில், நம் உடலின் இயற்கை உபாதைகள் வெளியாவதைக் கூட நாம் அறியாதிருக்கும் அறிவற்ற பருவத்தில், நம்மிடம் எவ்வளவு கனிவுடனும் அன்புடனும் நடந்து கொண்டனர்? நமக்காக பெற்றோர் பசி, தூக்கம், தேவைகளை புறந்தள்ளிவிட்டு, நம்முடைய தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தனர். எவ்வளவு இன்னல், இடற்பாடுகளை சுமந்து இன்று சமூகம் மதிக்கும் நன்மதிப்பு பெற்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்தனர் என்பதை அடிக்கடி இல்லை என்றாலும் சில சமயங்களிலாவது சிந்தித்துப் பார்த்தல் அவசியம்.
ஒவ்வொருவம் தனது சிறு பருவத்தில் தன் பெற்றோர் தன்னை அரவணைத்து வளர்த்ததை மனதில் கொண்டு, அவர்களின் செயல்பாடுகளை கண்டு சினந்து கொள்ளாமல் இன்முகத்துடன் ஆறுதல் தரும் அழகிய வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். தன்மையாகவும், அவர்களுக்குக் கீழ்படிந்தும் நடக்க வேண்டும்.
http://www.satyamargam.com/507

"என்னுடைய பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதையே நான் விரும்புகின்றேன். அவர்கள் மனம் புண்படும்படியான சொல்லையோ செயலையோ என் வாழ்நாளில் செய்ய மாட்டேன்" என்று உறுதிபூண்டு அதன் படி நடக்க முயற்சிப்போம்.
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான் அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல் குர் ஆன் 17:23-24)

மொழியாக்கம்: அபூ ஸாலிஹா
Source : http://www.satyamargam.com/507ஜன்னலோரத்தில் காகம்.......!

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:02 முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவின் வழியாக வழங்க திட்டம்» கூத்தாநல்லூர்
புதுடெல்லி,ஜுலை29:முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவின் வழியாக வழங்க அரசு தீவிரமாக கருதி உள்ளது என சிறுபான்மை நல வாரியத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

"நாங்கள் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். காங்கிரஸ் அதன் செயல் திட்டத்தில் இதை நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது. நான் இதற்காக தொடர்ந்து வலயுறுத்தி வருகிறேன். காங்கிரசின் தலைமை இதை செயல்படுத்தும் அதில் சிறிதளவேனும் சந்தேகம் இல்லை." இவ்வாறு PTI க்கு கொடுத்த ஒரு பேட்டியல் அவர் கூறினார்.

காங்கிரஸ் அரசு ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கையின் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டுப் பரிந்துரையை செயல்படுத்துமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்; "ரங்கநாத மிஸ்ரா கமிசன் அறிக்கை சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் பார்லிமென்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு 10 சதவிகிதமும் பிற பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு 5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
மேலும் இந்த கமிசன் சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உள்ளது.

மண்டல் கமிசன் அறிக்கையில் கூறியுள்ளவாறு பிற்ப்ப்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 8.4 சதவிகிதம் சிறுபான்மையினர் விரிவாக்கத்திற்காக உள்ளது. ஓபிசி பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள மொத்த 27 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் 8.4 சதவிகிதம் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதில் 6 சதவிகிதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்காக கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

மிஸ்ரா கமிசன் 15 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் இல்லை என்றால் 27 சதவிகிதம் ஓபிசி யிலிருந்து பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

இதில் இரண்டாவதாக உள்ளதை நாங்கள் தேர்வு செய்துள்ளோம் இது ரங்கநாத மிஸ்ரா கமிசன் அறிக்கையில் முஸ்லிம்களின் பின்தங்கிய நிலையை கருத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது." என்றார். மேலும் தான் தனிப்பட்ட முறையில் இதில் ஈடுபாட்டோடு செயல்படுவதாகும் அவர் கூறினார்

கடந்த மே மாதம் முஸ்லிம் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 6 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு அதன் பங்கீடு மற்றும் வரையறுப்பது சம்பந்தமாக சில விசயங்களை காங்கிரஸ் தெரிந்துள்ளது.

தமிழ்நாடு 3.5 சதவிகிதம் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம்களுக்குப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகிதத்தில் இருந்து வழங்கி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி புரியும் ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி இருந்தது பின்னர் இது உச்சநீதி மன்றத்தின் மூலம் திரும்பப் பெறப்பட்டது.

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:02 போஸ்னியா 'ஸ்ரெப்ரெனிக்கா' இனப்படுகொலை: 15 வது வருட நினைவு தினம்» கூத்தாநல்லூர்
போஸ்னியா ஸ்ரெப்ரெனிக்கா முஸ்லிம்கள் இனப்படுகொலை நடந்து
15 வருடம் முடிந்ததையடுத்து போஸ்னியாவில் கடந்த ஜூலை 15 அன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலை போஸ்னியா முஸ்லிம்கள் இனப்படுகொலையாகும்.

ஏறத்தாழ 8000 போஸ்னிய முஸ்லிம்கள் செர்பியர்களால் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

ஸ்ரெப்ரெனிக்காவிலிருந்து 6 கி.மீ அருகில் உள்ள போடோகேரி என்ற கிராமத்தில் நடைப்பெற்ற நினைவு தின நிகழ்சிகளில் 60,000 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 775 பேரின் உடல்கள், இதற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட 3,749 பேரின் உடல்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் ஆதரவாளர்கள் அடக்கஸ்தலத்தில் குழுமி இறந்தவர்களுக்காக கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர்.

ஐக்கிய நாடுகளின் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த முஸ்லிம்கள் பகுதிகளில் செர்பிய இராணுவத்தினர் நுழைந்து இந்த இனப்படுகொலையை நடத்தினர்.

நகர்புற முஸ்லிம் ஆண்களும்,சிறுவர்களும் மலைப்பகுதிகளில் தப்பி ஓடி ஒழிந்தனர். ஆனாலும், அவர்களை செர்பிய இராணுவத்தினர் தேடிக் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர். இறந்தவர்களின் உடல்களை பெரிய குழிகளில் போட்டு ஒன்றாக புதைத்தனர். இந்த மிகப் பெரிய படுகொலையை மூடி மறைக்கும் முயற்சியாக கூட்டாக புதைக்கப்பட்ட உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் 70 க்கும் மேற்பட்ட வெவ்வேறான இடங்களில் புதைத்தனர்.

இனப்படுகொலை குற்றச்சாட்டு
இந்தக் கூட்டுப் படுகொலையை ஐக்கிய நாடுகளின் போர்கால
குற்ற நீதிமன்றமும் உலக நீதிமன்றமும் இனப்படுகொலை என முடிவு செய்துள்ளது. யுகோஸ்லாவியாவின் இருண்ட நாட்களாக இந்நிகழ்வு நினைவு கூறப்படுகிறது.

இந்த இனப்படுகொலை சம்பவத்தில் இழந்த இரண்டு தலைமுறை ஆண்கள் மற்றும் சிறுவர்களை இழந்து தவிக்கும் சோகத்திலிருந்து மீள கஷ்டப்படும் போராடும் மக்களது ஒரு உணர்ச்சிப் பூர்வமான நிகழ்ச்சியாக இருந்தது ஞயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரெப்ரெனிக்கா நினைவு நிகழ்ச்சி.

கதீஜா மேச்டோவிக் என்ற 68 வயது நிறைந்த பெண்மணி, தன் கணவன் மற்றும் இரண்டு மகன்களின் உடல்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடக்கம் செய்தார். "அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். இவ்வளவு கொடூரமான படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்று என் நம்பிக்கையும் இறந்து விட்டது." என அவர் கூறினார்.

மேலும் "என்னுடைய மகன்கள் மட்டும் கொல்லப்படவில்லை , இதைப் போல் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்த பகுதியில் முஸ்லிம்களே வாழ கூடாது அல்லது இல்லாமல் ஆக்கவேண்டும் என்பதை உறுதி படுத்துவதாக இருந்தது. என்னைப் போன்ற ஒரு நிலை உலகில் வேறு எந்த தாய்க்கும் நிகழக் கூடாது என பிரார்த்தனை செய்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

கிட்டத்தட்ட இறந்தவர்களில் 6500 பேர்களின் உடல்கள் கண்டறியப் பட்டுள்ளது, இருந்தாலும் கண்டுபிடிக்கப்படாத நபர்களின் உடல்களின் உறவினர்களோ, நகரை சுற்றியுள்ள அடர்த்தியான காட்டுப் பகுதிகளில் மேலும் உடல்கள் கிடைக்கலாம் என நம்புகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் செர்பியாவின் பிரதமர் போரிஸ் டாடிக் கலந்து கொண்ட முக்கியமான் நபர்களில் முதல் நபராக இருந்தார்.

நட்புணர்வு மற்றும் அமைதியை உண்டாக்கும் விதமாக இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

மேலும் டாடிக் கூறும்போது; "இதில் பங்கு கொள்வதன் மூலம் நாட்டு மக்களிடையே நட்புணர்விக்கான பாலத்தை உருவாக முடியும்" என தான் நம்புவதாக அவர் கூறினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலர் செர்பியாவின் பிரதமரை பேச விடாமல் வழி மறித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜிமாளுடீன் லாடிக் என்ற முஸ்லிம் அரசியல் தலைவர் அல்-ஜசீராவிடம் கூறுகையில் "போஸ்னியாவில் இனப்படுகொலை சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லாத செர்பியத் தலைவர்கள் இருக்கும் நிலையில் டாடிக் உளப் பூர்வமாக இணக்கம் ஏற்ப்படுத்த விரும்புகிறார்" என கூறினார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டு மறுப்பு
செர்பிய தேசியவாத அரசியல் தலைவர்களால் வழி நடத்தப்படும் செர்பியா,இந்த இனப்படுகொலை கொடூரத்தின் அளவினை பல வ்ருடங்களாக மறுத்து வருகிறது. இந்த இனப்படுகொலை சம்பவம் மிகைப்படுத்திக் காட்டப்படுவது தங்கள் நாட்டிற்கு எதிராக உலக நாடுகள் செய்யும் அரசியல் சதி என்று நம்புகின்றனர்.

ஆனால் மார்ச் மாதம் செர்பிய நாடாளுமன்றம் இந்த இனப்படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இறந்தவர்கள் மற்றும் அவர்களும் குடும்பதினர்களிடம் மன்னிப்பு கேட்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஜெனரல் ராட்கோ மலாடிக் இந்த இனப்படுகொலைக்கு சூத்திரதாரியகவும்,முக்கியமான காரணகர்தாவாகவும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளான். இவன் இன்னும் செர்பியாவில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக நம்பபடுகிறது. செர்பிய மக்கள் இவனை ஒரு ஹீரோ போன்று காண்கின்றனர்.

மற்றொரு குற்றவாளியான ராடோவன் கராட்சிட் 2008ம் ஆண்டு பெல்கிராத் என்ற இடத்தில கைது செய்யப்பட்டான். தற்போது இனப்படுகொலை, போர்க்குற்றம் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றம் ஆகிய வழக்குகளில் குற்றம் சாடடப்பட்டு இண்டர்நேஷனல் கிரிமினல் ட்ரிபியூனல் ஃபார் தி ஃபார்மர் யுகோஸ்லாவிய (ICTY ) நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வருகிறான். அவன் தோற்றுவித்த அரசியல் கட்சியான செர்பிய டெமோக்ரடிக் பார்ட்டி அவனை கவுரவிக்கும் விதமாக பதக்கம் கொடுக்க முடிவு செய்துள்ளது.

மேலும் அக்கட்சி கடந்த கால நிகழ்சிகளுக்காக பற்றி தான் வெட்கப் படவில்லை என்றும் கூறுகிறது.

இந்த இனப்படுகொலையை அனுமதித்தற்காக ஐக்கிய நாடுகளின் அமைதிக் காப்பாளர்கள், பெரிய அளவில் தீவிரமான கண்டனத்திற்கு உள்ளானர்.

டச்சுப் படைகள் 'ஸ்ரெப்ரெனிக்கா' முஸ்லிம்கள் பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தது ஆனால் அதற்கான தயாரிப்புகள் இயந்திரங்கள் மற்றும் எந்த விதமான கட்டளைகளும் இல்லை.

போஸ்னிய முஸ்லிம்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று செர்பிய இராணுவ வீரர்கள் உறுதி அளித்த பின்புதான் போஸ்னிய முஸ்லிம் ஆண்களையும் சிறுவர்களையும் அழைத்துச் செல்ல அனுமதித்ததாக டச்சுப் படைகள் தெரிவித்துள்ளது.

source:Aljazeera


add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:02 ஈரானில் குழந்தைகளுக்கு 18 வயது வரை ஊக்குவிப்புத் தொகை வழங்க முடிவு» கூத்தாநல்லூர்
டெஹ்ரான்,ஜுலை29:தனது நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக இனிமேல் பிறக்கவுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் 18 வயதுவரை குறிப்பிட்டதொரு ஊக்குவிப்பு தொகையை வழங்கும் திட்டத்தை ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் நேற்று தொடங்கி வைத்தார்.

அத்திட்டத்தின் கீழ் இனிமேல் பிறக்கவுள்ள ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் வங்கிக்கணக்கொன்றை ஆரம்பித்து அப்பிள்ளையின் 18 வயது வரை பணம் டெபாசிட் செய்யப்படும். ஆரம்ப தொகையாக 950 அமெரிக்க டாலர்களும் பின்னர் வருடந்தோரும் 95 அமெரிக்க டாலர்களும் டெபாசிட் செய்யப்படும் எனவும் அஹமதி நிஜாத் தெரிவித்தார்.

மேலும் இச்சட்டத்தின்படி அப்பிள்ளை தனது 20 வது வயதில் வங்கி கணக்கிலுள்ள பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் தற்போதைய மக்கள் தொகை 75 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது

add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:01 தனது நிறையை விட இரு மடங்கு நிறையை தூக்கி» உலக நிகழ்வுகள் ஒரு பார்வை - எம்.ரிஷான் ஷெரீப் பதிவுகள்
தனது நிறையை விட இரு மடங்கிலும் அதிகமான நிறையைத் தூக்கி உலகின் மிகவும் பலசாலிச் சிறுவன் என்ற சாதனையை கைல் கேன் என்ற 12 வயது பிரித்தானிய சிறுவன் நிலைநாட்டியுள்ளான்.5 அடி, 7 அங்குல உயரம் 147 இறாத்தல் நிறையுடைய கைல் கேன் என்ற இந்த சிறுவன், தனது வயதையொத்த ஏனைய சிறுவர்களுடன் ஒப்பிடுகையில் கூடிய உயரத்தையும் அளவையும் கொண்டுள்ளான்.

இந்த சிறுவன் 308 இறாத்தல் (140 கிலோகிராம்) நிறையுடைய பாரத்தைத் தூக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளான்.

இந்த சிறுவன் 4 வயதாக இருக்கும் போது குத்துச் சண்டை கற்பதற்கு ஆரம்பித்து 9 ஆவது வயதில் கறுப்பு பட்டியொன்றை வென்றெடுத்தான்.

அதன்பின் உதைபந்தாட்டம் விளையாடுவதில் மும்முரமாக ஈடுபட்ட இந்த சிறுவன், தனது 10 ஆவது வயது முதற்கொண்டு பாரந் தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான்.

ஒலிம்பிக் விளையாட்டில் பாரந் தூக்கும் போட்டியில் பிரித்தானியாவுக்காக தங்கப் பதக்கமொன்றை வெல்வதே தனது இலட்சியம் என கைல் கேன் கூறினான்.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.01:01 அதிரையின் ஆட்டோ விளம்பரங்கள் - ஓர் அலசல்» அதிரை எக்ஸ்பிரஸ்
எண்பதுகளில் சஊதியின் தலைநகர் ரியாதில் இருந்தபோது, நாங்கள் அமைத்த ஒரு சிறு அமைப்பான அதிரை நலச் சங்கத்திற்கு ஊரிலிருந்து விண்ணப்பம் ஒன்று வந்தது - கீழத் தெருவைச் சேர்ந்த அஹ்மது முஹிதீன் என்ற இளங்குருத்துக்குக் கண் பார்வை இழந்து போய்க் கொண்டிருப்பதாக. கமால் ஹுசைன், ஷரபுத்தீன் ஆகியோரின் தங்குமிடத்தில் ஒன்றுகூடினோம். அன்றையச் சூழ்நிலையில் பத்தாயிரம் சேர்ந்தது. உடனே அதை அனுப்பி, மேல்மருத்துவம்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.

புதன் 28 ஜூலை, 2010

Click here to bookmark this link.23:32 47 மில்லியன் புத்தகங்களை ஒரே இடத்தில் தேடலாம்!» மேலப்பாளையம் பதிவுகள்
புத்தகங்களை இணையத்தில் தேடுவது எளிதான காரியம் என்றாலும் இங்கே ஒன்றல்ல இரண்டல்ல 47 மில்லியன் புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம். எந்த புத்தகம் வேண்டும் , புத்தகத்தைப் பற்றிய விபரம் மட்டும் போதும் இனி அந்த புத்தகம் சில நிமிடங்களில் உங்கள் கையில். இணையதள முகவரி: http://www.theguidedb.com/ Source
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.23:30 எங்க ஊரு கலாட்டா» அமைதி இல்லம்
"கீர.. கீர.." தலை தெறிக்கிற வெயில்ல தொண்டை தண்ணி வத்த கத்தி கத்தி பொழப்பை நடத்த நடையை கட்டி கொண்டிருந்தார் அந்த பெண்மணி.

ஒரு வீட்டு வாசலில் நின்று "ஏம்மா.. கீரை வேணுமாம்மா.. " என்று பல முறை கேட்டு கத்தியிருக்கிறார்.

வாசல் கதவு திறந்திருந்தது...
உள்ளேயிருந்து 'வேணும்' 'வேணாம்னு' ஒரு பதிலும் இல்லை..

சிறிது நேரம் நின்று பார்த்தார்..
'இது சரிப்பட்டு வராது' என்று நடையை கட்ட ஆரம்பித்து விட்டார்..

தெரு முனைக்கு வந்து விட்டார்.. அவர் நின்று கேட்ட அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த அந்த துப்பட்டி 'இந்தாம்மா.. கீரை காரம்மா..' என்று கத்தி கூப்பிடவே..

தெரு முனை திரும்பிய அவர் திரும்பி ஓட்ட நடையுடன் கீரை கூடையை சுமந்த படி வந்து வீட்டு வாசலில் கூடையை இறக்க,

அந்த வீட்டு பெண்மணி, 'செத்த மிந்தி வந்தப்போ குளிச்சிட்டு இந்தேன்.. கேட்டது காதுல வுழுந்துச்சு.. ஒடனே ஓடி வந்து சொல்ல முடியல.. மன்னிச்சுக்கம்மா.. கீர இப்போ வாணா(வேண்டாம்)ன்னு சொல்ல தான் கூப்ட்டேன்..'

- அந்த பெண்மணி நல்லவரா? கெட்டவரா?

******************************************************************

முடி திருத்தும் கடையில்..

"எவ்வளவோ கூப்ட்டும் நீங்க கடைசி வரைக்கும் செம்மொழி மாநாட்டுக்கு போவேயில்லை.."

"அப்துல் கலாத்த கூப்டலய்ல.. அதனால தான் நா போவல.."

*****************************************************************
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.23:29 ஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்» அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's blog
கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்டர்நெட் செயல்படும் வேகத்தினை 100 முதல் 1,000 மடங்கு வரை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான வழி முறை, இன்டர்நெட் போக்குவரத்தினைக் கையாளும் ரௌட்டர்களில் தான் ஏற்படுத்தப்படும் என்று இந்த ஆய்வை வழி நடத்தும் வின்சென்ட் சான் கூறியுள்ளார். ரௌட்டர்களில் [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.23:01 கபருஸ்தானும்,பெண்கள் மார்கெட்டும்» அதிரை POST
பெண்களுக்கென்று தனி மார்க்கெட் ஒன்று ஊரின் நடுவே இருப்பது மிக அவசியம்.ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்களே மார்கெட்  சென்று மீன்,காய்கறி,இறைச்சி போன்றவைகளை வாங்கும் சூழ்நிலை இருப்பதால்,நடுத்தெரு போன்ற தெருவில் மார்கெட் இருந்தால் நல்லது.

ஏனெனில் தற்போது பெண்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டு மெயின் ரோட்டில் உள்ள (கரையூர் தெரு)மார்கெட் சென்று பொருட்களை வாங்கிவருகின்றனர்.இதனால் நம் பெண்களின் கண்ணியம் பாதிக்கப்படுகிறது.எனவே இதற்கு நம் ஊர் மக்கள் சிந்திப்பார்களா?

மேலும் தற்போது ஷாதுலியா பள்ளி இருந்த இடத்தில் கபறுஸ்தான் வர ஏற்பாடு நடக்கிறது.அந்த இடத்தை பெண்கள் மார்கெட்டுக்கு என ஒதுக்கிவிட்டு,சி எம் பி லைன் பக்கம் (மரைக்காயர் குளம்,காட்டுக்குளம்)கபறுஸ்தான் வர ஏற்பாடு பண்ணினால் அந்த பகுதி மக்களின் சிரமம் குறையும்.ஏனெனில் அந்த பக்கம் ஊர் பெரிதாகிக் கொண்டு போவதால் - மைய்யித்தை கொண்டுவந்து அடக்க சிரமமாக உள்ளது.

மேலும் தற்போதுள்ள தக்வா பள்ளி கபருஸ்தானை செம்மைப்படுத்தி,ஒழுங்குபடுத்தினால் இன்னும் பல மையத்துகளை அடக்க முடியும்,இன்ஷா அல்லாஹ்.

எனவே,சி எம் பி லைனில் கபறுஸ்தான் கொண்டு வரவும்,சாதுலியா பள்ளியை பெண்கள் மார்கெட்டாக ஏற்படுத்தவும் முயற்சிக்கலாமே?

கருத்து : உ.மு.அப்துல் ஜப்பார்,(நடுத்தெரு)
நியூ யார்க்


இதன் சாதக - பாதக அம்சங்களை சகோதரர்கள் பின்னூட்டமிட்டால் இன்ஷா அல்லாஹ் அதன் மூலம் ஒரு நல்ல யோசனை-தீர்வு பிறக்க வாய்ப்புண்டு.
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.22:30 கபருஸ்தானும்,பெண்கள் மார்கெட்டும்» அதிரை எக்ஸ்பிரஸ்
பெண்களுக்கென்று தனி மார்க்கெட் ஒன்று ஊரின் நடுவே இருப்பது மிக அவசியம்.ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்களே மார்கெட்  சென்று மீன்,காய்கறி,இறைச்சி போன்றவைகளை வாங்கும் சூழ்நிலை இருப்பதால்,நடுத்தெரு போன்ற தெருவில் மார்கெட் இருந்தால் நல்லது. ஏனெனில் தற்போது பெண்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டு மெயின் ரோட்டில் உள்ள (கரையூர் தெரு)மார்கெட் சென்று பொருட்களை வாங்கிவருகின்றனர்.இதனால் நம் பெண்களின் கண்ணியம்
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
Click here to bookmark this link.19:58 வேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா? – டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எஸ்(ஓ)» அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's blog
[ கிராமப்புற சூழ்நிலையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் போதிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதுகலை பட்டங்களை பெற்றுக்கொண்டு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வரவில்லை என்றால் வாய்ப்பு கதவு மூடப்படும் என்பதினை மாணவர்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும். உலகம் விசாலமானது. நீங்கள் திறமை சாலியாக இருந்தால் உலகம் உங்கள் காலடியில். வசதி படைத்த முஸ்லிம் தனவந்தர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் ஜகாத், சதக்கா போன்ற தான [...]
add to del.icio.us add to del.icio.us. look up in del.icio.us.
406 பதிவுகளிலிருந்து, புதிய இடுகைகள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை திரட்டப்படுகின்றன! | உங்கள் பதிவுகளை சேர்க்க